Tuesday, April 19, 2016

விருப்ப ஓய்வு பெற்றாலும் விடாத உறவு



அகில இந்திய வங்கிப் பணியாளர் சங்கத்தின் ( AIBEA) எழுபதாவது ஆண்டுவிழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ' வங்கித் துறையில் பணிபுரிந்து இப்போது பொதுவாழ்வில் சிறப்பாக செயல்படுவதற்காக'  அதில் என்னை அழைத்து கௌரவித்தார்கள். AIBEA ன் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் சி.எச்.வி அவர்கள் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். 

நான் விருப்ப ஓய்வுபெற்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தும் வங்கி ஊழியர் சங்கத்தோடான தொடர்பு அறுபடவில்லை. 

வங்கியில் பணியாற்றிய காலத்தில் நான் மார்க்சிய லெனினிய தத்துவத்தில் ஈடுபாடு கொண்டிருந்தேன். சிபிஐ எம் சார்புள்ள BEFI சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன்.  AIBEA தோழர்களோடும் நெருக்கமாக நட்புகொண்டிருந்தேன். AIBEA அறிவித்த வேலைநிறுத்தப் போராட்டங்களிலும் தவறாமல் பங்கெடுத்தேன். எனவே இரண்டு சங்கங்களின் தலைவர்களோடும் எனக்குத் தோழமை இருந்தது. இப்போதும் அது தொடர்கிறது. 

70 ஆவது ஆண்டையொட்டி பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். வங்கி ஊழியர்கள் நிகழ்த்திய நடன நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. தேர்ந்த நடனக் கலைஞர்களே வியக்கும்படி அவர்கள் ஆடிய நடனம் அமைந்திருந்தது. அவர்களுக்கு என் பாராட்டுகள். என்னை கௌரவித்த AIBEA பொறுப்பாளர்களுக்கு நன்றி! 


No comments:

Post a Comment