இன்று( 21.03.2014) ஆவடியில் நடைபெற்ற செயல்வீரர் கூட்டத்தில் ஆவடி நகர்மன்றத் தலைவர் நாசர் அவர்கள் ஒரு போட்டியை முன்மொழிந்தார். மாதாவரம் சட்டமன்றத் தொகுதியில் ஆவடியைவிட கூடுதல் வாக்குகளைப் பெற முடியுமா ? என்று சவால் விட்டார். திமுக மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் திரு சுதர்சனம் இருக்கும் தொகுதி அது. இறுதியாக உரையாற்றிய திரு. சுதர்சனம் அவர்கள், தனக்கு விடப்பட்ட சவாலாகவே அதை எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். " சவால் என்றால் பந்தயம் இருக்கும். நாசருடைய எடை 139 கிலோ, என்னுடைய எடை 95 கிலோ. ஆவடியைவிட மாதவரம் தொகுதியில் வாக்கு குறைவாகப் பெற்றால் நான் எனது எடையில் 20 கிலோவைக் குறைத்துக்கொள்கிறேன். ஆவடியில் வாக்கு குறைந்து பந்தயத்தில் தோற்றால் நாசர் தனது எடையில் 10 கிலோ குறைக்கவேண்டும். இதுதான் பந்தயம் " என்றார்.
திரு. சுதர்சனம் அவர்கள் வாக்கு வித்தியாசத்தை எடை குறைப்போடு இணைத்துப் பேசிய லாவகம் ரசிக்கத் தக்கதாக இருந்தது. இந்தப் போட்டிதான் உண்மையிலேயே ' ஆரோக்கியமான' போட்டி.
No comments:
Post a Comment