Tuesday, June 30, 2015

ரவிக்குமார் மொழிபெயர்த்த எடுவர்டோ கலியானோவின் நூல் ப்ரெய்லி வடிவத்தில் வெளியாகிறது



ரவிக்குமார் மொழிபெயர்த்து மணற்கேணி பதிப்பகம் மூலம் 2010 இல் வெளிவந்த எடுவர்டோ கலியானோவின் ' வரலாறு என்னும் கதை' என்ற நூல் பார்வையிழந்த மாற்றுத் திறனாளிகள் படிப்பதற்கு ஏற்ப ப்ரெய்லி வடிவத்தில் வெளிவரவுள்ளது. 

மதுரையில் செயல்பட்டுவரும் Indian Association for the Blind என்ற அமைப்பு அந்த நூலை வெளியிடுகிறது. அதன் பொதுச்செயலாளர் ரோஷன் ஃபாத்திமா அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில் நான் அந்த நூலை வெளியிட ஒப்புதல் வழங்கியிருக்கிறேன். அந்த அமைப்பின் சார்பில் மதுரையில் பள்ளி ஒன்றும் நடத்தப்படுகிறது. அதில் ஆறாம் வகுப்புமுதல் 12 ஆம் வகுப்புவரை 125 மாணவர்கள் படித்துவருகின்றனர். 

ஏற்கனவே க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியை அந்த அமைப்பு ப்ரெய்லியில் வெளியிட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி குட்டி இளவரசன், தொல்காப்பியம், நன்னூல், திருக்குறள், பெரியாழ்வார் திருமொழி, ஆத்திச்சூடி உள்ளிட்ட பலநூல்களும் ப்ரெய்லியில் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது 'வரலாறு என்னும் கதை' வெளியாகவிருக்கிறது. 

No comments:

Post a Comment