மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கோவாவிலிருக்கும் ஃபேப்இண்டியா துணைக்கடையின் ஆடை மாற்றும் அறையில்ரகசிய காமிரா இருப்பதைக் கண்டுபிடித்த செய்தி இந்தியாவில்தனி மனித அந்தரங்கம் என்பது எந்த அளவுக்குஆபத்திலிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. ஹோட்டல்அறைகளிலும், கழிவறைகளிலும், ஆடை மாற்றும்அறைகளிலும் இப்படி ரகசிய வீடியோ காமிராக்கள்இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாவதுண்டு.ஆனால் மத்திய அமைச்சர் ஒருவருக்கே இப்படியொரு கதிஏற்படும் என எவரும் நினைத்திருக்கமுடியாது. தற்போதுஅந்தக் கடையின் ஊழியர்கள் சிலர்கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மீது இந்தியதண்டனை சட்டத்தின் பிரிவு 354 சி மற்றும் பிரிவு 509 ன் கீழ்வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள்தெரிவிக்கின்றன.
இந்திய தண்டனை சட்டத்தில் பெண்ணின் கண்ணியத்தைக்குலைப்பவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கு வகை செய்வதுசெக்ஷன் 354 ஆகும். அதில் இப்படி வேவு பார்த்தல் ரகசியமாகபடம் பிடித்தல் போன்றவை முன்னர்உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. 2013 ஆண்டில்கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் பின்னர் 354 சி என ஒருஉட்பிரிவு சேர்க்கப்பட்டு ’வாயுரிஸம்’ என்று சொல்லப்படும்வக்கிர செயல்பாட்டுக்குத் தண்டனை அளிக்கவழிசெய்யப்பட்டது. அந்தப் பிரிவின் படி “ அந்தரங்கமானசெயல்பாட்டில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெண்ணை ஒரு ஆண்பார்த்துக்கொண்டிருந்தாலோ அதைப் படம் பிடித்தாலோஅந்த படத்தைப் பிறருக்குப் பகிர்ந்தாலோ அவருக்கு ஒருஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனைவிதிக்கலாம். இரண்டாவது முறை அதே நபர் அதே செயலில்ஈடுபட்டால் அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை தண்டனைவிதிக்கலாம். செக்ஷன் 509 ம் கூட ஏறக்குறைய அதேபொருள் கொண்டதுதான்.
’வாயுரிஸம்’ என்ற சொல் ஆண் பெண் எனஇருபாலினத்துக்கும் பொதுவானது. ஆனால் இந்தியதண்டனை சட்டத்திலோ ஒரு பெண்ணை ஆண் பார்ப்பதும், படம் எடுப்பதும்தான் குற்றம் எனசொல்லப்பட்டிருக்கிறது.அதாவது இதில் பாதிக்கப்பட்டவர்பெண்ணாக இருந்தால்தான் இந்தப் பிரிவுகளைப் பயன்படுத்தமுடியும். ஒரு ஆணுக்கும் கூட அந்தரங்கம் இருக்கமுடியும்என்பதை இந்தப் பிரிவு கணக்கில் கொள்ளவில்லை.அதுபோலவே அரவாணிகளும் இந்த சட்டப் பிரிவுகளின்கீழ் நீதிபெற முடியாது. இந்த நிலை மாற்றப்படவேண்டும். இந்த சட்டப்பிரிவுகளை பாலின வேறுபாடு இன்றி அனைவருக்கும்பொதுவானதாக ஆக்கவேண்டும்.
டிஜிட்டல் யுகம் என வர்ணிக்கப்படும் இன்றைய காலத்தில்அந்தரங்கம் என்பதற்கு இடம் இருக்கிறதா என்ற கேள்விநம்முள் எழுகிறது. ‘ கண்ணியக் குலைப்பு’ (Outrage of Modesty ) என்ற பதத்தை இப்போது ஆழமான பொருளில் நாம்புரிந்துகொள்ளவேண்டும். முன்னர் பொது வெளியில் ஒருபெண்ணின் கண்ணியம் குலைக்கப்படுகிறதென்றால் அதுதற்காலிகத் தன்மை கொண்டதாக இருந்தது. அதைப்பார்க்கிறவர்களும் குறைவான என்ணிக்கையிலேயேஇருப்பார்கள். ஆனால் டிஜிட்டல் தொழில் நுட்பம் அதைஉடனடித் தன்மை கொண்டதாகவும் (Instant ) நிரந்தரத்தன்மை கொண்டதாகவும் (Permanent ) மாற்றிவிட்டது. இன்றுபொது வெளியில் மட்டுமல்ல அந்தரங்கமாக ஒருவருக்குக்கண்ணியக் குலைவு ஏற்பட்டாலும் அடுத்த நொடியே அதைஉலகம் முழுவதும் கொண்டு சென்று பரப்புவதை டிஜிட்டல்தொழில் நுட்பம் எளிதாக்கிவிட்டது.இணையம் என்றபொதுவெளியில் பகிரப்படும் அத்தகைய பிம்பப் பதிவுகள்நீக்கப்படவே முடியாதபடி என்றென்றைக்குமானதாக நிரந்தரத்தன்மைகொண்டதாக இருக்கின்றன.தொழில் நுட்பம்சாத்தியப்படுத்தியிருக்கும் இந்தப் பண்பு மாற்றத்தைசட்டங்களை இயற்றுவோர் கவனத்தில் கொள்ளவேண்டும். அதன் அடிப்படையில் இந்தக் குற்றங்கள்வியாக்கியானப்படுத்தப்படவேண்டும், அதற்கேற்பதண்டனைகளும் அதிகமாக்கப்படவேண்டும்.
இன்று பெரும்பாலான மொபைல் ஃபோன்களில் வீடியோகாமிரா இருக்கிறது. அதைத் தடை செய்ய முடியாது. சீனாவில்அப்படி முயற்சித்துப் பார்த்து கைவிட்டுவிட்டார்கள். ஆனால்சில நாடுகளில் மொபைல் காமிரா மூலம் படம் பிடித்தால் அதுமற்றவர்களுக்குத் தெரியும்விதமாக சப்தம் கேட்குமாறுசெய்யப்பட்டிருக்கிறது. அந்தத் தொழில் நுட்பத்தை இங்கும்கட்டாயமாக்கலாம். கடைகள், ஹோட்டல்கள் போன்றஇடங்களில் இப்படி ரகசிய காமிரா இருப்பதுவெளிப்படுத்தப்பட்டால் அந்த நிறுவனத்தை நிரந்தரமாகமூடிவிட சட்டத்தில் வகைசெய்யப்படவேண்டும். அதற்கானதண்டனையும் அதிகரிக்கப்படவேண்டும்.
‘வாயுரிஸம்’ ஒரு மனிதரை வெறும் உடலாக சுருக்குகிறது.பண்டமாக்கை இழிவுபடுத்துகிறது. அது, வெறும் ஒழுக்கம்சார்ந்த விஷயம் மட்டுமல்ல. வாயுரிஸம் உள்ளிட்ட மனவிகாரங்களை அடிப்படையாகக்கொண்டுதான் இன்றையபோர்னோகிராபி தொழில் நடக்கிறது. உலகில் அதிகம் லாபம்ஈட்டப்படும் தொழில்களில் ஒன்றாக அது இருக்கிறது. எனவேவாயுரிஸத்தின் பொருளாதார அடிப்படையையும் நாம்கவனத்தில் கொள்ளவேண்டும்.
பாசிஸ அரசு குடிமக்களுக்கு அந்தரங்கம் என்பதே இல்லாமல்அழிக்கிறது. அது எவரையும் நம்பாமல் எல்லோரையும் வேவுபார்க்கிறது.ஒடுக்கும் நோக்கம் இல்லாவிட்டாலும்கூட ‘வாயுரிஸமும்’அதே அடிப்படையில்தான் இயங்குகிறது. அதனால் பாசிஸ மனோபாவத்துக்கு வாயுரிசம் இயைபானஒன்றாக இருக்கிறது.
அரசியல் தளத்தில் பாசிஸத்தை எதிர்ப்பதுபோலவே கலாச்சாரதளத்தில் வாயுரிஸத்தை நாம் எதிர்க்கவேண்டும்.அதைத்தான்அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கோவாவில் நேர்ந்த இந்தக்கொடுமை வலியுறுத்துகிறது.
No comments:
Post a Comment