ஜனவரி 25ஐ மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளாக நினைவுகூர்வது சரியா?
எந்தவொரு போராட்டத்திலும் முதலில் களப்பலியானவரை நினைவுகூர்வதுதான் வழக்கம். ஆனால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அந்த வழக்கம் கடைபிடிக்கப்படவில்லை. அதற்குக் காரணம் சாதி தான்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதலில் களப்பலியானவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த நடராசன். போராட்டத்தில் ஈடுபட்டபோது 1938 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அவர் சென்னையில் கைதுசெய்யப்பட்டு ஏழரை மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அங்கு அவர் சித்திரவதை செய்யப்பட்டதால் உடல் நலிவுற்று 1939 ஜனவரி 15 ஆம் நாள் மரணமடைந்தார்.
தியாகத்திலும் தீண்டாமை பார்க்கும் தமிழர்கள் நடராசனின் மரணத்தை நினைவுகூர்வதில்லை. அவரது பெயரை முதலில் சொல்வதற்குக்கூட மனமற்ற தமிழர்கள் அவருக்குப் பிறகு உயிர்நீத்த தாளமுத்துவின் பெயரை முதலில் சொல்லி அப்புறம்தான் நடராசன் எனக் குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் தலித்துகளை அவர்கள் தமிழர்களாகவே கருதுவதில்லை.
இந்த வரலாறு மொழிப்போராட்டம் குறித்து 9 ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய 'தீண்டப்படாத தியாகம் ' என்ற சிறு நூலில் இடம்பெற்றுள்ளது
No comments:
Post a Comment