சண்முகம் சிவலிங்கம் மரணமானார்
பாண்டிருப்பைச் சேர்ந்தவரும் , ஈழத்தின் மிகமுக்கிய கவிஞரும் விமர்சகரும் சிறுகதையாளருமான சண்முகம் சிவலிங்கம் இன்று அதிகாலை மரணமானார். இரவு படுக்கைக்குச் சென்றவர் காலையில் எழும்பவில்லை; மாரடைப்பு காரணமாக நித்திரையிலேயே அவர் இறந்துவிட்டார்.
இவரது மறைவு ஈழத் தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும்.
நீர்வளையங்கள், சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் என்ற சிறந்த இரண்டு கவிதைநூல்கள் மட்டும் இதுவரை வெளிவந்துள்ளன. மார்க்சிய அழகியல் ரீதியில் அமைந்த விமர்சனக் கட்டுரைகள் பலவற்றை எழுதிஉள்ளார் ; கவிஞர் மஹாகவியின் முக்கியத்தினை நிலைநிறுத்துவதில் இவரது கட்டுரைகள் கவிஞர் நுஹ்மானின் பணிகளுடன் துணைநின்றன!
இவரது கட்டுரைகளும் அழகிய சிறுகதைகள் பலவும் கையெழுத்துப் பிரதியிலுள்ள இரண்டு நாவல்களும் கவிதைகளும் நூல்வடிவம் பெறவேண்டியது அவசியம் ; அவை ஈழத்து இலக்கிய த்துக்கு வளம் சேர்ப்பவை!
No comments:
Post a Comment