கே.டி.லிஸ்ட், ரௌடி லிஸ்ட் - சீராய்வு செய்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் நான் அளித்த கடிதம் :
வணக்கம் !
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டிருக்கும் காவல்துறை நிலை ஆணை (PSO) பிரிவு 746 முதல் 749 வரை ஒரு நபரை கேடி லிஸ்டில் ( Known Depredator) சேர்ப்பதற்கும் ரௌடி லிஸ்டில் சேர்ப்பதற்குமான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பிரிவு 749 உட்பிரிவு 2 இல் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது:
(a) Persons, who habitually commit, attempt to commit or abet the
commission of offences involving a breach of peace.
(b) Persons bound over under Sections 106 and 107 Criminal Procedure Code.
(c) Persons who have been convicted under Section 75 of the Madras City
Police Act or twice in two consecutive years under Section 3 Clause 12 of the Town Nuisance Act.
(d) Persons who are illicit distillers and known purveyors of liquor.
(G.O.Ms. No. 3461, Home 10th Dec, 1956.)
(e) Persons either convicted under Section 49-A of the Madras City Police Act, 1888 (Madras Act III of 1888) or under Section (4) of The Madras Gaming Act,
1930, (Madras Act III of 1930), or reasonably suspected to be habitually committing or abetting the commission of such offences.
அதுபோல ஒருவரது பெயரை அந்தப் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பதற்கும் / நீக்குவதற்குமான வழிகாட்டுதல்களும் அதில் உள்ளன. காவல்துறை நிலை ஆணை பிரிவு 748 உட்பிரிவு 4 இல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது :
The Hon‘ble High Court of Madras in their judgment dated 17.06.2013 in
W.P.No.44548 of 2002 pointed out that opening of History Sheet or rowdy sheet attaches an indelible stigma on the concerned person, which in turn, likely to cause serious violation of Fundamental rights and such restriction can only be on reasonable grounds. All SDOs or other authorized officers shall pass detailed orders reflecting application of mind as and when a history sheet or rowdy sheet is opened or when the period is extended. SHOs must justify the necessity for opening History Sheet in terms of PSO 746 and 749. At the end of the prescribed period, the retention must be ordered only if there is sufficient material recorded in the ‗current doings‘ and when the person continues to meet the norms mentioned in the relevant PSO
- DGP‘s standing instruction No.57/2013, Dated: 29.11.2013. ஆனால் இந்த வழிகாட்டுதல்கள் காவல் நிலையங்களில் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. மாறாக காவல் நிலையங்களில் ஆய்வாளர் மட்டத்திலுள்ள அதிகாரிகள் அரசியல் கட்சிகளில் செயல்படுவோரை அதிலும் குறிப்பாக ஆதிதிராவிட மக்களுடைய நலன்களுக்காக செயல்படும் அரசியல் கட்சிகளின் பொறுப்பாளர்களை மனம் போன போக்கில் இந்த பட்டியலில் சேர்த்து விடுகின்றனர். காவல்துறை நிலை ஆணையில் சொல்லப்படிருப்பதைப் போல குறிப்பிட்ட கால எல்லைக்குள் அந்த பட்டியலை சீராய்வு செய்வதோ, பெயர்களை நீக்குவதோ அல்லது அந்த பெயர்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால் அதற்காக உயர் அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறுவதோ கிடையாது. இதை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை WP (Md) No.19651 Of 2017 Vs The Assistant Commissioner Of Police, Madurai ... on 26 September, 2018 என்ற தீர்ப்பில் பின்வருமாறு சுட்டிக்காட்டி இருக்கிறது:
”28.It can be seen from all the above cases that there is a general pattern adopted trend by the Police to continue to retain the names of the persons in the history sheet showing them as rowdies without any justifiable reasons. The Police did not realise that the purpose of opening a history sheet is to keep surveillance and check on hardened and habitual criminals in order to maintain peace and tranquility in the society.
29.As mentioned above, it also becomes the duty of the Police to keep reviewing the history sheet regularly to ensure that the persons, who are no longer required to be retained in the list are removed from the list, since it involves the dignity and public image of a person which is guaranteed under Article 21 of the Constitution of India.”
அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகும் கூட பழைய நிலையே நீடிப்பது வேதனை அளிக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த Nageswara rao Vs The Superintendent of Police, Kallakurichi என்ற வழக்கில் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 06.07. 2022 அன்று ஆணை ஒன்றைப் பிறப்பித்து இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும் என காவல்துறைக்கு அதில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் தங்களது மேலான தலைமையின் கீழ் காவல்துறை இப்போது சிறப்பாக பணியாற்றி வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் 2018 இல் வழங்கிய ஆணைக்கு ஏற்ப தமிழ்நாட்டில் உள்ள கேடி லிஸ்ட், ரௌடி லிஸ்ட் ஆகியவற்றை சீராய்வு செய்து பொருத்தமற்றவர்களின் பெயர்களை அந்தப் பட்டியல்களிலிருந்து நீக்குவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி இவண்
முனைவர் து.ரவிக்குமார்
( இதே போன்ற கடிதத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி க்கும் அனுப்பியுள்ளேன். டிஜிபி அவர்களுக்கு இதன் நகல் அனுப்பப்பட்டுள்ளது )