திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் தேவாசிரிய மண்டபத்தின் கூரையின் உள்புறத்தில் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட இந்த ஓவியங்கள் கால ஓட்டத்தில் சிதைந்துகொண்டிருந்த நேரத்தில் அவற்றைப் பாதுகாக்க டேவிட் ஷுல்மன் அவர்கள் எடுத்த முன்முயற்சி நன்றிக்குரியது.76 வயதான புகைப்படக் கலைஞர் வி.கே.ராஜாமணி அவர்களின் அற்புதமான புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும் நூலை சிறந்த முறையில் அச்சிட்டு வெளிக்கொண்டுவந்திருக்கும் ப்ரகிருதி ஃபவுண்டேஷன் நிறுவனத்தையும் நாம் பாராட்டவேண்டும். இப்படியொரு நூல் வெளிவந்திருப்பதை முதலில் எனக்கு திரு க்ரியா ராமகிருஷ்ணன் அவர்கள்தான் கவனப்படுத்தினார். அவர் மூலமாக உடனடியாக ஒரு பிரதியை வாங்கினேன். அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் திருவாரூர்க்காரர் என்பதால் அவருக்கு அந்த நூலின் ஒரு படியைத் தரலாமெனத் தோன்றியது. அவருக்கென ஒரு பிரதியை வாங்கிச் சென்று தந்தபோது ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு அந்த ஓவியங்களைப் பார்த்தார். அவற்றைப் பற்றி விவரிக்கவும் செய்தார். அந்த நூலைத் தமிழில் கொண்டுவரலாமென நான் சொன்ன யோசனையையும் வரவேற்றார். இப்போது அரசு சார்பில் அந்த முயற்சியை மேற்கொள்ளமுடியாது. ஆங்கிலத்தில் வெளியிட்டிருப்பவர்களே அதைத் தமிழிலும் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்.டேவிட் ஷுல்மன் அவர்கள் சொன்னால் க்ரியா பதிப்பகமேகூட அதை வெளியிடலாம்.
இங்கே அந்த ஓவியங்களில் சில:
No comments:
Post a Comment