அரசாங்கம் ஆண்டுதோறும் பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை அரிசி கரும்பு வழங்குவதன்மூலம் வெளிப்படுவது ஆள்வோரின் கருணையா? தமிழ் மக்களின் இழி நிலையா?
தமிழக அரசின் சார்பில் இந்த ஆண்டு 3.24 கோடி வேட்டி சேலைகள் வழங்க 487 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இது உண்மையிலேயே பயனுள்ள செலவுதானா?
1983 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்துக்காக கடந்த 34 ஆண்டுகளில் செலவான தொகை எத்தனை ஆயிரம் கோடி?
இலவச வேட்டி சேலைக்கென செலவிடப்பட்ட சுமார் 10000 கோடியில் வறுமை ஒழிப்புத் திட்டங்களை செயல்படுத்தியிருந்தால் தமிழ்நாடு இப்படியிருக்குமா?
இலவச வேட்டி சேலை திட்டம் இடைத்தரகர்களின் பாக்கெட்டுகளை நிரப்பவே பயன்படுகிறது. சுயமரியாதை உள்ள தமிழர்கள் இந்தத் திட்டத்தை ஏற்கலாமா?