30 Sep 2012 05:09:11 AM IST
புதுச்சேரி, செப். 28: தமிழுக்கான சொற்பொருள் அகராதிகளை உருவாக்கும்போது, பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பேராசிரியர் மாதையன் வலியுறுத்தினார்.
மணற்கேணி இதழ் சார்பில் "தமிழும் சமஸ்கிருதமும்' எனும் தலைப்பில் ஆய்வரங்கம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு பேராசிரியர் மாதையன் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழில் தொல்காப்பியம் தரமான ஓர் காப்பியம். அதில் ஒரு குறைகூட காணமுடியாது. எத்தனை ஆண்டுகள் தவமிருந்தாலும் இதுபோல் ஒரு காப்பியத்தை எழுத முடியாது.
சங்ககால இலக்கியங்களுக்கு சொற்பொருள் அகராதிகளைத் தற்போது உருவாக்கும்போது சிலர், பொருள் பிழைகளுடன் உருவாக்குகின்றனர். தமிழ் அகராதிகளில் பிழைகள் ஏற்படுவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற தமிழுக்கான ஆய்வரங்கங்கள் நடத்த, மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் மேலும் பலரை ஊக்குவிக்க வேண்டும்.
இது தமிழின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். தமிழ் ஆய்வுக்காக மத்திய அரசு அளிக்கும் நிதி முழுவதுமாகச் செலவிடப்படாதபோது, அது வடமொழி இலக்கிய ஆய்வுகளுக்கு மாற்றப்படுகிறது.
எனவே தமிழ்மொழி ஆய்வுக்கான நிதியை முழுவதுமாகச் செலவிட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
பேராசிரியர் மணவாளன்:
சமஸ்கிருதம் ஒரு பண்பாட்டு மொழி. அது பேச்சு வழக்கில் உள்ள மொழி கிடையாது. எனவே சமஸ்கிருதத்தைக் கண்டு யாரும் அஞ்சத் தேவையில்லை. கி.மு.4-ம் நூற்றாண்டில் ராமாயணம், மகாபாரதம் முதலியவை தோன்றின. இந்த ராமாயணம் வட இந்தியாவில் இருப்பதுபோல், தென்னிந்தியாவில் இல்லை.
இதிலேயே சில வேறுபாடுகள் உள்ளன. ராமாயண சமஸ்கிருத நடையிலும், மகாபாரத சமஸ்கிருத நடையிலுமே வேறுபாடுகள் உள்ளன. அனைத்து துறைகளிலும் தமிழைப் பயன்படுத்தும்படி மாற்ற வேண்டும் என்றார் அவர்.
பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி:
தமிழையும், சமஸ்கிருதத்தையும் ஆராயம்போது ஒரு மொழி மட்டுமே தெரிந்தவர் ஆராயக் கூடாது. இரு மொழிகளையும் நன்கு தெரிந்தவர் ஆராயும் போதுதான் அப்பணி சிறப்பானதாக இருக்கும்.
பல தமிழ் சொற்கள் சமஸ்கிருத சொற்களாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக நீலமாக இருக்கும் விண்(வானம்) வழிபாடுதான் விஷ்ணு வழிபாடாக மாறியதாக நான் கருதிகிறது.
விண் என்ற சொல்லில் இருந்துதான் விஷ்ணு என்ற சொல் வந்துள்ளது. இதுதொடர்பாக, வளரும் இளம் தலைமுறையினர் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இந்த ஆய்வரங்கத்தை மணற்கேணி ஆசிரியர் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் ஒருங்கிணைத்தார். இதில் பல்வேறு பேராசிரியர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். ஆய்வரங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆய்வுப் பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Chennai&artid=668706&SectionID=135&MainSectionID=135&SEO=&Title=தமிழ்%20அகராதிகளில்%20பிழைகள்%20ஏற்படுவதைத்%20தவிர்க்க%20வேண்டும்:%20பேராசிரியர்%20மாதையன்