Thursday, March 17, 2011

தமிழக சட்டசபை தேர்தலில் சில முக்கிய விதிமுறைகள்


தமிழக சட்டசபை தேர்தலில், இம்முறை ஏராளமான புதிய விதிமுறைகளை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சிகள், வாக்காளர்கள், அதிகாரிகளுக்கே குழப்பம் உள்ளது.

சில முக்கிய விதிமுறைகள்:

* ஆண், பெண் ஓட்டு சாவடிகளை மாற்றி பொது ஓட்டு சாவடி அமைப்பு
* வாக்காளரின் போட்டோவுடன் "பூத் சிலிப்புகளை' வீடு வீடாக சென்று, தேர்தல் கமிஷனே வழங்கும்.
* வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, மகன், மகள், மனைவி சொத்து பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும்.
* வேட்பாளர் செலவு கணக்கிற்காக, வங்கியில் தனி கணக்கு துவங்க வேண்டும். அதிகபட்சமாக 16 லட்சம் ரூபாய் செலவிடலாம்.
* வேட்பாளர்களின் டெபாசிட் தொகை உயர்வு. (தனி தொகுதிகளில் 2, 500ல் இருந்து 5000 ரூபாயாகவும், பிற தொகுதிகளில் 5000ல் இருந்து 10 ஆயிரமாகவும் அதிகரிப்பு)
* விளம்பரங்கள் வெளியிடுவதை கண்காணிக்க குழு. சுவர் விளம்பரங்கள், பிளக்ஸ் போர்டுகளில் இடம்பெறும் வாசகங்களையும், தேர்தல் பிரிவின் அனுமதி பெற்று வைக்க வேண்டும்.
* காரில் கட்சி கொடி கட்டினால், அதற்கான அனுமதியை வாங்கி காரிலேயே வைத்திருக்க வேண்டும்.
* ஓட்டு சாவடி அலுவலர்கள் ஓட்டுப்பதிவு நிலவரம் குறித்து தேர்தல் கமிஷனுக்கு மட்டுமே தெரிவிக்க வேண்டும். அங்கிருந்து தான் மாவட்ட நிர்வாகங் களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
* பொது இடங்களில்,கொடிக்கம்பங்களில் கட்சிக்கொடிகள் அகற்றப்பட வேண்டும். கம்பங்களில் வண்ணங்களை அழிக்க வேண்டும். 
* கிராமப்புறங்களில் மட்டுமே தனியார் சுவர்களில், அனுமதியுடன் கட்சிகள் விளம்பரங்கள் எழுதலாம். பிற பகுதிகளில் தனியார் சுவர்களிலும் போஸ்டர், பேனர், படம் இருக்கக் கூடாது.
* மக்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு கூடுதலாக பணம் எடுத்துச் செல்ல தடை. மூன்று மது பாட்டில்களுக்கு மேல் எடுத்துச்செல்ல தடை.
* கிராமப்புறமாக இருந்தாலும், இரவு 10 மணிக்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும்.
* ஓட்டுப்பதிவு நேரம் காலை 8 மணி முதல் 5 மணி வரை.

1 comment:

  1. நன்றி. வாழ்த்துக்கள்.
    நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல், சமூக நல ஆர்வலராகயிருந்தாலும் இதில் பாதியளவிற்கு நிச்சயம் செய்திருப்பீர்கள். சட்டமன்ற உறுப்பினர் என்ற வாய்ப்பு, அதிகார அமைப்புக்களை எளிதில் அணுகவும் அவர்களது சிந்தனையில் செல்வாக்குச் செலுத்தவும் வாய்ப்பளித்தது. அதை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டீர்கள். மகிழ்ச்சி.

    இந்த முறையும் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் செய்ய வேண்டியன என எனக்குத் தோன்றுபவை:

    1.உள்ளாட்சி அமைப்புகள் அரசின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் ஏஜென்சிகளாக இல்லாமல், சுயாதீனம் கொண்ட அமைப்புக்களாகத் தழைக்க உரிய அதிகாரங்களைப் பெற்றுத் தருதல் (Empowering the grass roots)
    2.உலகமயமாதல், போட்டிச் சூழல் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் இளைஞர்களின் செயல்திறனை வளர்த்தல் (Building skill sets of youth to face globalisation and competitive environment)
    3.சுற்றுச் சூழல் குறித்த ஒரு தெளிவான கொள்கை பல்லுயிர்தன்மையைப் பேணல், ஆறுகளை காத்தல், நீர் நிலைகள் மேம்பாடு, அரசு நிறுவனங்களில் மறு சுழற்சி, காகித்தின் தேவையக் குறைக்கும் மின் ஆளுகை போன்ற அமசங்களை உள்ளடக்கிய கொள்கை.
    4,அரசு வழங்கும் இலவசங்கள் குறித்து ஒரு கொள்கைக் குறிப்பு. ஆடம்பரப் பொருட்களை இலவசமாக வழங்கி நுகர்வுக் கலாசாரத்தை அரசு ஊக்குவிக்கலாமா என்பது பற்றிய தெளிவான நிலையை அறிவிக்கும் குறிப்பு.

    மீண்டும் சட்டமன்றம் காண வாழ்த்துக்கள்
    அன்புடன்
    மாலன்

    ReplyDelete