Friday, March 27, 2015

’பலி ஆடுகள்’ நாடக நிகழ்வுக்குத் தடை!

கருத்துரிமைப் பறிப்பில் புதுவைப் பல்கலைக் கழகம்!

தொல்.திருமாவளவன் கண்டனம்

உலக நாடக நாளான இன்று ( 27.03.2015 ) புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளியின் சார்பில் அந்தத் துறையின் தலைவரும் புகழ்பெற்ற நாடக இயக்குனர்களில் ஒருவருமான டாக்டர் கே.ஏ.குணசேகரன் அவர்களது இயக்கத்தில் ‘ பலி ஆடுகள் ‘ என்ற நாடகத்தை நிகழ்த்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அந்த நாடகம் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அரங்கேற்றப்பட்டதாகும். எல்லா சமூகங்களிலும் பெண்களே பலி ஆடுகளாக ஆக்கப்படுகிறார்கள் என்ற கருத்தை கல்வெட்டு ஒன்றை ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்த நாடகம் முதன்முதலாக அரங்கேற்றப்பட்டபோது ஊடகங்களால் பாராட்டப்பட்ட பெருமை கொண்டது.

கடந்த இரண்டு மாதங்களாக அந்த நாடகத்துக்கான ஒத்திகைகளிலும் பயிற்சிகளிலும் மாணவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். உலக நாடக நாளையொட்டி கடந்த மூன்று நாட்களாக புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. அதில் புகழ்பெற்ற நாடக ஆசிரியர்களான பேராசிரியர்கள் இந்திரா பார்த்தசாரதி, டாக்டர் அ.ராமசாமி,இலங்கையிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்புலத் தலைவர் திரு சிதம்பரநாதன், பேராசிரியர் அறிவுநம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கிவருகின்றனர். அதன் நிறைவு நாளான இன்று மாலை அந்த நாடகம் நிகழ்த்தப்படுவதாக இருந்தது.

இந்நிலையில் நேற்று ( 26.03.2015) இரவு சுமார் ஒன்பது மணியளவில் டாக்டர் கே.ஏ.குணசேகரன் அவர்களைத் தொலைபேசியில் அழைத்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ’ நீங்கள் போடவிருக்கும் நாடகம் பிராமணர்களை விமர்சிப்பதாக இருப்பதாக எனக்கு ஃபோன் வந்தது. அந்த நாடகத்தைப் போடக்கூடாது.நிறுத்திவிடுங்கள்’ என்று ஆணையிட்டிருக்கிறார். துணைவேந்தர் அனுமதி மறுத்ததால் அந்த நாடகம் இன்று நடத்தப்பட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

புதுச்சேரிப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என ஆசிரியர்களும் மாணவர்களும் போராட்டங்களை நடத்திவருகின்றனர். அவர் தனது கல்வித் தகுதி குறித்துப் பொய்யான விவரங்களைக் கொடுத்திருக்கிறார் என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்னரும் ஆட்சியிலிருக்கும் சில அரசியல்வாதிகளின் ஆதரவின் காரணமாகவே அவர் பதவியில் இன்னும் நீடித்து வருகிறார். இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைப் பள்ளியில் நடக்கவிருந்த நாடக நிகழ்வை சாதியைக் காரணமாகச் சொல்லி தடை விதித்திருக்கிறார். இது மிகவும் கண்டனத்துக்குரியது.

பலி ஆடுகள் நாடகத்துக்கு புதுச்சேரிப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் விதித்த தடையை உடனே நீக்கவேண்டும். அந்த நாடகத்தை பல்கலைக்கழகத்தில் நடத்த அனுமதிக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.



Thursday, March 26, 2015

தோழர் ஏ.பி.பரதன் அவர்களை சந்தித்தேன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டுக்காக புதுச்சேரிக்கு வந்திருக்கும் தோழர் ஏ.பி.பரதன் அவர்களை இன்று (27.3.2015) சந்தித்தபோது 

Sunday, March 22, 2015

The Price of Shame- Monica Lewinsky

You're looking at a woman who was publicly silent for a decade. Obviously, that's changed, but only recently.

It was several months ago that I gave my very first major public talk at the Forbes 30 Under 30 summit: 1,500 brilliant people, all under the age of 30. That meant that in 1998, the oldest among the group were only 14, and the youngest, just four. I joked with them that some might only have heard of mefrom rap songs. Yes, I'm in rap songs.Almost 40 rap songs. (Laughter)

But the night of my speech, a surprising thing happened. At the age of 41, I was hit on by a 27-year-old guy. I know, right? He was charming and I was flattered, and I declined. You know what his unsuccessful pickup line was? He could make me feel 22 again. (Laughter) (Applause) I realized later that night, I'm probably the only person over 40 who does not want to be 22 again.(Laughter) (Applause)

At the age of 22, I fell in love with my boss,and at the age of 24, I learned the devastating consequences.

Can I see a show of hands of anyone herewho didn't make a mistake or do something they regretted at 22? Yep. That's what I thought. So like me, at 22, a few of you may have also taken wrong turns and fallen in love with the wrong person, maybe even your boss. Unlike me, though, your bossprobably wasn't the president of the United States of America. Of course, life is full of surprises.

Not a day goes by that I'm not reminded of my mistake, and I regret that mistake deeply.

In 1998, after having been swept up into an improbable romance, I was then swept up into the eye of a political, legal and media maelstrom like we had never seen before.Remember, just a few years earlier, news was consumed from just three places:reading a newspaper or magazine, listening to the radio, or watching television. That was it. But that wasn't my fate. Instead, this scandal was brought to you by the digital revolution. That meant we could access all the information we wanted, when we wanted it, anytime, anywhere, and when the story broke in January 1998, it broke online. It was the first time the traditional news was usurped by the Internet for a major news story, a click that reverberated around the world.

What that meant for me personally was that overnight I went from being a completely private figure to a publicly humiliated one worldwide. I was patient zero of losing a personal reputation on a global scale almost instantaneously.

This rush to judgment, enabled by technology, led to mobs of virtual stone-throwers. Granted, it was before social media, but people could still comment online, email stories, and, of course, email cruel jokes. News sources plastered photos of me all over to sell newspapers, banner ads online, and to keep people tuned to the TV. Do you recall a particular image of me,say, wearing a beret?

Now, I admit I made mistakes, especially wearing that beret. But the attention and judgment that I received, not the story, but that I personally received, was unprecedented. I was branded as a tramp,tart, slut, whore, bimbo, and, of course, that woman. I was seen by many but actually known by few. And I get it: it was easy to forget that that woman was dimensional,had a soul, and was once unbroken.

When this happened to me 17 years ago, there was no name for it. Now we call it cyberbullying and online harassment. Today, I want to share some of my experience with you, talk about how that experience has helped shape my cultural observations, and how I hope my past experience can lead to a change that results in less suffering for others.

In 1998, I lost my reputation and my dignity.I lost almost everything, and I almost lost my life.

Let me paint a picture for you. It is September of 1998. I'm sitting in a windowless office room inside the Office of the Independent Counsel underneath humming fluorescent lights. I'm listening to the sound of my voice, my voice on surreptitiously taped phone calls that a supposed friend had made the year before.I'm here because I've been legally requiredto personally authenticate all 20 hours of taped conversation. For the past eight months, the mysterious content of these tapes has hung like the Sword of Damocles over my head. I mean, who can remember what they said a year ago? Scared and mortified, I listen, listen as I prattle on about the flotsam and jetsam of the day; listen as I confess my love for the president, and, of course, my heartbreak; listen to my sometimes catty, sometimes churlish, sometimes silly self being cruel, unforgiving, uncouth; listen, deeply, deeply ashamed, to the worst version of myself, a self I don't even recognize.

A few days later, the Starr Report is released to Congress, and all of those tapes and transcripts, those stolen words, form a part of it. That people can read the transcripts is horrific enough, but a few weeks later, the audio tapes are aired on TV, and significant portions made available online. The public humiliation was excruciating. Life was almost unbearable.

This was not something that happened with regularity back then in 1998, and by this, I mean the stealing of people's private words, actions, conversations or photos, and then making them public -- public without consent, public without context, and public without compassion.

Fast forward 12 years to 2010, and now social media has been born. The landscape has sadly become much more populated with instances like mine, whether or not someone actually make a mistake, and now it's for both public and private people. The consequences for some have become dire, very dire.

I was on the phone with my mom in September of 2010, and we were talking about the news of a young college freshman from Rutgers University named Tyler Clementi. Sweet, sensitive, creative Tylerwas secretly webcammed by his roommatewhile being intimate with another man.When the online world learned of this incident, the ridicule and cyberbullying ignited. A few days later, Tyler jumped from the George Washington Bridge to his death.He was 18.

My mom was beside herself about what happened to Tyler and his family, and she was gutted with pain in a way that I just couldn't quite understand, and then eventually I realized she was reliving 1998,reliving a time when she sat by my bed every night, reliving a time when she made me shower with the bathroom door open,and reliving a time when both of my parents feared that I would be humiliated to death,literally.

Today, too many parents haven't had the chance to step in and rescue their loved ones. Too many have learned of their child's suffering and humiliation after it was too late. Tyler's tragic, senseless death was a turning point for me. It served to recontextualize my experiences, and I then began to look at the world of humiliation and bullying around me and see something different. In 1998, we had no way of knowing where this brave new technologycalled the Internet would take us. Since then, it has connected people in unimaginable ways, joining lost siblings,saving lives, launching revolutions, but the darkness, cyberbullying, and slut-shaming that I experienced had mushroomed. Every day online, people, especially young peoplewho are not developmentally equipped to handle this, are so abused and humiliatedthat they can't imagine living to the next day,and some, tragically, don't, and there's nothing virtual about that. ChildLine, a U.K. nonprofit that's focused on helping young people on various issues, released a staggering statistic late last year: From 2012 to 2013, there was an 87 percent increase in calls and emails related to cyberbullying. A meta-analysis done out of the Netherlandsshowed that for the first time, cyberbullying was leading to suicidal ideations more significantly than offline bullying. And you know what shocked me, although it shouldn't have, was other research last year that determined humiliation was a more intensely felt emotion than either happiness or even anger.

Cruelty to others is nothing new, but online, technologically enhanced shaming is amplified, uncontained, and permanently accessible. The echo of embarrassment used to extend only as far as your family, village, school or community, but now it's the online community too. Millions of people, often anonymously, can stab you with their words, and that's a lot of pain, and there are no perimeters around how many people can publicly observe you and put you in a public stockade. There is a very personal price to public humiliation, and the growth of the Internet has jacked up that price.

For nearly two decades now, we have slowly been sowing the seeds of shame and public humiliation in our cultural soil, both on- and offline. Gossip websites, paparazzi, reality programming, politics, news outlets and sometimes hackers all traffic in shame. It's led to desensitization and a permissive environment online which lends itself to trolling, invasion of privacy, and cyberbullying. This shift has created what Professor Nicolaus Mills calls a culture of humiliation. Consider a few prominent examples just from the past six months alone. Snapchat, the service which is used mainly by younger generations and claims that its messages only have the lifespan of a few seconds. You can imagine the range of content that that gets. A third-party app which Snapchatters use to preserve the lifespan of the messages was hacked, and 100,000 personal conversations, photos, and videos were leaked online to now have a lifespan of forever. Jennifer Lawrence and several other actors had their iCloud accounts hacked, and private, intimate, nude photos were plastered across the Internet without their permission. One gossip website had over five million hits for this one story. And what about the Sony Pictures cyberhacking? The documents which received the most attention were private emails that had maximum public embarrassment value.

But in this culture of humiliation, there is another kind of price tag attached to public shaming. The price does not measure the cost to the victim, which Tyler and too many others, notably women, minorities, and members of the LGBTQ community have paid, but the price measures the profit of those who prey on them. This invasion of others is a raw material, efficiently and ruthlessly mined, packaged and sold at a profit. A marketplace has emerged where public humiliation is a commodity and shame is an industry. How is the money made? Clicks. The more shame, the more clicks. The more clicks, the more advertising dollars. We're in a dangerous cycle. The more we click on this kind of gossip, the more numb we get to the human lives behind it, and the more numb we get, the more we click. All the while, someone is making money off of the back of someone else's suffering. With every click, we make a choice. The more we saturate our culture with public shaming, the more accepted it is, the more we will see behavior like cyberbullying, trolling, some forms of hacking, and online harassment. Why? Because they all have humiliation at their cores. This behavior is a symptom of the culture we've created. Just think about it.

Changing behavior begins with evolving beliefs. We've seen that to be true with racism, homophobia, and plenty of other biases, today and in the past. As we've changed beliefs about same-sex marriage,more people have been offered equal freedoms. When we began valuing sustainability, more people began to recycle.So as far as our culture of humiliation goes,what we need is a cultural revolution. Public shaming as a blood sport has to stop, and it's time for an intervention on the Internet and in our culture.

The shift begins with something simple, but it's not easy. We need to return to a long-held value of compassion -- compassion and empathy. Online, we've got a compassion deficit, an empathy crisis.

Researcher Brené Brown said, and I quote,"Shame can't survive empathy." Shame cannot survive empathy. I've seen some very dark days in my life, and it was the compassion and empathy from my family, friends, professionals, and sometimes even strangers that saved me. Even empathy from one person can make a difference. The theory of minority influence, proposed by social psychologist Serge Moscovici, says that even in small numbers, when there's consistency over time, change can happen.In the online world, we can foster minority influence by becoming upstanders. To become an upstander means instead of bystander apathy, we can post a positive comment for someone or report a bullying situation. Trust me, compassionate comments help abate the negativity. We can also counteract the culture by supporting organizations that deal with these kinds of issues, like the Tyler Clementi Foundation in the U.S., In the U.K., there's Anti-Bullying Pro, and in Australia, there's Project Rockit.

We talk a lot about our right to freedom of expression, but we need to talk more aboutour responsibility to freedom of expression.We all want to be heard, but let's acknowledge the difference between speaking up with intention and speaking up for attention. The Internet is the superhighway for the id, but online, showing empathy to others benefits us all and helps create a safer and better world. We need to communicate online with compassion,consume news with compassion, and click with compassion. Just imagine walking a mile in someone else's headline. I'd like to end on a personal note. In the past nine months, the question I've been asked the most is why. Why now? Why was I sticking my head above the parapet? You can read between the lines in those questions, and the answer has nothing to do with politics.The top note answer was and is because it's time: time to stop tip-toeing around my past;time to stop living a life of opprobrium; and time to take back my narrative.

It's also not just about saving myself.Anyone who is suffering from shame and public humiliation needs to know one thing:You can survive it. I know it's hard. It may not be painless, quick or easy, but you can insist on a different ending to your story.Have compassion for yourself. We all deserve compassion, and to live both online and off in a more compassionate world.

Thank you for listening.

(Applause)

Monday, March 16, 2015

காந்தியைப் பின்பற்ற ஆர்.எஸ்.எஸ் திட்டம்? -ரவிக்குமார்



இந்து மதத்திலிருக்கும் சாதி வேற்றுமையை நீக்க 'ஒரே கிணறு ஒரே கோயில் ஒரே மயானம்' என்ற செயல் திட்டத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பின்பற்றப்போவதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முடிவுசெய்திருக்கிறது- (தினமலர் செய்தி)

கிணறு கோயில் மயானம் எல்லாம் ஒன்றாக இருக்கவேண்டுமென்றால் குடியிருப்பு ஒன்றாக இருக்கவேண்டுமல்லவா? அதைப்பற்றிப் பேசாததன் மர்மம் என்ன? ஊர் என்றும் சேரி என்றும் இந்தியாவின் கிராமங்கள் அத்தனையும் இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுக் கிடக்கின்றனவே அதை எப்படி ஒன்று சேர்ப்பீர்கள்? 

மத்தியில் இதற்காக சட்டம் கொண்டுவருவார்களா? பாஜக ஆளும் மாநிலங்களில் இதை செயல்படுத்துவார்களா? இந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்பவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ்சிலும் பிற பரிவார அமைப்புகளிலும் உறுப்பினர்களாக இருக்கமுடியும் என நிபந்தனை விதிப்பார்களா? 

அது என்ன மூன்று ஆண்டு கணக்கு?  ஆயிரம் ஆண்டுகளாக வளர்த்த பிரிவினையை மூன்று ஆண்டுகளில் சரிசெய்துவிடலாம் என அவர்கள் கருத வாய்ப்பில்லை. ஒற்றுமை என்ற போலி வாக்குறுதியைக் கொடுத்து தலித்துகளை இந்து மதத்தின் கோரப்பிடிக்குள் இறுத்தி வைப்பதற்கான தந்திரமே இது. 

காந்தியை எதிர்ப்பவர்கள் தீண்டாத மக்களை ஏய்ப்பதற்கு காந்தி கையாண்ட மோசடி வழிமுறையையே கடைபிடிக்க முயல்வது நகைமுரண் அல்லாமல் வேறென்ன? 

Sunday, March 15, 2015

ஈழப் போராட்ட முன்னோடி கி.பி.அரவிந்தன்( 1953-2015) மறைந்தார்





ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் கவிஞருமான கி.பி.அரவிந்தன் இன்று காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். 1972 முதல் ஈழப் போராட்டக் களத்தில் முன்னின்றவர். அவர் நடத்திவந்த புதினப்பலகை இணையதளம் அவரது ஆழ்ந்த அரசியலறிவுக்கும், பொறுப்புணர்வுக்கும் சான்று பகரும். அதிலிருந்து பல கட்டுரைகளை அவரது அனுமதிபெற்று மணற்கேணியில் வெளியிட்டிருக்கிறேன். நானும் அந்த இணையதளத்துக்கு பங்களிப்புச் செய்திருக்கிறேன். ஈழப் போராட்ட களத்தில் எஞ்சியிருந்த ஒருசில சிந்தனையாளர்களில் கி.பி.அரவிந்தன் ஒருவர். 

இன்று ஈழத் தமிழினத்தின் முதன்மையான பிரச்சனைகளில் ஒன்று காழ்ப்புணர்வில்லாத சிந்தனையாளர்களின் பற்றாக்குறை. ஜனநாயக மறுப்பும் முள்ளிவாய்க்கால் யுத்தமும் பலரைக் காவுகொண்டுவிட்டன. முன்பே புலம்பெயர்ந்ததால் கி.பி.அரவிந்தன் தப்பித்தார் என நினைத்திருந்தேன். போர்ச்சூழலில் தப்பியவரைப் புற்றுநோய் காவுகொண்டுவிட்டது. 

அவரை இழந்து தவிக்கும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

- ரவிக்குமார்

Friday, March 13, 2015

அம்மாவின் தாலி - ரவிக்குமார்



அம்மா இறந்து கிடந்தார்.சடலத்தைப் பாடையில் வைப்பதற்கு முன்பு குளிப்பாட்டினார்கள். அப்போதுதான் அவரது கழுத்தில் போட்டிருந்த கயிற்றில் தாலி இல்லை என்பது தெரிந்தது. கூடியிருந்த பெண்கள் மத்தியில் அதுவே பேச்சாக இருந்தது. இறந்த பிறகு யாராவது கழற்றியிருப்பார்களோ எனப் பேசிக்கொள்வது என் காதில் விழுந்தது. நான் கண்ணீர் வற்றிப்போய் அமர்ந்திருந்தேன். 

அம்மா சாகும்போது எழுபது வயதிருக்கலாம். அதற்கு முன்பாகவே நலிந்து போய்விட்டார்கள். ஓய்வு ஒழிச்சலில்லாத உழைப்பில் வற்றிப்போன உடம்பு, பற்கள் கொட்டிப்போய் குழி விழுந்த முகம். அவரது கவலைகளின் மையம் நான் தான். தவமிருந்து பெற்ற பிள்ளை தன்னை கவனிக்கவில்லையே என்ற வருத்தத்தைவிடவும் தன் பிள்ளைக்கு எந்த ஆதரவும் இல்லையே என்ற கவலை. அந்தக் கவலையைப் போக்குவதற்கு எந்த அக்கறையையும் நான் காட்டியதில்லை. 

அப்பாவிடம் யாரோ தாலியைக் காணவில்லை என சொல்லிக்கொண்டிருந்தார்கள். திக்பிரமை பிடித்தவர்போல உட்கார்ந்திருந்த அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை. 

தாலி என்ன ஆனது என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். முதலாண்டு பிஎல் படிக்கும்போது தேர்வு எழுதுவதற்கு முன்னால் ஹாஸ்டல் கட்டணம் செலுத்தினால்தான் ஹால் டிக்கெட் என்று அண்ணாமலைப் பல்கலைக் கழக நிர்வாகம் சொல்லிவிட்டது. அப்போது அம்மாவிடம் இருந்தது தாலி தான். அதைக் கழற்றிக் கொடுத்து அடகு வைத்து கட்டணத்தை செலுத்திக்கொள் என்றார்கள். எனக்கு அடகுக் கடைக்குப் போன அனுபவம் இல்லை. எனக்குத் தெரிந்த நண்பர் கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்னேன். அவர் அதைத் தனது பெயரில் அடகுவைத்து பணத்தைக் கொண்டுவந்து கொடுத்தார். ஆறு கிராம் தாலிக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தார்கள். அதை செலுத்தி தேர்வும் எழுதிவிட்டேன். 

கிருஷ்ணமூர்த்தி ஹாஸ்டல் மாணவரில்லை. சிதம்பரநாதன்பேட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். எம்.எஸ்.சி ஜுவாலஜி படித்துக்கொண்டிருந்தார். ஒரு வருடம் ஓடிவிட்டது. அவர் படிப்பை முடித்துவிட்டு ஏதோ ஒரு ஊரில் வேலைக்கு சேர்ந்துவிட்டார். எனக்கு அவரோடு தொடர்பு இல்லாமல் போய்விட்டது. 

ஒருநாள் அம்மா என்னிடம் தாலி அடகுவைத்த சீட்டை எடுத்துக்கொடுத்து பணத்தையும் தந்து மீட்டுக்கொண்டு வரச்சொன்னார். சிதம்பரம் ஆர்.டி வேலு ஸ்டுடியோவுக்குப் பக்கத்தில் பிள்ளையார் கோயிலுக்குப் பின்னால் தான் அந்த அடகுக்கடை இருந்தது. தயக்கத்தோடு அங்கே போய் சீட்டைக் கொடுத்தேன். அவர் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த நோட்டுகளில் ஒன்றை எடுத்துப் பிரித்துப் பார்த்துவிட்டு சீட்டை என்னிடமே திருப்பித் தந்துவிட்டார். " எத்தனைதரம் நோட்டீஸ் அனுப்பினோம்! இப்போ வரீங்களே? நகை ஏலம் போயிடுச்சி" என்றார். எனக்கு என்ன கேட்பது என்றே புரியவில்லை. பதற்றத்தில் ஏதேதோ உளறினேன். அவர் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது எனப் புரியவில்லை. அழுகைதான் வந்தது. இரவு வீட்டுக்குத் திரும்பி அம்மாவிடம் விஷயத்தை சொன்னேன். 'போனா போவுது போ. நீ நல்லா படிச்சா அதுவே போறும்' என்று சொல்லிவிட்டார். நான் வேலைக்குப் போன பிறகு புதிதாக தாலி வாங்கிக்கொள் என்று சொன்னதையும்கூட அவர் கேட்கவில்லை. 

நான் நினைவு தெரிந்த நாளிலிருந்தே பகுத்தறிவுவாதி. பெரியாரின் கொள்கைகளில் ஊறியவன். நானே தாலி மறுப்புத் திருமணம் தான் செய்துகொண்டேன். அப்படியிருந்தும்  அம்மாவைத் தாலி இல்லாமல் வாழும்படி ஆக்கிவிட்டோமே என்ற குற்ற உணர்வு இன்னும் கூட என்னை அரித்துக்கொண்டிருக்கிறது.

சட்ட ஆணையத்தின் 255 ஆவது அறிக்கை:

ஊடகங்கள் விவாதிக்க வேண்டும்
- ரவிக்குமார்
===============

"அரசியல் லாபத்துக்காக வன்முறையைக் கைக்கொள்ளமாட்டோம். இனம், சாதி, மொழி, வசிப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டமாட்டோம்" என அரசியல் கட்சிகள் ஒப்புதல் அளிக்கவேண்டும். அதற்கேற்ப மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 29 A (5) திருத்தம் செய்யப்பட வேண்டும் என சட்ட ஆணையம் தற்போது சமர்ப்பித்துள்ள தனது 255 ஆவது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

" தற்போதுள்ள FPTP தேர்தல் முறைக்குப் பதிலாக விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை உள்ளிட்ட வேறு முறைகளைப் பரிசீலிக்கவேண்டும். இது தொடர்பாக சட்ட ஆணையத்தின் 170 ஆவது அறிக்கையில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை அரசு ஆராயவேண்டும்." என சட்ட ஆணையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது

தற்போதுள்ள பொருளாதார நிலையில் தேர்தல் செலவுகளை அரசே ஏற்பது சாத்தியமில்லை எனவும் இந்திய சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

சட்ட ஆணையத்தின் அறிக்கைகளைப் பொதுவாக அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் தந்து விவாதிப்பதோ கருத்து தெரிவிப்பதோ இல்லை. அதனால்தான் அரசாங்கமும் அந்த அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள ஆலோசனைகளை செயல்படுத்த ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலையை மாற்ற ஊடகங்கள் முன்வரவேண்டும். 

Thursday, March 12, 2015

காணாமல் போனவர்கள் எங்கே?



போர்க் குற்றங்கள் குறித்த புகார்கள் தொடர்பாக இன்னும் ஒரு மாதத்தில் நாங்களே விசாரணை நடத்தப்போகிறோம் என இலங்கை அதிபர் மைத்ரிபாலா பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். இன்னும் அவர்  ராஜபக்ச அமைச்சரவையில் ஒரு அமைச்சராகவே தன்னைக் கருதிக்கொண்டிருப்பதுபோல் தெரிகிறது. அதிபரானதற்கான எந்த அறிகுறியையும் அவரிடம் பார்க்க முடியவில்லை. 

இந்தியப் பிரதமர் இலங்கைக்குப் போவதற்கு முன்பே இலங்கை அதிபரும் பிரதமரும் சொல்லவேண்டியவற்றை சொல்லிவிட்டார்கள். இந்தியப் பிரதமரிடமும் இதையேதான் சொல்லப்போகிறார்கள். எனவே பிரதமர் மோடியின் பயணத்தால் ஈழத் தமிழர்களுக்கு நன்மை எதுவும் விளையுமென நம்புவதில் அர்த்தமில்லை. ஆனால் தீமை விளைய வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியிருக்கும் சுமார் ஒரு லட்சம் ஈழத் தமிழர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கான பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. அதை பிரதமர் மோடி தொடரக்கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி நடந்து அகதிகள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டால் பிற ஐரோப்பிய நாடுகளும் அதைப் பின்பற்றக்கூடிய ஆபத்து இருக்கிறது. 

இந்தியப் பிரதமரின் பயணம் குறித்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஐநா மனித உரிமைக் கவுன்சில்கூட்டம் நடந்துவருவதைப் பற்றியும்கூட இங்கே எவரும் கவலைபட்டதாகத் தெரியவில்லை. ஆனால் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தம் கடமையைச் செய்துவருகின்றன. 

 1980 முதல் இலங்கையில் காணாமலடிக்கப்பட்ட சுமார் எண்பதாயிரம் பேரின் கதி என்ன? எனக் கேட்டு இலங்கையைச் சேர்ந்த சந்தியாவும் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த எஸ்டெலும் ஐநா பேரவை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் ஏற்பாட்டில் அந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. அவர்கள் எழுப்பிய முழக்கத்தை நாமும் எதிரொலிப்போம்: " இலங்கையில் காணாமல் போன எண்பதாயிரம் பேர் எங்கே?"

Friday, March 6, 2015

இந்தியாவின் மகள்: ஆவணப் படம் எழுப்பும் கேள்விகள் - ரவிக்குமார்



நிர்பயாவை மையமாகக்கொண்ட இந்தியாவின் மகள் என்ற ஆவணப் படத்தைப் பார்த்தவர்கள் அதை இயன்ற வழிகளில் பரப்பி வருகிறார்கள். நானும் அதைப் பார்த்தேன். 

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் பெயரை வெளிப்படுத்தக்கூடாது என நீதிமன்றம் கூறியிருந்தபோதிலும் இந்த ஆவணப் படத்தில் நிர்பயாவின் உண்மைப் பெயர் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பெயரை ஏன் வைத்தோம் என அந்தப் பெண்ணின் தாயார் சொல்லும்போது கண்கள் கசிந்தன. எனவே அந்தப் பெயரை வெளிப்படுத்தியிருப்பதை நான் தவறென்று கருதவில்லை. 

சிறு பிசிறுகூட இல்லாமல் மிகவும் நேர்த்தியாக இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்தப் படம் மிகுந்த தாக்கத்தை உண்டாக்குகிறது.நிர்பயாவின் பெற்றோர் மட்டுமின்றி குற்றவாளிகளின் பெற்றோர் எழுப்பும் கேள்விகளும் முக்கியமானவையாக இருக்கின்றன. குற்றவாளி ஒருவரின் மனைவியின் நேர்காணலும் இடம்பெற்றுள்ளது. அவர் பேசியதைக் கேட்டபோது மனம் குழம்பியது. ஒரு குற்ற சம்பவத்தை கறுப்பு வெள்ளையாகப் புரிந்துகொள்வது சரியல்ல. சரி தவறு என்பவற்றைத் தாண்டி எத்தனையோ சிக்கலான கேள்விகளும் பிரச்சனைகளும் அதில் பொதிந்துள்ளன. மிகக் குரூரமான குற்றம் இழைத்தவரையும்கூட பழிவாங்கும் உணர்வோடு பார்க்கக்கூடாது என்ற உணர்வுதான் இந்த ஆவணப் படம் பார்த்தபின் ஏற்படுகிறது. 

 குற்றவாளியும், வழக்கறிஞர்களும் கூறியிருக்கும் கருத்துகள் இந்திய சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க மனோபாவத்துக்கு சான்றுகளாக உள்ளன.அவர்கள் கூறியிருக்கும் கருத்துகளைத்தான் சங்கப்பரிவார  அமைப்பினரும் சொல்லிவருகின்றனர். பாதிக்கப்பட்டவரையே பழிசொல்லும் இந்த மனோபாவம் மிகவும் ஆபத்தானதாகும்.

நிர்பயா வழக்கைக் கடந்து உலகளாவிய அடிப்படைவாத , ஆணாதிக்க மனோபாவத்தை அம்பலப்படுத்திக்காட்டுவதாக இந்த ஆவணப்படம் அமைந்திருக்கிறது. நமது இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக இந்த ஆவணப் படத்தை ஒவ்வொரு பள்ளியிலும் காட்டவேண்டும்.அதற்கு மாறாக இதை மத்திய அரசு  தடை செய்திருப்பதோடு பிபிசி மீது வழக்கு தொடுக்கப்போவதாக சொல்லியிருப்பது  மிகப்பெரிய கருத்துரிமை பறிப்பு நடவடிக்கையாகும். 

அந்தப் படத்தைப் பார்த்ததும் எழுந்த சில கேள்விகள் : 

1. நிர்பயா சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லியில் தன்னெழுச்சியாய்க் கிளர்ந்தெழுந்த போராட்டங்கள், அவற்றை மிருகத்தனமாகக் கையாண்ட காவல்துறையின் அடக்குமுறைகள்- கையாலாகாமல் வேடிக்கை பார்த்த காங்கிரஸ் அரசு தூக்கியெறியப்பட்டதில் அவற்றுக்கு முக்கிய பங்கிருக்கிறது. ஆனால் அதன் பின்னர் அத்தகைய சம்பவங்கள் நடந்தபோது ஏன் அத்தகைய தன்னெழுச்சி உருவாகவில்லை? அது காங்கிரஸ் அரசு மீதான அதிருப்தியின் உச்சமாக வெடித்ததா? அல்லது சமூகம் அத்தகைய சம்பவங்களுக்குத் தகவமைந்துவிட்டதா? 

2. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து அக்கறை காட்டுகிறவர்கள்கூட வர்மா கமிஷன் அறிக்கையை சீரியஸாக விவாதிக்கவோ அதன் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப் படுத்தவோ வலியுறுத்தவில்லையே அது ஏன்? 

3. இந்த ஆவணப் படத்தில் கருத்து தெரிவித்த வழக்கறிஞர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்போது வலியுறுத்தப்படுகிறது. ஆனால் அதே கருத்துகளைப் பல்வேறு சங்கப் பரிவார அமைப்பினர் சொல்லிவருகிறார்களே அவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுப்பது? 

4. இங்கிலாந்தைச் சேர்ந்த லெஸ்லீ உட்வின் என்ற ஆவணப் பட இயக்குனருக்கு இருந்த பொறுப்பும் அக்கறையும் ஏன் நமக்கு இல்லாமல் போய்விட்டது? பிபிசி நிறுவனத்தின் துணிச்சலும் கடப்பாடும் ஏன் நம் நாட்டு ஊடகங்களுக்கு இல்லை? 

5. இந்த ஆவணப் படத்தைப் பார்க்கும்போது எந்த அளவுக்கு நாம் நம்மிலிருக்கும் ஆணாதிக்க சிந்தனையைப் புரிந்துகொண்டோம்? 

Monday, March 2, 2015

அடிக்குறிப்புகள் கே.சச்சிதானந்தன்


தமிழில்:ரவிக்குமார்

 நாடகம்

முடிந்தது நாடகம், நடிகர்கள் தோன்றினார்கள்
மேடையில்
அரங்கத்திலிருந்த பார்வையாளர்களுக்கு
வாழ்த்து சொன்னார்கள்
தீர்ந்துபோயின
மனப்பாடம் செய்த சொற்கள்
பார்வையாளர்கள் மௌனமாக எடுத்துவைத்தார்கள்
நடிகர்களின் கைகளில் 
ரத்தம் ஒழுகும் வாழ்வின் ஒரு துண்டை

ஒளிந்து பிடிக்கும் விளையாட்டு

நான்கு குழந்தைகள் ஒளிந்து பிடித்துவிளையாடினார்கள்
ஒரு குழந்தை குதிருக்குள்
இன்னொன்று கட்டிலுக்குக் கீழே
மூன்றாவது குழந்தை மாடத்தில்
நான்காவது குழந்தை மரணத்துக்குப் பின்னால்

நிக்கோனர் பர்ராவுக்கு ஒரு பின்னிணைப்பு

சிலி நாட்டுக் கவிஞன் நிக்கோனர் பர்ரா 
அமெரிக்காவைப் பற்றி சொன்னான்: அமெரிக்காவில் சுதந்திரம் என்பது ஒரு சிலை
அதற்கு ஒரு பின்னிணைப்பு: சீனாவில்
ஜனநாயகம் என்பது ஒரு சுவர்

நாற்பது

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுதினேன்: நாற்பதைக் கடந்த மனிதர்களையும் சிந்தனைகளையும் சுட்டுத் தள்ளவேண்டும்
எனக்கு இப்போது நாற்பது வயது
தயவுசெய்து என்னை சுட்டுவிடாதீர்கள்
எப்படி வாழக்கூடாது என்பதை உலகுக்குக் காட்டுவதற்காக 
என்னை வாழ விடுங்கள்