நிறப்பிரிகை
செயல் - அதுவே சிறந்த சொல்
இதை வாசியுங்கள்
(Move to ...)
Home
▼
Wednesday, February 6, 2013
பல்லாங்குழி மனசு
எரியும் வீடணைக்க
சல்லடையில் நீர் முகந்தோம்
பிரிவை மறப்பதற்கு
பேசுகிறோம் நாள்தோறும்
பனம்பழத்தின் வாசம்
பறவைக்குத் தெரிவதில்லை
சிறுமியாய் வந்து
சீக்கிரமே பொறுக்கிப் போ
ஒன்றைத் துடைத்து
இன்னொன்றை அள்ளுகிற
பல்லாங்குழியாக
பரிதவிக்கும் என் மனசு
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment