வணக்கம்
ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தின் இறுதிப்பத்தியில் செய்யப்பட திருத்தத்துக்கு இந்தியாதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர் ஈழத் தமிழர்களின் சுயமரியாதை, சமத்துவம் , நீதி ஆகியவற்றைப் பற்றிப் பேசிய பேச்சு யாரை ஏமாற்ற ?
சீனா ,க்யூபா ,ரஷ்யா ஆகிய 'சோஷலிச' நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றன. தமது மாநாடுகளுக்கு இந்த நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அழைப்பது வழக்கம். அவர்கள் இனி அதை மறு பரிசீலனை செய்வார்களா ? ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது ஃ பாசிசத்தை ஆதரிப்பதற்கான அனுமதிச் சீட்டா ?
"ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் இலங்கை அரசைக் கலந்தாலோசித்து அவர்கள் அனுமதி பெற்றுத்தான் செயல்பட வேண்டும் என்ற விதத்தில் செய்யப்பட்டிருக்கும் திருத்தம் தமிழர்களுக்கு ஆதரவானதா ? இது ' கோழியை கேட்டு குருமா வைப்பது ' போன்றது என ஒரு அ.தி.மு.க காரர் கிண்டலடித்தார் .அது சரியான விமர்சனம் அல்லவா ?
No comments:
Post a Comment