Showing posts with label iyothee thass. Show all posts
Showing posts with label iyothee thass. Show all posts

Tuesday, December 4, 2012

இந்திரர் தேச சரித்திரம் - அயோத்திதாசப் பண்டிதர்

( அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய இந்திரர் தேச சரித்திரம் என்னும் நூலை இங்கே தொடராக வெளியிடவுள்ளேன். இது முதல் பகுதி ) 



 இந்திரம் என்னும் மொழி ஐந்திரமென்னும் மொழியின் திரிபாகும். அதாவது, மகதநாட்டுச் சக்ரவர்த்தித் திருமகன் சித்தார்த்தி சக்ரவர்த்தி அவர்கள் கல்லாலடியில் வீற்றிருந்து ஐம்பொறிகளை வென்ற திரத்தால் ஐந்திரரென்று ஐ என்பது இ  யாகத் திரிந்து இந்திரரென வழங்கியது. அவரது சங்கத்தோர் நிலைத்த இடங்களுக்கு இந்திர வியாரமென்றும் அவரது உற்சாகங் கொண்டாடும் காலத்திற்கு இந்திரவிழா நாள், இந்திர விழாக்கோலென்றும் பெயரிட்டார்கள். இந்திரவிழாக் கொண்டாடும் காலங்களில் எல்லாம் மழை பெய்வதன் அனுபவம் கண்டு மழைக்கு முன் காட்சியாகும் வானவில்லிற்கு இந்திரதனுசென்றும், அவரை எக்காலும் சிந்தித்துக் கொண்டாடும் கூட்டத்தோருக்கு இந்தியர்களென்றும், இந்தியர்கள் வாசஞ்செய்யும் தேசத்திற்கு இந்தியமென்றும், இந்திரமென்றும் வழங்கி வந்தார்கள்.

 பண்டைய நாட்களில்  இத்தேசத்தைப் பரதகண்டம் என்று வழங்கியதும் உண்டு, காரணம் என்னவெனில் ஆதியில் இத்தேசத்தோர் சித்தார்த்தித் திருமகனை வரதரென்று கொண்டாடி வந்தார்கள். அதாவது, மக்களுக்கு அறததை போதித்தது கண்டு வரதர், பரதரென்றும், அவர் போதித்துள்ள ஆதிவேதமாம் முதல் நூலுக்கு “வரதன் பயந்த முதநூலென்றும்”, அவரைக் கொண்டாடிய இந்தத் தேசத்திற்கு வடபரதம் தென்பரதம் என்றும் கொண்டாடி வந்தார்கள்.
 இத்தகையக் கொண்டாட்டம் பரதரென்னும் பெயரால் சிறப்பாகச் செய்யப்படாமல் இந்திரரென்னும், பெயரிலே விழாக்களையும், வியாரங்களையும் சிறப்பாகச் செய்யப்பட்ட  காரணத்தால் இத்தேச மக்களை இந்தியர்க ளென்றும், இத் தேசத்தை இந்திய தேசமென்றும் வழங்கி வந்தார்கள். அதுகொண்டு வட இந்தியமென்றும், தென் இந்திய மென்றும் பிரபலப் பெயருண்டாயிற்று.

 அருங்கலைச் செப்பு
 இந்தியத்தை வென்றான் தொடர்பாட்டோடாரம்பர
 முந்தி துறந்தான் முநி.

 மணிமேகலை
 இந்திரரெனப்படு மிறைவ நம்மிறைவன்
 றந்தநூற்பிடகம் மாத்திகாயமதென்

 சூளாமணி
 மாற்றவர் மண்டில மதனுளூழியா
 லேற்றிழி புடையன விரண்டுகண்டமாந்
 தேற்றிய விரண்டினுந் தென்முகத்தது
 பாற்றரும் புகழினாய் பரதகண்டமே.

 சூளாமணி

 வேறு
 கந்துமாமணித்திரள் கடைந்த செம்பொனீள்சுவர்
 சந்துபோழ்ந்தியற்றிய தகடுவேய்ந்து வெண்பொச்ல்
 இந்திரன் றிருக்க குரிமெயோடு மிவ்வழி
 வந்திருந்தவண்ணமே அண்ணல்கோயில் வண்ணமே.

  அந்நாளில் இந்திரர் தேசத்தின் ஆதிபாஷையாகும் மகிடபாஷை என்னும் பாலியை வரிவடிவமின்றி ஒலிவடிவமாகவே பேசிவந்தார்கள். அப்போது ஆதிபகவனாகும் புத்தபிரான் ஓதி வைத்த ஆதிவேதமொழி, ஆதிமறைமொழி என்னும் திரிபீட வாக்கியங்களாம் மூவரு மொழிகளை வரிவடிவின்றி ஒலிவடிவ சுருதியாக போதிக்கவும் அதனைக் கேட்போர் சிந்தித்துத் தெளிவடைவதுமாக இருந்தனர். சிலர் கேட்டும் அவரவர்கள் மனதிற் படியாமல் சுருதி மயக்கங்கண்டனர். அதை’ கண்ட புத்தபிரான் சகடபாஷை எனப்படும்  சமஸ்கிருதத்தையும், திராவிட பாஷை என்று அறியப்படும் தழிழையும் வரிவடிவாக இயற்றி ஜினனென்னும் தனது பெயர் பெற்ற மலையில் வரிவடிவால் திரிசீலம், பஞ்சசீலம், அஷ்டசீலம், தசசீலமென்னும் மெய்யறங்களை வரைந்து சகல மக்கள் மனதிலும் பதியச்செய்தார். அதுமட்டுமின்றி இன்னும் அந்த வரிவடிவ பாஷையைத் தான் நிலைநாட்டிவருகின்ற பௌத்த சங்கத்தோர் யாவருக்கும் கற்பித்தார். சத்திய தன்மமானது மேலும் மேலும் பரவுவதற்காக ஜனகர், வாமதேவர், நந்தி, ரோமர், கபிலர், பாணினி முதலானவர்களுக்கு சமஸ்கிருதத்தையும், அகத்தியருக்குத்  திராவிட பாஷையாம் தமிழையும்  கற்பித்து ஜனகரை மகதநாட்டிற்கு வட திசையிலும், அகத்தியரை தென் திசையிலும், திருமூலரை மேற்புறத்திலும், சட்ட முனிவரை கீழ்த் திசையிலும் அனுப்பித் தானும் அந்தந்த இடங்களுக்குச் சென்று அந்த மொழிகளின் வரிவடிவங்களை ஊன்றிப் பரவச் செய்து அதன்வழியே மெய் அறமாம் புத்ததன்மத்தையும் பரவச்செய்தார்.
 வீரசோழியப் பதிப்புரை

 சிவஞான யோகியார்

 இருமொழிக்குங் கண்ணுதலார் முதல் குரவ ரியல் வாய்ப்ப
 இருமொழியும் வழிபடுத்தார் முனிவேந்த ரிசை பரப்பும்
 இருமொழியு மான்றவரே தழீஇனாரென்றாலிங்
 கிருமொழியு நிகரென்னு மிதற்கைய முளதேயோ.

 கொல்லாற்று
 திடமுடைய மும்மொழியாந் திரிபிடக நிறைவிற்காய்
 வடமொழியை பாணினிக்கு வகுத்தருளியதற் கி?ணயாத்
 தொடர்புடையத்தென்மொழியை யுலகமெலாந் தொழுதேத்த
 குடமுநிக்கு வற்புருத்தார் கொல்லாற்றுபாகர்.

 முன்கலை திவாகரம்
 வடநூற்காசன் றென்றமிழ்க் கவிஞன்
 கவியாங்கேற்று முபயக்கவி புலவன்
 செயுகுணத்தம்பற் கிழவோன் சேந்த
 னறிவுகரியாக தெரிசொற் றிவாகரத்து
 முதலாவது தெய்வப்பெயர் தொகுதி.

 வீரசோழியம்
 பாயிரம்
 ஆயுங்குணத்தவ லோகிதன்பக்கல் அகத்தியன்கேட்
 டேயும்பவனிக் கியம்பியதண்ட மிழீங்குரைக்க
 நீயுமு?ளயோவெனிற் கருடன்சென்ற நீள்விசும்பி
 லீயும்பரக்கு மிதற்கென்கொலோ சொல்லுமேந்திழையே

 தொல்காப்பியம்
 மயங்கா மரபினெழுத்து முறைகாட்டி
 மங்குநீர் வரைப்பி னைந்திரர்.

 சிலப்பதிகாரம்
 கண்களி மயக்கத்துக் காதலோடிருந்த
 தண்டமிழாசான் சாத்தனிஃதுரைக்கு

 பதஞ்சலியார் ஞானம்
 வசனசக்தி கபிலாதி மாமுனிவர் மகிதான ஜனகாதியும்
 வாமரோம முனிநந்தி தேவன் வடபாஷையோதினர்கள் வண்மெயே
 மேருலாவுவட வீதிதோருமுயர் வேதஞான ஜனகாதியர்
மேலைவீதிதிரு மூலவர்க்கமிக வேயிருந்து விளையாடினார்
பாருங்கீழ்திசையி லேயிருந்து தமிழ் பாஷையோதினன் அகத்தியன்
( தொடரும் ) 

Wednesday, November 28, 2012

பண்டிகைகள் : அயோத்திதாசப் பண்டிதர் விளக்கம்


தமிழ்நாடில் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகள் குறித்து அயோத்திதாசப் பண்டிதர் கூறியிருக்கும் விளக்கம்

ஸ்ரீ அம்பிகையம்மன் பண்டிகை

(‘‘ஆடி மாதம் பௌர்ணமி அல்லது ஓர் ஆதிவாரத்தில் கொண்டாடப்படுவது’’)
1. இவ்வம்மன் குடிகளுக்குற்ற மாறியென்னுங் கொடுநோய் விலக்கத் தாமிருந்த வேம்புமர இலை முதலியதால் மாறியை யாற்றி ஆரோக்கியத்தை யளித்தவளாதலின் ‘‘மாறியாற்றாள், ஆரோக்கியநாயகி’’ என்ற சிறப்புப்பெயர் பெற்றதுடன்; ஆத்திச்சுவடி, குன்றைவேந்தன், மூதுரை முதலிய நூற்களைக் கற்பித்து ஔவையாரென்ற பெயரும் பெற்றார். சிலர் மாரி, மாயியென்றும்; சிலர், எங்கள் சாமியின் மனைவியென்றும், புகழ்ந்து மிகழ்ந்து மிருக்கின்றார்கள்.

ஸ்ரீமுருகன் பண்டிகை
(கார்த்திகை மாதம் கொண்டாடப்படுவது)

2. இவருலகோபகாரமாய் மஞ்சளும் அரக்குஞ் சேர்த்து மயில் போன்ற வடிவில் ஓர்ஆகாய கமனஞ்செய்துதவினார். அக்கமனம் மஞ்ஞை எனப்படும். ஒருசாராரிவரை எங்கள் சாமியின் படைக்குச் சேனாதிபதியெனவும், சாமியின் புத்திரனெனவும் புகழ்ந்து, பிறப்பு முதலியவைகளைப் பிறரிகழ வைத்திருக்கின்றார்கள்.

ஸ்ரீமாபலியன் பண்டிகை 
(‘‘புரட்டாசி மாதம் அமரவாசியில் கொண்டாடப்படுவது’’)

(மாளிய அமரவாசி) இது மாபலி அமரவாசியாகும்
3. இவர் திருவேங்கிடகிரியில் பூர்வவேதாந்திகள் தங்கி அறமளிக்கத் தக்க வியாரங்களை ஸ்தாபித்து; புத்ததர்ம ஒழுக்கப்படி சிரமுண்டிதமும், மஞ்சளாடையுமேற்று சங்கஞ்சார்ந்து தர்மாபிவிர்த்திக் காவலனாய் விளங்கி புத்ததர்ம (வாயில் காப்போன்) வழிகாட்டி யென்ற பெயர் பெற்றார். ஒருசார்பார்நெய்திருடியபெருச்சாளி யிவரென்றும், மற்றொரு சார்பார், எங்கள் சாமியின் வீட்டுவாசலில் காத்திருந்தாரென்றும் (சேவகன்) எங்கள் தேவனே யிவரைக் கொலைச்செய்தாரென்றும், உயர்த்தியுந் தாழ்த்தியு மிருக்கின்றார்கள்.
இத்தேவர்களைப்போலவே, இராகுலர், திருவள்ளுவர் முதலியவர்களுமாகுவரெனினும் அவர்களினாட்கள் முதலியவற்றை விளக்கினால் விரியுமென்றஞ்சி நிறுத்தப்பெற்றது.

குறிப்பு : இங்கெடுத்தோதிய தேவர்களின் மெய்ச்சரித்திரங்களெல்லாம், பொய்ச்சரித்திரங்களில் மாற்றிக் கூட்டப்பெற்றிருப்பது, பௌத்த சங்கங்கட்கன்றி யேனையோர்க்கு மனநோக்காடாகா. அதேனெனில், தேவேந்திரன் பெயரும், வேதமும், குருக்களும், கோவில்களும், அரசர்களும், குடிகளுங்கெட, பலபொய்ச் சரித்திரங்களை யெழுதிவிட்டவாறே, புத்தகுருவுக்குப்பின் விளங்கிய அடியார்களின் சரித்திரங்களையும் பல தூஷணமொழியால் இழிவுபடுத்திவிட்டார்கள். ஆகையால், யதார்த்த வேதாந்திகள் மூலமாய் நடத்தும் சுதேஸதெய்வ (புத்த) சங்கஞ்சார்ந்து மெய்ப்பொருளறிய பௌத்த தூதர்கள் வேண்டுகின்றோம்.

Friday, July 29, 2011

'வேஷப் பிராமணரும்' 'தமிழ்ப் பிராமணரும்' - எதிர்வினை 1 நாக.இளங்கோவன்

எனக்குப் பட்டதை இங்கு எழுதுகிறேன்:

20 ஆம் நூற்றாண்டுக்கு முன் பின் என்று இரண்டு கோணங்களில் காணலாம்.

1) வடசொல் மீது மோகமும் அதுவே உயர்வு என்று எண்ணி அப்படித் தங்களை அழைத்துக் கொண்டிருக்கலாம்
என்று கருத வாய்ப்புள்ளது. மணிப்பிரவாள காலங்களில் இது தொடங்கி இருக்கக் கூடும். வடக்கே உள்ள பார்ப்பனர்கள் பிராமனர் என்று அழைத்துக் கொள்வதை ஒட்டி தாங்களும் அப்படி அழைக்கப் படுவதையே விரும்புகிறார்கள் என்று கருதலாம். அதோடு இந்தியப் பொது அடையாளமாக இதனைக் கருதுகிறார்களோ என்று எண்ணவும் இடம் இருக்கிறது.

ஐயரும் ஐயங்காரும் எப்படிப் பிராமணர் என்ற பொதுப்பெயரில் இந்திய அடையாளமிட்டுக் கொள்கிறார்களோ,
அப்படியே பள்ளர் பறையர் என்ற தலித்துகளும் பொதுப்பெயரில் இந்திய அடையாளமிட்டுக் கொள்கிறார்கள் என்று கருதஇடம் இருக்கிறது.

பார்ப்பனர் மற்றும் தலித்து வகுப்பினர் இப்படி நினைக்கிறார்களே பிறர் அப்படி நினைக்கவில்லையே ஏன் என்று
யாரும் கேட்கலாம். அவர்களுக்கு வேறெங்கேயும் யாருடனும் ஒட்டு இல்லை. அப்படி இருந்திருந்தால் கவுண்டன் எப்பவோ சிறீகவுண்டன் ஆகியிருப்பான். முதலி எப்பவோ முதலிசிறீ ஆகியிருப்பான். வடமொழி மோகம் என்பது மேட்டுக்குடியின் அடையாளம். அதற்குப் பார்ப்பனர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. வையாபுரிப்பிள்ளைக்குத் தோதாக ஒரு சாதி வடக்கே இருந்திருந்தால் தன் சாதிப்பெயரை பிள்ளைவாள் எப்பொழுதோ மாற்றிக் கொண்டிருப்பார்.

2) திராவிட இயக்கங்களின் எழுச்சி பார்ப்பன சாதியை வைவதிலேயே தொடங்கியது. அப்படிச் செய்ததில்
இரண்டு நோக்கங்களை அது கொண்டிருந்ததது என்று கருத இடம் இருக்கிறது. ஒன்று, பார்ப்பனர்கள் செய்த மேலாதிக்கத்தையும், அவர்கள் ஒழுகிய/ஒழுகுகின்ற வைதீகத்தின் வருணம், தீண்டாமை உள்ளிட்ட குமுகச் சமனுக்கு ஒவ்வாத சங்கதிகளையும் மறுப்பதற்காக அவர்களின் சாதியைச் சொல்லி வைததாகவே காணக்கிடைக்கிறது.

மற்றொன்று, பார்ப்பனர்களுடன் ஆன பங்காளித்துவ போரில், பார்ப்பனரல்லாதவர்களை ஒன்று சேர்ப்பதற்காக
நடத்தப்பட்ட நாடகமே "பார்ப்பனன் என்று சாதியைச் சொல்லி வைதது" என்று வலுவாகச் சொல்லமுடிகிறது. ஏனென்றால், வைதீக வருணத்தையும், மேட்டுக்குடித் தனத்தையும் காட்டியவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமல்ல. சாதித்தமிழர்கள் என்று நீங்கள் சொன்னீர்களே, அந்த மேட்டுக்குடியானவர்களும் வைதீக வருண, தீண்டாமையின் பங்காளிகள்தான். பார்ப்பனர் மட்டும் இந்தக் கொடுமையைச் செய்யவில்லை. சொல்லப்போனால் பார்ப்பனரை விட பல மடங்கு அதிகமாகச் செய்தவர்கள் இந்த மேட்டுக் குடியானவர்கள்தான். அதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்வேன்: பார்ப்பன சாதியை இகழ்ந்து ஏடுகளிலும் நேரடியாகவும் எங்கும் பேசமுடிகிறது (இதற்குத் தமிழ்ப்பற்று என்று வேறு பெயர் வைத்து விட்டது கேவலமான ஒன்று). ஆனால், பார்ப்பனரல்லாத எந்தச் சாதியினரையும் சாதியைச் சொல்லி இகழ்ந்து பேசிவிடமுடியாது. அப்படிச் செய்தால் தமிழ்நாடு பற்றி எரியும். எரிந்திருக்கிறது. அதைக் கண்டித்துக் கொண்டே அதுவும் பார்ப்பானின் சூழ்ச்சி என்று திராவிட இயக்கங்கள் பொய் பேசின; சாதித்தமிழர்களை அவர்களின் அழுக்கு வெளியே தெரியாமல் அரணாக இருந்தன. 

ஆக, பெருந்தீங்கு செய்த பல குடியானச் சாதிகள் தாம் செய்த அடாவடிகளை அட்டூழியங்களை மறைக்க அத்தனை அடாவடிகளையும் பார்ப்பனச் சாதியின் மேல் மட்டும் பழி போட்டுக் கூட்டுக் கொள்ளையடித்திருக்கின்றன தமிழ்நாட்டில் என்று வலுவாக நம்ப இடம் இருக்கிறது. 
திராவிட மோசடி என்பது இதுதான். 

இதனால் பார்ப்பனர் என்ற சொல் அவமாகப் பார்க்கப்பட்டிருக்கலாம். பள்ளர் பறையர் என்று இளக்காரமாக மேட்டுக்குடியினர் பேசியதால் ஏற்பட்ட அவத்தைப் போக்கவே தலித்து என்று அழைத்துக் கொள்கின்றனர் என்று
சிலர் சொல்வதுண்டு. அது போலவே பார்ப்பனர் என்ற சொல் அவமாகப் பார்க்கப் படுகின்றது என்று சொல்ல
இடமுண்டு.

திராவிடக் கட்சிகள் நேர்மையானதாக இருந்திருந்தால் பார்ப்பனரல்லாதார் செய்யும் அடாவடிகளையும்
கண்டித்திருக்கும். ஆனால் அதைச் செய்யவில்லை. மாறாக ஒன்றுபட வேண்டும் ஒன்றுபடவேண்டும்
என்று சொல்லியே அனைவரையும் பிரித்து வைத்திருக்கிறது கடந்த 50 ஆண்டுகளில். ஞாயமாக,
திராவிட இயக்கங்கள் நேர்மையாக இருந்திருந்தால் தலித்து இயக்கங்களோ அல்லது வன்னியர், முக்குலத்தோர்,
நாடார், கொங்கர் அமைப்புகள் தோன்றியிருக்க வேண்டியிருக்காது. அதேபோல இந்தியாவை ஆளுகின்ற காங்கிரசு இயக்கம் நேர்மையானதா என்றால் அது 100 திராவிடங்களுக்குச் சமம் :)

அன்புடன்
நாக.இளங்கோவன்