Thursday, May 18, 2017

Civility in politics - A round table


Civility in politics என்ற தலைப்பில் The Hindu Centre for Politics and Public Policy அமைப்பும் , அமெரிக்க தூதரகமும் இணைந்து கருத்துப் பரிமாற்றக் கூட்டம் ஒன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தனர். அதில் பங்கேற்க நான் அழைக்கப்பட்டிருந்தேன். 

அமெரிக்காவைச் சேர்ந்த செனட்டர் டேப் எம் பீட்டர்ஸ் ( குடியரசுக் கட்சி) பிரதிநிதி ஹெலென் எம் கீலி ( ஜனநாயகக் கட்சி ) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர். 

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, சிபிஐ எம் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ஆர், அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை, மனு சுந்தரம், இளைஞர் காங்கிரஸ் யுவராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொஹிதீன் ஆகியோர் அரசியல் கட்சிகளின் சார்பில் கலந்துகொண்டனர். 

நீதிபதி கே.சந்துரு, முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, முன்னாள் மாநிலத் தலைமைத்  தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரும் பங்கேற்றனர். 

என். ராம் தலைமை வகித்தார். வி.எஸ்.சம்பந்தன் அறிமுகவுரையாற்றினார். 

சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் பயன்மிக்க கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அரசியலில் கண்ணியமும் நாகரிகமும் குறைந்துவருவது உலகளாவிய போக்காக இருப்பதை எல்லோருமே கவலையோடு சுட்டிக் காட்டினார்கள். 

ஏற்றத் தாழ்வை அங்கீகரிக்கும் சமூக ஒழுங்குக்கும் சமத்துவத்தை உத்தரவாதப்படுத்தும் அரசியலமைப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கும் இடையே உள்ள முரண்பாடு எப்படி அரசியல் நாகரிகத்துக்கு எதிராக உள்ளது என்பதை நான் சுட்டிக்காட்டினேன். அதிகரித்துவரும் வெறுப்புக் குற்றங்கள் அவற்றைத் தடுப்பதற்கு தனியே சட்டம் எதுவும் இல்லாதது, ஐநா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோதும் வெறுப்புக் குற்றங்களைத் தடுக்க இந்தியா சட்டம் இயற்றாதது ஆகியவற்றை விவரித்தேன். தற்போது இந்தியாவை அச்சுறுத்தும் வகுப்புவாதம் எப்படி அரசியல் நாகரிகத்துக்கு எதிராக செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்டினேன். 

பத்திரிகையாளர்கள் கே.பி.சுனில், விஜயசங்கர், ஆர்.கே, கோலப்பன், அரவிந்தன் ஆகியோரும் வந்திருந்தனர்

No comments:

Post a Comment