இந்த ஆண்டுக்கான ஆளுநர் உரையில் நிதிநிலை அறிக்கையைப் போலவே நிறைய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்தல் வரவிருப்பதால் இந்த ஆண்டு முழுமையான நிதிநிலை அறிக்கை இல்லை என்பதால் இப்படிச் செய்துள்ளனர் போலும். இந்த ஆளுநர் உரையில் நான் கேட்ட நான்கு கோரிக்கைகள் நிறைவேறியுள்ளன.
1. மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளை இயக்கும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வேண்டுமென நான் கோரியிருந்தேன். அது ஏற்கப்பட்டு இப்போது அவர்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. நாட்டுப்படகு வைத்திருக்கும் மீனவர்களுக்கு மண்ணெண்ணை வழங்கவேண்டும் என்ற எனது கோரிக்கை ஏற்கப்பட்டு மாதம் முன்னூறு லிட்டர் மண்ணெண்ணை வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.
3. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் மிகவும் சிதிலமடைந்துவிட்டதால் அவற்றையும் குடிசைகளாகக் கருதி புதிய கான்கிரீட் வீடுகளைக் கட்டித்தரவேண்டும் என்று கேட்டிருந்தேன். அப்படி பத்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளை பழுதுநீக்குவதற்கு பதினைந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
4. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் இப்போது மற்ற சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கண்டறிந்து மீண்டும் அவற்றை தலித் மக்களின் கையில் ஒப்படைக்கவேண்டுமென நான் எனது கன்னி உரை முதல் அண்மையில் நான் பேசிய பேச்சுவரைத் தொடர்ந்து வலியுறுத்தினேன். அது இப்போது ஏற்கப்பட்டு அதற்கென ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது
கடமைக்கு சட்டசபை நோக்கி செல்வோர் மத்தியில், சட்டசபைக்கு சென்று கடமை ஆற்றியிருக்கும் தங்களின் செயல் உண்மையில் பாராட்டுக்குரியது..!
ReplyDeleteமனதாரப் பாராட்டுக்கள் அண்ணன்
ReplyDeleteமயிலாடுதுறை சிவா....
உங்கள் அனைத்து முயற்சிக்கும் வாழ்த்துக்கள் .
ReplyDeleteஉங்களைப்போன்றவர்கள் அரசியலில் இன்னும் சிறப்பான பணி புரிய வேண்டும் .
சமூக வலைதளங்கள் , வெறும் பொழுதுபோக்கு மட்டும் தானா?
சிங்கள ராணுவத்தின் கையில் செத்து மடியும் தமிழ் மீனவர்களுக்காக
ஒன்றிணைவோம் .
Post ur tweets with #tnfisherman at the end .
Save Tamilnadu Fishermen - அக்கறையுள்ளோர் கையொப்பமிடவும்http://www.petitiononline.com/TNfisher/petition.html #tnfisherman
Save Tamilnadu Fishermen Petition
www.petitiononline.com
Save Tamilnadu Fishermen Petition, hosted at PetitionOnline.com