எழுத்தாளர் திலீப்குமாருக்கு ' விளக்கு ' விருது வழங்கும் விழா ௦ 02.01.2011 ஞாயிறன்று சென்னை தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடத்தில் நடைபெற்றது. சுமார் ஐம்பது பேர் கலந்துகொண்டனர். ' வெளி ' ரங்கராஜன் , அசோகமித்திரன் , சிபிச்செல்வன் , சங்கரராமசுப்ரமணியன் உள்ளிட்ட சிலர் வாழ்த்திப் பேசினர். திலீப்குமார் ஏற்புரை ஆற்றினார். அசோகமித்திரனின் உரையை நான் எனது மொபைலில் பதிவுசெய்தேன். ஆனால் அதைப் போட்டுக்கேட்டபோது விமலாதித்த மாமல்லனின் வெடிச்சிரிப்பு மட்டுமே கேட்டது. பாவம் அசோகா மித்திரன். அவரது உடல்வாகு போலவே குரலும் மெலிந்திருக்கும். மாமல்லன் பெயருக்கேற்ப நேரே களத்தில் இறங்கத் தயாராக இருப்பவர் போல திடகாத்திரமாக இருக்கிறார். அவர் சிரித்தது ' கஜல் பாடகர்கள் பாடலின் வரிகளைச் சொல்வதற்குமுன்பே எதிரில் இருக்கும் ரசிகர்கள் வாவ் வாவ் என வியந்து பாராட்டுவது போல இருந்தது என திலீப்குமார் சொன்னது பொருத்தமான விமர்சனம். அசோகமித்திரன் ஒரு கேள்வி எழுப்பினார் : " சில பையன்கள் என்னிடம் வந்து பத்திரிக்கை நடத்துவதாகச் சொன்னால் எனக்கு நிஜமாவே கவலையா இருக்கும். யாராவது பெண்கள் பத்திரிக்கை நடத்துறாங்களா ? சில விமன் போயட்ஸ் நல்லா வசதியா இருக்காங்க . கார்லாம் வச்சிக்கிட்டு. வெளி நாடுகளுக்கு பறந்துகிட்டிருக்காங்க . இங்கே கவிஞர் சங்கர ராம சுப்ரமணியன் இருக்கார். அவரால சிலோனுக்காவது போக முடியுமா ? " அது அவையில் சிரிப்பலைகளை எழுப்பியது. அவர் சிரிப்பு மூட்டுவதற்காக அதைச் சொல்லவில்லை, சீரியசாகத்தான் சொன்னார் என்று நினைக்கிறேன்.
திலீப்குமாருக்கு வாற்பதாயிரம் ரூபாய்க்கான காசோலையை அசோகமித்திரன் வழங்குகிறார்
தகுதியுரை கொண்ட சான்றிதழை 'வெளி ' ரங்கராஜன் வாசிக்கிறார்
சான்றிதழை திலீப்குமார் பெற்றுக்கொள்கிறார்
அசோகமித்திரனின் பாராட்டுரை
No comments:
Post a Comment