வெண்மணியைப் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டுமென்றால்
அதை காகிதத்தில் எழுத முடியாது
வெண்மணியைப் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டுமென்றால்
அதை பேனாவால் எழுத முடியாது
வெண்மணியைப் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டுமென்றால்
அதை மையால் எழுத முடியாது
வெண்மணியைப் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டுமென்றால்
குழந்தைகளின் அலறலைக் கேட்கக்கூடிய செவிகள் நமக்கிருக்கவேண்டும்
குழந்தைகள் கருகுவதை உணரக்கூடிய நாசி நமக்கிருக்கவேண்டும்
குழந்தைகள் சாம்பலின் சூட்டை உணரக்கூடிய இதயம் நமக்கிருக்கவேண்டும்
எழுதினான் நாடோடிக் கவியொருவன்
வியர்வை பாய்ச்சப்பட்ட வயலில்
பசிய பக்கங்களுக்கிடையே
குருதியால் ஒரு கவிதையை
இருக்கின்றன
எழுதப்படாமல் நாற்பத்து மூன்று பக்கங்கள்
No comments:
Post a Comment