Monday, March 19, 2012

Is this an attempt to deceive Tamils?



தமிழக அரசியல் கட்சிகள் ஒட்டுமொத்தமாக ஒரே நிலை எடுத்து இந்திய அரசை வலியுறுத்தியதாலும், உத்தரப் பிரதேசத் தேர்தலின் தோல்விக்குப் பிறகு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் போராடும் நிலை ஏற்பட்டிருப்பதாலும், தி.மு.க தனது அழுத்தத்தை அதிகப்படுத்தியதாலும் எவரும் எதிர்பார்க்காமலேயே இன்று பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பிரச்சனை குறித்தும், ஐ.,நா தீர்மானம் குறித்தும் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.குடியரசுத்தலைவரின் உரை மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசும்போது இலங்கை அரசைப் பற்றியும் , தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள் வழங்கப்படவேண்டியதன் தேவை பற்றியும் அவர் மிகவும் அக்கறையோடு கருத்து தெரிவித்திருக்கிறார். ’தமிழர்களுக்கு சமத்துவம், கௌரவம், நீதி மற்றும் சுய மரியாதையை உறுதிசெய்யும் விதமான ஒரு தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்’ என்று அவர் கூறியிருக்கிறார். 

தமிழர்கள் சமத்துவம், கௌரவம்,நீதி மற்றும் சுய மரியாதையோடு வாழ்வதுதான் இந்தியாவின் நோக்கம் என்றால் அதற்கான திருத்தங்களைச் செய்யவேண்டும் என்றல்லவா இந்தியா வலியுறுத்தியிருக்கவேண்டும்? அதைவிடுத்து எந்த நாட்டுக்கு எதிரான தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்காது என ஏன் நமது வெளியுறவு அமைச்சர் கூறவேண்டும்? 

 ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில் இந்தியா என்ன நிலை எடுக்கப் போகிறது என்பது இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. இந்தத் தீர்மானம் நாம் விரும்பிய வகையில் இல்லை, தமிழர்களுக்குப் போதுமான அளவில் இது உதவி செய்வதாக இல்லை என்று சொல்லி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கு இந்தியா திட்டமிடுகிறதா ? பிரதமர் பேசியிருப்பதை  நீங்களே வாசித்துப் பாருங்கள் 



" Madam, another issue which was raised during the debate relates to the state of Sri Lankan Tamils. Some Members have raised concern regarding the situation in Sri Lanka. The Central Government fully shares the concerns and sentiments raised by hon. Members regarding the welfare of Sri Lankan Tamils. Since the end of conflict in Sri Lanka, our focus has been on the welfare and well being of the Tamil citizens of Sri Lanka. Their resettlement and rehabilitation has been of the highest and most immediate priority for our Government. The steps taken by the Central Government in this regard has been outlined in the suo motu statement made by the External Affairs Minister on 14th March, 2012. As a result of our constructive engagement with the Government of Sri Lanka and our considerable assistance programme, the modicum of normalcy is beginning to return to the Tamil areas in Sri Lanka. There has also been progress, given the withdrawal of emergency regulations by the Government of Sri Lanka and the conduct of elections to local bodies in the Northern provinces of Sri Lanka.

Members have also raised the issue of human rights violations during the protracted conflict in Sri Lanka and on the US initiated draft resolution on promoting reconciliation and accountability in Sri Lanka at the on-going 19th Session of the UN Human Rights Council in Geneva. The Government of India has emphasised to the Government of Sri Lanka the importance of a genuine process of reconciliation to address the grievances of the Tamil community. In this connection, we have called for implementation of the recommendations contained in the report of the Commission appointed by Sri Lankan Government that has been tabled before the Sri Lankan Parliament. These include various constructive measures of healing the wounds of the conflict and fostering the process of lasting peace and reconciliation in Sri Lanka.

We have asked the Government of Sri Lanka to stand by its commitment towards pursuit of a political process through a broader dialogue with all parties including the Tamil National Alliance leading to the full implementation of the 13th Amendment to the Sri Lankan Constitution so as to achieve meaningful devolution of power and genuine national reconciliation. We hope that the Government of Sri Lanka recognises the critical importance of this issue, act decisively and with vision in this regard. We will remain engaged with them through this process and encourage them to take forward the dialogue with the elected representatives of Sri Lankan Tamils.

As regards the issue of a draft resolution initiated by the United States at the on-going 19th Session of the UN Human Rights Council in Geneva, we do not yet have the final text of the Resolution. However, I may assure the House that we are inclined to vote in favour of a Resolution. That, we hope, will advance our objective, namely, the achievement of the future for the Tamil community in Sri Lanka that is marked by equality, dignity, justice and self-respect."

PM's reply in the Lok Sabha debate on the President's address
March 19, 2012

No comments:

Post a Comment