சாதி பயங்கரவாதம் என்பது தலித்துகளுக்கு எதிரானது மட்டுமல்ல பெண்களை முடக்கி சமூகத்தைப் பழமைவாத இருளில் தள்ளுவதாகும். இது சமூகத்தில் அமைதியின்மையை அதிகரித்து முன்னேற்றத்தை வளர்ச்சியைத் தடுக்கும் முட்டுக்கட்டையாகும். இதைத் தடுத்து முறியடிக்கவேண்டியது அனைவரதும் கடமை.
பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவோம்:
1. தெருக்களின் பெயர்களில் சாதி பின்னொட்டுகள் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் தடை செய்யப்பட்டதுபோல் வணிக நிறுவனங்கள் கல்விக் கூடங்கள் முதலானவற்றின் பெயர்களிலும் சாதி அடையாளங்கள் தடைசெய்யப்படவேண்டும்.
2. சாதி தலைவர்களின் பிறந்தநாள் நினைவுநாள் போன்றவற்றை அரசு விழாக்களாக நடத்துவது நிறுத்தப்படவேண்டும்.
3. ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த சட்ட ஆணையம், வர்மா கமிஷன், உச்சநீதிமன்றம் ஆகியவை வலியுறுத்தியிருப்பதுபோல சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றவேண்டும்.
4. ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் ஐம்பது விழுக்காட்டுக்குமேல் வாக்குகளைப் பெற்றால்தான் வெற்றி என சட்டத் திருத்தம் செய்யப்படவேண்டும்.
5. சாதி சங்கத்தை அரசியல் கட்சியாகப் பதிவுசெய்வதையும் , சாதி சங்கத்தையும் அரசியல் கட்சியையும் ஒருசேர நடத்துவதையும் தடைசெய்யவேண்டும். சாதி சங்கங்களில் அங்கம் வகிப்போர் எந்தத் தேர்தலிலும் போட்டியிடமுடியாது என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்படவேண்டும்.
இவை ஒருசில ஆலோசனைகள்தான். சமூக அக்கறையுள்ளோர் இன்னும் பலவற்றை முன்மொழியலாம்.
No comments:
Post a Comment