Thursday, May 17, 2012

என்.சி.இ.ஆர்.டி புத்தகம் இஸ்லாமியர்களைப் புண்படுத்தும் கார்ட்டூனைக்கொண்டிருக்கவில்லையா?




தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் அரசியலமைப்புச் சட்டம் குறித்த என் சி இ ஆர் டி புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் அம்பேத்கர் கார்ட்டூன் மட்டுமின்றி வேறு பல கார்ட்டூன்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஐரோப்பிய யூனியன் மற்றும் ஈராக் ஆகியவற்றின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் ஏற்பட்ட கருத்து வேற்றுமைகள் இரு வேறு கார்ட்டூன்கள் மூலம் விளக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை இங்கே தந்திருக்கிறேன். ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் தமது கருத்து வேறுபாடுகளை மறைத்துக்கொண்டு மிகவும் நாசூக்காக போஸ் கொடுப்பதுபோல ஒரு கார்ட்டூனில் உள்ளது.ஆனால் ஈராக்கிலோ முஸ்லீம்களின் பல்வேறு பிரிவினர் மிகவும் மூர்க்கமாகத் தமக்குள் சண்டையிட்டுக்கொள்வதாக ஒரு கார்ட்டூன் சித்திரிக்கிறது.



சர்வதேச சட்டங்கள் அனைத்துக்கும் மாறாக ஈராக்கை ஆக்கிரமித்து சதாம் உசைனைப் படுகொலை செய்துவிட்டு அங்கே அரசியல் குழப்பத்தை ஏற்படுத்திய அமெரிக்காவைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் ஜான் ட்ரெவெரின் கார்ட்டூனை இங்கே எதற்காகப் பயன்படுத்தவேண்டும்? இந்த கார்ட்டூனுக்குக் கீழே எழுதப்பட்டிருக்கும் வாசகத்தில் ‘இந்த கார்ட்டூனில் சித்திரிக்கப்பட்டிருக்கும் மோதலை ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா குறித்த கார்ட்டூன்களோடு ஒப்பிட்டுப் பார்க்கவும்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படி ஒப்பிடுகிற ஒரு மாணவர் என்ன முடிவுக்கு வருவார்? இஸ்லாமியர்கள் நாகரீகமற்றவர்கள் என்றுதானே எண்ணுவார்? இந்தப் பாடத்தை எழுதிய குழுவில் ஒரு முஸ்லீம் இடம்பெற்றிருந்தால் இந்தக் கார்ட்டூனை அவர் அனுமதித்திருப்பாரா?

சுதந்திரம் குறித்து முழங்குகிற ‘ கல்வியாளர்கள்’ இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?

1 comment:

  1. Feuding Fathers என்று எழுதப்பட்டுள்ளதே.ஈராக்கில் அரசியலமைப்பு சட்டம் உருவாக்குவதில் எழுந்த சர்ச்சைகளை பற்றிய படம் இஸ்லாமியர்களை நாகரீகமற்றவர்கள் என்று எண்ணுமாறு தூண்டவில்லையே.அது குறிப்பிட்ட நாட்டில் குறிபிட்ட பிரச்சினையைத்தானே சுட்டுகிறது.

    ReplyDelete