ஹரியானாவின் மக்கள் தொகையில் சுமார் 20% தலித்துகள் உள்ளனர். அவர்கள் இதுவரை காங்கிரஸ் கட்சியைத்தான் ஆதரித்து வந்தார்கள். ஆனால் காங்கிரஸோ அந்த மாநிலத்தில் இருக்கும் ஜாட் சாதியினருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. தலித்துகளுக்கு எதிராக அம் மாநிலத்தில் அதிகரித்துவரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த காங்கிரஸ் தவறியதோடு சாதிய வன்முறையில் ஈடுபடும் ஜாட்டுகளுக்கு ஆதரவாக அவர்களை ஊக்குவித்துவருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மிர்ச்பூரில் தலித் குடும்பம் ஒன்று வீட்டோடு வைத்து உயிரோடு எரிக்கப்பட்டது. அந்த கொடூர சம்பவத்தின் தாக்கம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2012 ஆம் ஆண்டில் மட்டும் ஹரியானாவில் 19 தலித்துகள் கொல்லப்பட்டனர், 67 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர் என என்சிஆர்பி அறிக்கை குறிப்பிடுகிறது.
தலித்துகளின் காங்கிரஸ் எதிர்ப்பு பாஜகவுக்குத்தான் பயன்தரப்போகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதுதான் நடந்தது. அதற்காக காங்கிரஸுக்கு வாக்களிப்பது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொளவதற்கு சமம்.
தம்மை வெறும் வாக்குவங்கியாகக் கருதி ஏமாற்றிவரும் காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் இந்தத் தேர்தலில் தலித்துகள் பாடம் கற்பிப்பார்கள்.
No comments:
Post a Comment