Saturday, November 27, 2010

அனார் கவிதைகள்




நிசப்தத்தில் குளிரும் வார்த்தை


நமக்கிடையே மழைக்காடுகளென
நிசப்தம் வளர்கிறது
ஆற்றுக்கரையில் மெல்லிய குளிர்மையுடன்
நிசப்தம் என்னில் தொற்றுகின்றது
நட்சத்திரங்கள் கக்கும் நிசப்தத்தை
உன்னுடைய பதில்களாக கருதுகிறேன்
ஆற்றுப்படுக்கையில் திட்டுத் திட்டாக தெரிகின்ற
எனது நிசப்தங்கள் மீது
கோடையென தீய்கிறாய்
உனதான பள்ளத்தாக்குகளில்
ஊமை முயல்கள் வளர்கின்றன
எனது நிசப்தங்களின் புல்வெளியை
அவை பசியாறுகின்றன
நீயும் நானும் மறைக்க விரும்புவதும்
கூற நினைப்பதும்
ஒரே வார்த்தை
எப்போதுமிருந்தது அந்த வார்த்தையில் குளிர்
கடலின் ருசி
மழையின் குரலென
நிசப்தமான குளிர் பேசப்படாத வார்த்தையாய்
அலைகின்றது நமது அறைகளில்
சிறுத்தையின் புள்ளிகள்
என்னுடைய நிசப்தம்
உன்னுடையதோ
முட்டைகளைப் பெருக்கிக்கொண்டிருக்கும் ஆமை
முகமில்லாத வார்த்தைகளை
உரையாடுகின்றோம்
இசை பாறையாகிவிட்டது
வார்த்தை பாறையாகிவிட்டது
காலம் நிசப்தமாகிவிட்டது
அன்பின் உணர்வுகளில்
தூறல் சொட்டும் குரலில்
மறைந்திருக்கிறது கொலைவாள்
நமக்கிடையே
தூக்குமேடைக்குமேல் தொங்கும் கயிறு
அல்லது
ஆலகால விசம்












நிலாக்குட்டி


சொர்க்கத்திலிருந்து பறித்துவரப்பட்ட
பேரீச்சம் பழங்களின்
தித்திப்பு மிகுந்த அணைப்பினால்
முத்தங்களால் தீண்டுகிறான் குழந்தை

என்னிரு காதுகளை
இரு கைகளாலும் இழுத்து மூடி
நிலாக்குட்டியின் ரோசாப்பு வாயினால் ஊதுகிறான்
வளராத இறகுகளுடன்
அவனது சொற்கள் மின்னி மின்னிப் பறக்கின்றன

மடி மீது குலுக்கி உதிர்ந்திட்ட
பிள்ளையின் மழலைச் சொற்கள்
ப+ரித்துப் பொங்குகின்றது
பால் மணமாய்

என் கருவறை நிறைய
திரண்டு கிடந்த கவிதை
ஒரு துண்டு மேகமாகி ஆகர்சிக்கின்றது
கபடமறியாத குறுஞ்சிரிப்புகளால்

அவனது கைகளில்
ஒரு பிஸ்கட் யானையின் வடிவிலிருந்தது
தும்பிக்கையை
மொறு மொறுவனெத் தின்கிறான்
ஆகச்சிறந்த பயில்வானின் தோரணைகளுடன்

தோட்டத்தில்
தத்திச்செல்லும் பிள்ளையின் பாதச்சுவடுகள்
நிலவு பொறுக்கியுண்ணும்
மிக இனிக்கின்ற உணவோ

ஏதேதோ சாகசங்களில் ஜெயித்தவனாக
உறக்கத்தில் மென்மையாக புன்னகைக்கின்றான்
பூக்களது ப+ச்சிகளது வண்ணங்களதும்
ஆரவாரங்களுக்கு மத்தியில்
அங்கே அவனை
ரசித்தபடியிருக்கும் என்னைப்பார்த்து

என் பசுங்குருத்துச் சூரியன்
உதிக்க அதிகாலை இருள் நீங்கும்
உறங்க பொன்னந்தி பாய்விரிக்கும்








பருத்திக் காய்கள் வெடிக்கும் நாள்


பழுத்த பருத்தி இலைகள்
மட மடத்து உதிர்கின்றன
உலர்ந்த சருகுகளின் குவியல்
காற்றின் ஞாபகங்களில்
விலகி விலகி அசைகின்றது

வெடித்த பருத்திக் காய்களிலிருந்து
பிரிந்த பஞ்சுகள்
வேனிற்காலப் பொழுதொன்றைத் தூக்கிப்பறக்கின்றன

பச்சை இலைகளின் மணம்
இயற்கையை நடனமாடும்
பரவசத்தின் குரலென சிணுக்கமிடும்

தீப்பொறிகளென உதிர்ந்திடும் இலைகள்
காற்றைத் தீண்டும் பொழுது
மறுபடியும் குருத்துவிடும் உதடுகள்

அதிகாலைக் குளிரின் காமம்
மரத்தினில் இன்னும் தங்கியிருக்கிறதா
பருத்தி இலைகளில் தன்னை வழியவிட்டு
துடிக்கின்றது சூரியன்

ஒளிச் சேர்க்கையின் நிறப்பிரிகை
மூன்று காலங்களிலும்
தங்கிவிடுகின்றது

பருத்திக் காய்கள் வெடிக்கும் நாளொன்றில்
கண்களில் காடென வளரும்
பசிகொண்டவளுக்காக
விரைந்து வித்துக்களை உதிர்க்கின்ற
பஞ்சுகள்
காற்று வெளியெல்லாம் பரப்புகின்றன
அவன் வருகையின்
விநோதமான சமிக்ஞைகளை




நீல முத்தம் - அனார்

முத்தம் விசித்திரமான
நீலப் பறவையாக அலைகிறது
அூர்வமும் பிரத்தியேகமானதுமான பொழுதின்
நீல மின்னல்களை
என் ரகசிய வானத்தில் நீ கண்டதில்லையா
அளவுகளைத் தாண்டி நீண்டு செல்லும்
முத்தம் தேவதை

நீல இருளின் நடு ஆகாயத்தில் எனது முத்தம்
முழு நிலா

முழுவதுமாக நனையும்போது
நீ உணர்வதில்லையா
எனது முத்தம் சீரான மழையென
பயிற்சிகளைப் ூரணப்படுத்தியிருக்கும்
சிப்பாய்களைப்போல
மிடுக்கும் ஒழுங்குமாக
அவை ஆயத்தங்களுடனிருக்கின்றன
முத்தம் கனவின் உண்மை
உண்மையின் கனவு
காயாத கசிவுடன் கண்ணாடியில் படிந்திருக்கிறது
மெல்லிய நீலத்துடன்
எரியத் தொடங்குகிறது நெருப்பு
சதைகளாலான பெருகும் விருட்சத்தில்
பெயரிடமுடியாத கனி பழுத்திருக்கிறது
அதன் மென்மைகளோடும்
ஈரப்பதமோடும்
மென் நீலமெனத் தீராமல் படர்கிறது
கம்பீரமாக
பளபளப்பாக
கூர்மையான வாள்
என் உறையிலிருக்கிறது
அச்சங்கள் எதுவுமற்று

Method to erase traumatic memories may be on the horizon


November 22, 2010




Soldiers haunted by scenes of war and victims scarred by violence may wish they could wipe the memories from their minds. Researchers at the Johns Hopkins University say that may someday be possible.

A commercial drug remains far off — and its use would be subject to many ethical and practical questions. But scientists have laid a foundation with their discovery that proteins can be removed from the brain's fear center to erase memories forever.

"When a traumatic event occurs, it creates a fearful memory that can last a lifetime and have a debilitating effect on a person's life," says Richard L. Huganir, professor and chair of neuroscience in the Hopkins School of Medicine. He said his finding on the molecular process "raises the possibility of manipulating those mechanisms with drugs to enhance behavioral therapy for such conditions as post-traumatic stress disorder."

The research has drawn interest from some involved in mental health care, and some concern.

Kate Farinholt, executive director of the mental health support and information group NAMI Maryland, said many people suffering from a traumatic event might benefit from erasing a memory. But there are a lot of unanswered questions, she said.

"Erasing a memory and then everything bad built on that is an amazing idea, and I can see all sorts of potential," she said. "But completely deleting a memory, assuming it's one memory, is a little scary. How do you remove a memory without removing a whole part of someone's life, and is it best to do that, considering that people grow and learn from their experiences."

Past research already had shown that a specific form of behavior therapy seemed to erase painful memories. But relapse was possible because the memory wasn't necessarily gone.

By looking at that process, Huganir and postdoctoral fellow Roger L. Clem discovered a "window of vulnerability" when unique receptor proteins are created. The proteins mediate signals traveling within the brain as painful memories are made. Because the proteins are unstable, they can be easily removed with drugs or behavior therapy during the window, ensuring the memory is eliminated.

Researchers used mice to find the window, but believe the process would be the same in humans. They conditioned the rodents with electric shocks to fear a tone. The sound triggered creation of the proteins, called calcium-permeable AMPARS, which formed for a day or two in the fear center, or amygdala, of the mice's brains.

The researchers are working on ways to reopen the window down the road by recalling the painful memory, and using medication to eliminate the protein. That's important because doctors often don't see victims immediately after a traumatic event. PTSD, for example, can surface months later.

Huganir, whose report on erasing fear memories in rodents was published online last month by Science Express also believes that the window may exist in other centers of learning and may eventually be used to treat pain or drug addiction.

Connie Walker, a Leonardtown mother of an Iraq war veteran suffering from PTSD, said there isn't enough attention given to the injuries of service members in general and she specifically supports research into PTSD-related therapy. But Walker, a 23-year-Navy veteran herself, said she wouldn't want her son to take a medication to erase what he witnessed.

She said her son began functioning well after he was finally able to get therapy, which she said should be more readily available to every wounded veteran.

"My gut reaction to a drug that erases memories forever is to be frightened," she said. "A person's memory is very much a part of who they are. I recognize we all have some bad memories, though I doubt they can compete with what's coming back from Iraq and Afghanistan. But how can a drug like that be controlled? What else gets eliminated accidentally?"

For now, there aren't yet drugs to erase memories. But there are medications also targeting the amygdala and used with behavior therapy that can lessen the emotional response to painful memories in those with PTSD, such as propranolol, a beta blocker commonly used to treat hypertension.

Paul Root Wolpe, director of the Center for Ethics at Emory University in Atlanta, says permanently erasing memories in humans, if it can be done, wouldn't be a lot different ethically than such behavior modification. Both are memory manipulation. But he said erasing memories is fraught with many more potential pitfalls.

He also said that PTSD sufferers, such as service members in Iraq and Afghanistan, frequently experience more than one traumatic event, and trying to eliminate all the memories could significantly alter a person's personality and history. So could forgetting a whole person after a painful loss or breakup, as depicted in the 2004 movie "Eternal Sunshine of the Spotless Mind."

Wolpe said it can be called dementia when someone forgets that much of their past.

"I don't know what it means to erase that much of a person's life," he said. "You'd leave a giant hole in a person's history. I tend to doubt you'd even be able to."

Further, he said, the safeguards necessary to protect the process from abuse would be difficult. Inmates or soldiers in danger of capture could be subjected to it, for example. Many questions should be decided before testing is pursued in humans, because its use may become "too tempting," he said.

Wolpe could see only limited uses for erasing a memory for now, such as for those suffering after a rape or single terrifying event.

"Certainly, there may be appropriate applications," he said. "But human identity is tied into memory. It creates our distinctive personalities. It's a troublesome idea to begin to be able to manipulate that, even if for the best of motives."

Monday, November 22, 2010

கார்த்திகை தீபத்தின் கதை


நண்பர்களே !
ஊரெங்கும் கார்த்திகைத் திருநாள் சிறப்போடு கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் சிறுவர்கள் கார்த்திகை சுற்றுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதற்கு மிகப்பெரிய தயாரிப்பு செய்யவேண்டும். முக்கிளையாய்ப்  பிரியும் சிறு கம்பைப் பார்த்து வெட்டி எடுத்து அதை சரியாக சீவி அதற்கிடையில் கார்த்திகைப் பூ சுற்றுவதற்கான பொடியை ஒரு பொட்டலமாக வைத்து அந்தக் கிளையைக் கையில் பிடித்துச் சுற்றுவதற்கு வாட்டமாக கயிற்றைக் கட்டி எப்போது இருட்டும் எனக் காத்திருந்து அதை பற்ற வைத்துச் சுற்றினால் நம்மைச் சுற்றி வட்டமாய் பறக்கும் தீப் பொறிகளைப் பார்க்கவே உற்சாகமாக இருக்கும். இன்று அதெல்லாம் கிராமங்களில் அருகிவிட்டது. ஆங்காங்கே பட்டாசு சப்தம்தான் கேட்கிறது. ஆனால் வீடுதோறும் அகல் விளக்குகள் அணிவகுப்பது அதிகரித்துவருகிறது. இந்த கார்த்திகைப் பண்டிகைக்கு இந்து மதவாதிகள் சொல்லிவரும் விளக்கம் நாம் அறிந்ததுதான். அயோத்திதாசப் பண்டிதர் வேறொரு விளக்கத்தைச் சொல்கிறார். அதுதான் பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது. அவர் நடத்திய தமிழன் வார இதழில்  1907 ஆம் ஆண்டு வெளியான கட்டுரையை இங்கே தருகிறேன் : 

கார்த்திகை தீபமென வழங்கும் கார்த்துல தீப விவரம்
அயோத்திதாசப் பண்டிதர் 
நெடுங்காலங்களுக்குமுன் மலாடபுரம் என்னும் ஊரில் புத்த தன்மத்தை தழுவினின்ற சங்கத்தார் பேராமணக்கு சித்தாமணக்கென்னும் வித்துக்களிலிருந்து நெய்யெடுத்து மருந்துகளுடன் உபயோகித்து அதன் நற்பலன்களை அறிந்ததுமன்றி தீபம் ஏற்றி குளிர்ந்த பிரகாசத்தையுங் கண்டு ஆனந்தித்து அத்தேசத்தை ஆண்டுவந்த அரசனிடம் கொண்டுபோய்க் காண்பித்தார்கள். (அரசன் பெயர் விளங்கவில்லை).

பதார்த்த சிந்தாமணி
உண்டாலுதிரப்பலநோயும் ஒடுங்கிருமிகுடல்வாதம்
கண்டே சுவைக்கில் விளக்கெண்ணெய் கண்ணேகுளிருங் குணந்தேறுங்
கொண்டால் கிரந்தி சூலையுடன் கொடிய கரப்பான் பலமேகம்
விண்டோர்தோஷ கணமாந்த மகலுஞ் சித்தாமணக்கெண்ணெய்.

அவ்வரசன் பேராமணக்கையும் சித்தாமணக்கையும் அதிகமாக விளைவிக்கச்செய்து அவன் தேசத்துள் இருந்து அண்ணாந்து மலையினுச்சியில் வெட்டிப் பள்ளமிட்டு பருத்தி நூல் திரிசெய்து ஆமணக்கு நெய்யை வார்த்து பெருந்தீபம் ஏற்றி விடியும் அளவு எறியவிட்டு உதயத்திற் சென்று அவ்விடமுள்ள பட்சிகளுக்கும் ஆடு மாடுகளுக்கும் அத்தீபப் புகையால் ஏதேனும் தீங்க நேரிட்டுள்ளதோ என்று ஆராயுங்கால் அவ்விடம் உலாவும் பட்சிகளுக்கும் மிருகங்களுக்கும் யாதோர் தீங்கில்லாததைக் கண்டதுமன்றி அத்தீபக்காவலிலிருந்த மக்களுக்கும் ஓர் கெடுதி வராதிருந்ததினால் அரசன் குடிகைள் யாவரையும் தருவித்து ஆமணக்கு நெய்யைக் கொடுத்து தீபம் ஏற்றிக் கொள்ளும்படி ஆக்கியாபித்தான்.
இத்தீபச் சுடலை எக்காலும் காணாதக் குடிகளாதலின் தீபத்தை ஏற்றி வீட்டில் வைக்க பயந்து மூன்று நாள் வரையில் திண்ணைகளின் மீதும், தெரு மாடங்களிலும் வைத்து ஒரு தீங்குங் காணாததினால் வீட்டுக்குள் வைத்து அத்தீபம் இருளை விலக்கும் ஒளியாக விளங்கினபடியால் (கார்த்துலதீப) என்னும் பெயரை அளித்து புத்தசங்கத்தோர் கண்டுபிடித்த கார்த்திகைமாத பௌர்ணமியில் தேசம் எங்கும் தீபம் வெளியிட்டு பண்டை யீகை அளித்து பகவ தியானஞ் செய்து வந்தார்கள்.

இவ்வகை நெடுங்காலம் வருடத்திற்கு ஒருமுறை நிறைவேறிவரும் கார்த்துல தீபவெளி பண்டகையும் புத்தத் தியானத்தையுங் கண்ட சையோயாங்கென்னும்( யுவான் சுவாங்?)  சீனதேச யாத்திரைக்காரன் ஆனந்தமுற்று தன் தேசஞ் சென்று வருடந்தோருங் கார்த்திகைமாதப் பௌர்ணமிக்குள் அவர்கள் தேசக் கொடிகளும் டப்பாசுகளும் பாணங்களும் அனுப்பி கார்த்துல தீப நாளைக் குதூகலிக்கச் செய்ததாக சை யோயாயாங் யாத்திரை சரித்திரமும் விளக்குகின்றது.

பெருந்திரட்டு - பாசமாட்சி
காராமணத்தைக் கருதிக் கரைந்தங்கு / பேராமணக்கைப் பெற்றார்கள் & ஊரா
ருளப்பருத்தி நெய்யூ மீர்ந்தார் பெருவங் / களம்பார்த்த தீபக்கழல்
புரிமலாடதுபதிந்த பொற்றவசங்கத்தோர்கள்
கரதவாமணக்கு நெய்யை தூயமன்னவன்பாற் கொண்டு
பரத வெல்லை அண்ணாந்து பதிசிரம்பதித்து தீப
மொருதீங்க மேறாதலே யூரவரகத்தி லேற்றார்.

-(1:22 நவம்பர் 13, 1907. தேதியிட்ட தமிழன் வார இதழில் வெளியானது  )

Sunday, November 21, 2010

மணற்கேணி - அறிமுகம் - ேராசிரியர் அ . ராமசாமி


1989 இல் புதுவைப் பல்கலைக் கழகத்தின் நாடகப் பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றச் சென்ற சில மாதங்களுக்குள் அவருடன் ஏற்பட்ட நட்பு இன்றளவும் தொடரும் ஒன்று. தொண்ணூறுகளில் தமிழ் அறிவுச் சூழலில் ஏற்பட்ட கருத்தியல் முன் வைப்புக்களுக்கும்செயல்தள மாற்றங்களுக்கும்விமரிசனத் திசை அறிதலுக்கும் மையமாக இருந்தவர் ரவிக்குமார் என்பதில் எனக்கு எப்போதும் மாற்றுக் கருத்து இருந்ததில்லை.
சமூக விமரிசனத்தை முன் மொழியும் தெரு நாடகங்கள்சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வை மையமிட்ட கூட்டு நாடகங்கள் ஆகியவற்றை மக்களிடம் எடுத்துச் செல்லும் பொருட்டுத் தொடங்கப்பட்ட புதுவைக் கூட்டுக்குரல்பின்னர் பல்லக்குத்தூக்கிகள்அகல்யாசிற்பியின் நரகம்யாசகன் அல்லது செத்த நாய். திருப்பிக் கொடு போன்ற மேடை நாடகங்களை மேடை ஏற்றிய குழுவாக மாறியது. அதுவரை எனது வழிகாட்டுதலில் மட்டுமே செயல்பட்ட அக்குழு தண்ணீர்,வார்த்தை மிருகம் போன்ற தலித் நாடகங்களை அரங்கேற்றும் குழுவாகத் திசை மாறியதன் பின்னணியில் ரவிக்குமாரின் ஆலோசனைகளும் ஊக்கமூட்டலும் இருந்தன என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இடதுசாரி அரசியல் வழியாக இடதுசாரி இலக்கியப் பார்வையைப் பெற்றிருந்த ரவிக்குமாரும்இடதுசாரி இலக்கியத்தின் வழியாக இடதுசாரிக் கருத்தியலுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டிருந்த நானும் தலித்தியச் சொல்லாடல்களுக்குள் இணைந்தே தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நுழைந்தோம் என்று நினைத்துக் கொள்கிறேன்.
வெகுமக்கள் அரசியலில் தயக்கத்தோடு இறங்கினானலும் தான் சார்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெற்றி பெற்றுப் பல வழிகளில் முன் மாதிரிச் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் நண்பர் ரவிக்குமார். அரசியல் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என்ற அளவிலும்ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவ என்ற நிலையிலும் அவர் எடுக்கும் முடிவுகளுக்கு அவரும் அவரது அரசியல் இயக்கமும் மட்டுமே பொறுப்பு. அதன் மீது பல நேரங்களில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை என்ற போதிலும் அது குறித்து அவரோடு விவாதத்தில் இறங்கியதில்லை. ஏனென்றால் அதற்கான காரணங்களும் நியாயங்களும் அவருக்கு இருக்கவே செய்கின்றன. அவை மற்றவர்களுக்கு உவப்பானதாகவும்,ஏற்கத்தக்கனவாகவும் இல்லாமல் இருக்கலாம். இங்கே ஒவ்வொரு தனிமனிதனும் படைப்பாளியும் பிற மனிதர்களுக்கு உவப்பானதையும்ஏற்புடையதையும் மட்டுமேவா செய்கிறார்கள்இயங்குகிறார்கள். அவரவர் நியாயம்! அவரவர் இயக்கம்!! அவரவர் எழுத்து.
நிறப்பிரிகையின் மையமாக இருந்து செயல்பட்ட ரவிக்குமாரின் தூண்டுதலின் பேரிலேயே ஊடகம் என்ற பத்திரிகையை நாங்கள் தொடங்கினோம். பொதுப்புத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்கள்தொலைக்காட்சிகள்,மேடைக்காட்சிகள்திருவிழாக்கள் எனப் பலவற்றைப் பற்றிய விமரிசனப் பார்வையைப் பின்னர் வைப்பதற்கான அடிப்படை நூல்களை ஊடகத்தின் பொருட்டே நானும்ஊடகத்தோடு தொடர்புடைய நண்பர்களும் வாசித்து விமரிசனக் கருத்துக்களை உருவாக்கிக் கொண்டோம். நிறப்பிரிகைக்காகத் தனது முழு நேரத்தையும் செலவழிக்கும் அவர் ஊடகத்திற்காகவும் ஒவ்வொரு இதழிலும் கட்டுரைகள் எழுதிக் கொடுத்தார். அவரைப் போலத் தொடர்ந்து சொந்த வேலைகளையும்அலுவலக வேலைகளையும்சமூகஇலக்கிய வேலைகளையும் சளைக்காமல் செய்ய முடியவில்லையே என்று வருத்தம் கொண்டதுண்டுஅந்த வருத்தம் இன்றளவும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது.
சளைக்காத அந்த உழைப்புச் செயலைத் தக்க வைக்கும் முயற்சியாக இப்போது மணற்கேணி என்றொரு இருமாத இதழைத் தொடங்கி நடத்துகிறார். இரண்டு இதழ்கள் வந்து விட்டன. மணற்கேணிக்காகவும் அவரோடு சேர்ந்து பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதன் ஆசிரியர் குழுவில் நானும் இருக்கிறேன்.  இமையம்,தேன்மொழிஅழகரசன் ஆகியோரும் உள்ளனர்.  என்றாலும்நாங்களெல்லாம் எழுத்துப் பங்காளிகள் மட்டும் தான். முதலீடுஅச்சிடல்விற்பனை,தொடர்புகள்  என அனைத்தும் ரவிக்குமார் தான். தமிழக நூலக ஆணைக்குழுவின் பரிந்துரையைப் பெற்று விடும் வாய்ப்பு ரவிக்குமாருக்கு இருக்கிறது. எனவே மணற்கேணி தொடர்ந்து வரும் வாய்ப்பும் உண்டு. இப்போது அதற்கு எழுதும் கைகள் தான் வேண்டும். இப்போதைக்குத் தனிச்சுற்றுக்கு மட்டும் தான்நன்கொடை.ரூ. 40 . அடுத்த இதழில் ஆண்டுச் சந்தா அறிவிப்பு வரக்கூடும்.
மணற்கேணியின் இரண்டாவது இதழ்(செப்டம்பர்- அக்டோபர்,2010) கிடைக்கிறது. முகவரி: மணற்கேணி பதிப்பகம்,முதல் தளம்அறை எண்.2, புதிய எண். 10, பழைய எண். 288.டாக்டர் நடேசன் சாலைதிருவல்லிக்கேணிசென்னை-600 005, தொலைபேசி: 9443033305. manarkeni@gmail.com ,
இரண்டாவது இதழில் இடம் பெற்றுள்ள எழுத்துக்கள்: 
·     தஞ்சைப் பெரியகோயில் ஆயிரம் ஆண்டு ரகசியம் -ரவிக்குமார் (கட்டுரை)
·     ஈழக்கவிதைகள் : யேசுராஜாபா.அகிலன்,பஹீமா ஜஹான்சித்தாந்தன்
·     நாணல் காடு -தேன்மொழி (சிறுகதை)
·     எனது பள்ளிப்பருவமும் ஆசிரியர்களும் -இமையம் (நினைவுக்குறிப்புகள்)
·     இந்திராபார்த்தசாரதியோடு ஒரு நேர்காணல் -அ.ராமசாமி
·     சிறப்புப் பகுதி : வங்க இலக்கியம்
·     விதை - மகாஸ்வேதா தேவியின் வங்க மொழிக்கதை தமிழில் என்.எஸ். ஜெகந்நாதன்
·     வங்கமொழியில் தலித் இலக்கியம் - மனோரஞ்சன் வ்யாபாரி (மீனாக்‌ஷி முகர்ஜியின் ஆங்கிலக் கட்டுரையைத் தமிழில் தேன்மொழி) ஜாய் கோஸ்வாமி கவிதைகள்
·     பார்தா சாட்டர்ஜி -நேர்காணலும் மொழியாக்கமும்: அழகரசன்
·     நாம் சந்திப்பதற்கு வேறு இடமே இல்லையா? - நாதின் கார்டிமரின் கதை. மொழிபெயர்ப்பு: ஆர்.ராஜகோபால்.
·     எடுவர்டோ கலியானோ: இலக்கியமாகும் வரலாறு வரலாற்றுக் குறிப்புகள்
·     ரவிக்குமாரின் மூன்று நூல்களுக்கான அறிமுகங்கள்: செய்துள்ளவர்கள் கவி சேரன்இந்திரா பார்த்தசாரதி,தேன்மொழி

ரஜினிகாந்த்தும் புதுமைப் பித்தனும்

Pudumaipiththan 



Rajinikanth



மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இல்லத் திருமண விழாவில் நடிகர் ரஜினி சொன்ன பெங்காலி பாபா கதை அவரை ஒரு கற்பனை வளம் கொண்ட கலைஞராகக் காட்டியது. . இமயமலையில் பெங்காலி பாபா என்று ஒரு மகான் இருந்தாராம். அவர் மிகவும் ஆற்றல் பெற்றவராம். அவர் போகும்போது பனிப்பாளங்கள் சரிந்து வந்தால்,  பாறைகள் உருண்டு வந்தால் அப்படியே வலது கையை நீட்டி ‘ நில்லுங்கள் ‘ என்பாராம். அவை எல்லாம் அப்படியே நின்றுவிடுமாம். பாதையைக் கடந்தபின் ’இப்போ போலாம்’ என்பாராம் அவை அதன்பிறகு விழுமாம்.அந்த மகான் தமிழ்நாட்டுக்கு வந்து மதுரை, சிதம்பரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்குப் போனாராம். அதில் மதுரையைத்தான் அவர் மிகவும் பிரமாதமாகக் குறிப்பிட்டிருக்கிறாராம்.  
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறக்கவில்லை . அவர் உத்தரப் பிரதேசத்தில் ஃபைசாபாத்தில் ஒரு இந்து சன்யாசியாக வாழ்ந்து 1985இல் மறைந்தார் என ஒரு கதை உண்டு. கும்நாமி பாபா என அழைக்கப்பட்ட அவர்தான் நேதாஜி என்று நம்புகிறவர்கள் இப்போதும் அவரது கல்லறையில் மரியாதை செலுத்துகிறார்கள்.நேதாஜி மறைந்ததைப்பற்றி விசாரணை செய்த நீதிபதி முகர்ஜியும்கூட இதை உறுதி செய்திருக்கிறார். 

பெங்காலி பாபாவும் கும்நாமி பாபாவைப்போல மர்மப் பின்னணி கொண்டவரோ என்னவோ ரஜினியைக் கேட்டால்தான் தெரியும். மதுரையில் நடைபெற்ற திருமணம் ஒரு சுயமரியாதைத் திருமணம் என அந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியரும், தி.க.தலைவர் கி.வீரமணியும் , முதல்வர் கலைஞரும் வலியுறுத்திப் பேசினார்கள். அவர்கள் பேசும்போது எழாத ஆரவாரம் ரஜினி சொன்ன பெங்காலி பாபா கதையைக் கேட்டு எழுந்தது. 

ரஜினி சொன்ன பாபா கதை எனக்கு புதுமைப்பித்தனின் உபதேசம் என்ற சிறுகதையை நினைவுபடுத்தியது. அந்த சிறுகதையைப்ப்பற்றி நான் 15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே தருகிறேன்: 

 ‘‘ஒரு பின் நவீனத்துவ கலைஞன் அல்லது எழுத்தாளன் என்பவன் ஒரு தத்துவ ஞானியைப் போன்றவன். அவன் எழுதுகின்ற ஒரு பிரதி, அவன் உருவாக்குகின்ற படைப்பு ஆகியவை முன்பே நிர்ணயிக்கப்பட்ட விதிகளினால் ஆளப்படுபவையல்ல. முன்பே அறியப்பட்ட கருத்தாக்கங்களைப் பிரயோகித்து அவற்றை மதிப்பிடவும் முடியாது. எனவேதான் இதுவரையிலும் அறியப்பட்ட சிறுகதைகளின் இலக்கணங்களை வைத்து அளக்க முற்படும்போது புதுமைப்பித்தனின் கதைகள் தப்பித்து ஒடி விடுகின்றன. அதுபோலவே மரபுரீதியான தத்துவார்த்த சட்டங்களுக்குள்ளும் அவை அடைபட மறுக்கின்றன.
அறிவு / விஞ்ஞானம் போன்றவற்றை விமர்சனத்தோடு அணுகுவதாலேயே புதுமைப்பித்தனை நாம் மதவாதிகளோடு சேர்த்துவிட முடியாது. ஏனென்றால் ‘‘அறிவு (சயன்ஸ்) இல்லாவிட்டால் அசட்டுத்தனம் மலியும்’’ என்பார் அவர், அவரது படைப்புகளில் மேற்கத்திய வகைப்பட்ட அறிவின் அணுகுமுறை குறித்து கடுமையான விமர்சனங்களும் கேலிகளும் செய்யப்பட்டிருந்தாலும்கூட அவற்றுக்கு மாற்றாக அவர் இயந்திர மரபு என்கிற சனாதன அணுகுமுறையை ஒருபோதும் வைத்ததில்லை.
ஐரோப்பிய மருத்துவ அணுகுமுறை மீதான நேரடியான விமர்சனமாக அமைந்திருக்கும் உபதேசம் என்ற சிறுகதையை எடுத்துக்கொள்வோம். இக்கதையில் உடற்கூறு பற்றிய இந்திய ஐரோப்பிய அணுகுமுறைகளை அவற்றின் முரண்பாடுகளை போகிற போக்கில் தொட்டுக்காட்டிவிடுகிற புதுமைப்பித்தன் மேற்கத்திய அறிவின் எல்லையை உணர்த்துவதோடு மட்டுமின்றி அதனால் நிராகரிக்கப்பட்ட இந்திய மரபுகளில் ஒன்றினுடைய புதிர்த்தன்மையையும் விவரித்துச் சொல்கிறார். ஆனால் மேற்கத்திய உடற்கூறு விஞ்ஞானத்துக்கு மாற்றாக இந்திய யோக மரபை அவர் நிறுத்துகிறார் எனவும் நாம் கூறிவிட முடியாது. இங்கே இயல்பாக வந்துவிடக்கூடிய ஒரு எதிர்வு மிக சாமர்த்தியமாக படைப்பு மொழியின் லாவகத்தால் தவிர்க்கப்படுகிறது.
ஐரோப்பிய வகைப்பட்ட உடற்கூறு மருத்துவமென்பது இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஜெர்மனியின் நாஜிப்படை முகாம்களில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் முதலானவற்றை உள்ளடக்கி இருப்பதையும், குறைந்தபட்ச மருத்துவ அறத்தையும் அது உதாசீனப்படுத்திதான் வளர்ந்தது என்பதையும் நாம் இந்தக் கதையினூடே புரிந்து கொள்கிறோம். ஆனால் இந்திய மரபிலான யோக மார்க்கமோ வேறுபட்டதாக உள்ளது. ஐரோப்பிய விஞ்ஞானம் கண்ணாடியையும், விஷத்தையும் உண்டுபண்ணிக் கொண்டிருக்க, சித்தாந்த சாமியாரின் யோகமார்க்கமோ அதை விழுங்கி ஏப்பமிட்டு விட்டு கைலாசபர்வத சிகரத்தின் பனிமுடிவில் நின்றுகொண்டிருக்கிறது. இங்கே எல்லாவற்றையும் பகுத்தறிந்து தர்க்கபூர்வமாக தெளிவுபடுத்திவிட முடியுமென நம்பிய அறிவுக்கு பலத்த அடி விழுகிறது.
ஒரு கதைக்குள் படைப்பாளி உண்டு பண்ணுகிற யதார்த்தமென்பது புறநிலையில் நாம் பார்க்கிற யதார்த்தமல்ல. அது கவித்துவத்தோடு மாற்றியமைக்கப்படட யதார்த்தம் என்கிறார் காப்ரியேல் கார்ஸியா மார்க்யெஸ். இப்படிப் படைப்புக்குள் மாற்றியமைக்கப்பட்ட யதார்த்தம் உண்மையில்தான் வேரூன்றியுள்ளது என்றபோதிலும் புறநிலையில் காணப்படும் யதார்த்தத்துக்கும் அதற்குமான உறவு ஒன்றுக்கு ஒன்று என்பது போல நேர்க்கோட்டு தன்மை கொண்டதல்ல, படைப்பில் வெளிப்படும் யதார்த்தம் கனவில் வெளிப்படுவதை ஒத்தது. இதுவே மாஜிக்கல் ரியாலிஸம் என்ற பின்நவீனத்துவ எழுத்து முறையாகும். இத்தகைய கூறுகள் புதுமைப்பித்தனின் படைப்புகள் பலவற்றில் வெளிப்பட்டுள்ளன ‘‘உபதேசம்’’ கதையிலும் அவற்றின் தடயங்களை நாம் எதிர்கொள்கிறோம்.
இந்தக் கதையில் ஹடயோகியின் குடல் புண்ணுக்கு ஐரோப்பிய உடற்கூறு மருத்துவம் சிகிச்சைகளைப் பரிந்துரைக்கிறது. ஆனால் மறுநாள் நோயாளி மாயமாக மறைந்து விடுகிறான். இந்த அனுபவத்தை அறிவியலின் தர்க்கத்தால் விளக்க முடியாத. அதனால்தான் வில்கின்ஸனுக்கு திகைப்பு ஏற்படுகிறது. ஆனால் விசுவநாத் ஹடயோகியைப் பின் தொடர்கிறார், மொட்டை அடித்துக் கொள்கிறார். கஷாயம் வாங்குகிறார். ராணுவப் பாசறைகளில் உயிர்களைக் காப்பாற்ற தப்பு வழிகள் என்று சொல்லப்பட்ட முறைகளையும் பரிசீலித்துப் பரிசீலித்துப் பார்த்த விசுவநாத், அதேவித வெறியோடு யோக மார்க்கத்தையும் அணுகுகிறார். ஆனால் ஐரோப்பிய நாஸ்திகவாதியான வில்கின்ஸனுக்கு அந்தத் துணிவு இல்லாமல் போய் விடுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிற்பாடு வில்கின்ஸன் வருவாரென முன்னுணர்ந்து கைலாசபர்வத பனிச்சிகரத்தில் கடிதம் எழுதி வைத்துக்கொண்டு பனிக்குள் உறைந்து காத்திருக்கும் விசுவநாத்தைப் பார்க்கும்போது வில்கின்ஸனுக்கு எதுவும் புரியவில்லை. திரும்புவோமா என்றுதான் கேட்க முடிகிறது. ஐரோப்பிய விஞ்ஞானத்தின் எல்லை அங்கே உணர்த்தப்படுகிறத. பனிக்குள் உறைந்து உட்கார்ந்திருப்பது சாத்தியமா? வில்கின்ஸன் வருவாரென்பது விசுவநாத்துக்கு எப்படித் தெரியும்? என்பது போன்ற கேள்விகளை நாம் கேட்கலாம். இப்படியான கேள்விகளை எழுப்பும் தர்க்க வகைப்பட்ட அறிவு ‘‘Propositional Language’’ன் அடிப்படையிலானது. ஆனால் இலக்கியமோ தனக்கென பிரத்யேகமான ஒரு அறிதல் முறையைக் கொண்டிருக்கிறது; அதுதான் ‘‘கற்பனை’’ என்பதாகும். இது அரசியலாலோ, அறிவியலாலோ, அறவியலாலோ நமக்கு வழங்கப்படுவதில்லை. ஆனால் இதுதான் அரசியலையும், அறிவியலையும் அறவியலையும் சாத்தியப்படுத்துகிறது. ஏனென்றால் மொழியின் உருவாக்கத்தில்தான் இலக்கியம் இடம் பெற்றிருக்கிறது.

ரஜினியை புதுமைப்பித்தனோடு ஒப்பிட்டதற்காக நம் இலக்கிய அன்பர்கள் வருத்தப்படலாம். எனக்கென்னவோ அதில் தவறெதுவும் இருப்பதாகப் படவில்லை.ரஜினி குறிப்பிட்ட பெங்காலி பாபா புதுமைப்பித்தனின் கதையில் வரும் விசுவநாத்தோ என்னவோ ! யார் கண்டது!

டெலிவிஷன்களின் காலத்தில் திருமணங்கள்




மதுரையில் நடைபெற்ற மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இல்லத் திருமணத்துக்குப் ோயிருந்ேன் . மிகவும் சிறப்பாக நடைபெற்ற அந்த மணவிழாவில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜியும், ப.சிதம்பரமும் கலந்துகொண்டது காங்கிரஸ் - தி.மு.க உறவு வலுவாக இருப்பதற்கான சான்றாகப் பார்க்கப்பட்டது. பிரணாப்பை சிறப்பிப்பதில் தி.மு.கவினர் கண்ணும் கருத்துமாக இருந்தனர். முதல்வரும் அதைத் தனது ேச்சில் பதிவு செய்தார். ஆனால் அங்கு வந்திருந்த ூட்டத்தினருக்கு பிரணாப் அவ்வளவு முக்கியமாகப் படவில்லை. அவர்கள் நடிகர் ரஜினிக்குத் தான் மதிப்பு கொடுத்தனர். சொல்லப்ோனால் அங்கு வந்திருந்ததில் அதிகம் கை தட்டல் பெற்றவர் அவர்தான்.
ரஜினி சொன்ன அபத்தமான  பெங்காலி பாபா கதைக்கும்ூட அவர்கள் கைதட்டினார்கள். அந்த பெங்காலி பாபா பிரணாப் தான் என எனக்குத் ோன்றியது. பிரணாப்புக்காக அவரைப் பாராட்டி ரஜினி ஆங்கிலத்தி்ல் ேசினார். அவரது ேச்சைக் ேட்டோது அவர் காங்கிரஸில் ேர அப்ளிேஷன் ோடுவதுோல இருந்தது.
ரஜினி ேசியது ஒருபக்கம் இருந்தாலும் எனக்கு அந்த ூட்டம் நடந்துகொண்ட முறைதான் முக்கியமாகப் படுகிறது. தி.மு.க தொண்டர்களுக்கென்று ஒரு தனித்துவம் உண்டு. அவர்கள் தமது கட்சியையும் , தலைவரையும் தான் உயிராக நினைப்பார்கள். ஆனால் மதுரையில் ரஜினியைப் பார்த்து ஆர்ப்பரித்த தொண்டர்கள் அதிலிருந்து ேறுபட்டவர்களாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. தங்கள் பக்கம் டெலிவிஷன் காமிரா திரும்பிய ோதெல்லாம் அவர்கள் ஆர்த்தெழுந்தார்கள். பிரணாப் ேசும்ோது ூட்டத்தினரை ோக்கி காமிரா திரும்ப அவர்களின் ூச்சலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த ேரத்தில் முதல்வர் முகம் சுளித்ததைப் பார்க்க முடிந்தது. ூட்டத்தின் ஆரவாரம் காரணமாக பிரணாப்பும் சுருக்கமாகத் தனது ேச்சை முடித்துக் கொண்டார். முதல்வர் கலைஞர் தனது ேச்சின் ோது வருத்தத்துடன் அதைச் சுட்டிக்காட்டினார்.
டெலிவிஷன் அறிமுகம் ஆன பிறகு திருமண நிகழ்ச்சிகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பற்றி அம்பர்ோ எக்ோ எழுதிய கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. திருமண ேடை அமைப்பு , மணமக்களின் உடைகள் ோன்றவை எப்படியெல்லாம் மாறிவிட்டன  என்பதை அவர் விவரித்திருப்பார். டெலிவிஷனால் அரசியல் நடவடிக்கைகள் பெற்றுள்ள மாற்றங்கள் ஆய்வு செய்யப்படேண்டும்.
மதுரை திருமண விழாவில் நான் பார்த்த காட்சி டெலிவிஷன் , சினிமா ோன்றவை ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை மட்டுமின்றி தி.மு.கவில் நிகழ்ந்து வரும் பண்பு ீதியான மாற்றங்களையும் புலப்படுத்துவதாக இருக்கிறது. தி.மு.க தொண்டர் கள் இப்படி ஆகிவிட்டால் மற்ற கட்சிகளைப் பற்றிச் சொல்ல ேண்டாம் .தி.மு.க மட்டுமின்றி எல்லா கட்சிகளுே கவலைோடு சிந்திக்க ேண்டிய விஷயம் இது.
- ரவிக்குமார்

வேட்கைக் காற்று : 13 ம‌லேசிய‌க் கலைஞர்கள் - ஓர் அறிமுக‌ம் சு. யுவ‌ராஜ‌ன்

நான் வேலை பார்க்கும் கட்டிடம் 20 மாடிகள் கொண்டது. அதில் 13-ஆம் மாடிக்கு செல்லும் லிஃப்ட் பட்டனில் 12A என்று எழுதியிருக்கும். அங்கு வேலை செய்பவர்கள் பெரும்பாலோர், எல்லாம் தெரிந்தவர்கள் போலவே இருந்ததால் ஏன் என்று யாரிடமும் கேட்கவில்லை. நண்பர் ராம் குமார் தான் ஒருமுறை தெளிவுப்படுத்தினார். 13 மேலை நாட்டு மக்களுக்கு ஆகாத எண்ணாம். பேய்களுக்கும் அந்த எண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுவதாக பேய் படங்களின் ரசிகரான ராம் ஒருமுறை சொன்னார்.

சரி தமிழர்களுக்கும் 13 எண் உவப்பில்லாத எண்ணாக மாறிவிட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது. அண்மையில் நம் நாட்டின் 13 கலைஞர்கள் (ஓவியர்கள், புகைப்படக்காரர்கள், சிற்பி) ‘Winds of Desire’ என்ற தலைப்பில் தங்களின் படைப்புகளை பொதுமக்களின் பார்வைக்குக் கண்காட்சியாக வைத்தனர். கிட்டதட்ட அவர்களின் படைப்புகள் எல்லாம் விற்று முடிந்தன. ஆனால் வாங்கியவர் பெரும்பாலோர் மற்ற இனத்தினர். இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ததே ரம்லி இப்ராஹிம் சார்ந்திருக்கும் கலை மன்றம்தான். பின்வருவன அந்த பதிமூன்று கலைஞர்களைப் பற்றிய எளிய அறிமுகம் என வைத்துக் கொள்ளலாம். தன் பலத்தை அறிந்திருப்பவன் வெற்றியாளனாகிறான். நல்ல கலைஞர்களை அறிந்திருக்கும் சமூகம் முன்னகரவும், தம் ஆன்மாவை புடம்போட்டுக் கொள்ளவும் துணியும். துணியாவிட்டால் நட்டம் நிச்சயம் கலைஞர்களுக்கில்லை.

1. ஓவியர் டாக்டர். எஸ். சந்திரன்

ஓவியர் எஸ். சந்திரன் சிரம்பானில் பிறந்தவர். கோலாலும்பூரில் வளர்ந்தவர். ஐந்து வயதிலிருந்தே கலை அவரை ஆட்கொள்ளத் தொடங்கியது. கோயில்களில் இருக்கும் சிற்பங்களும், நாட்காட்டிகளில் மிளிரும் ஓவியங்களும், சேலைகளில் நெய்யப்பட்ட சரிகை வேலைப்பாடுகளும் அவரின் கலை உள்ளத்தை ஆட்கொள்ளத் தொடங்கியது. பிறகு ரெம்பராண்டின் ஒளித் தீண்டும் ஓவியங்கள் அவரின் ஓவியம் நோக்கிய நகர்வை மேலும் விரைவுப்படுத்தியது.

கலை அவர் குடும்பப் பின்னணியிலும் வேறூன்றி இருந்தது. அவர் மூதாதையர்கள் நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்களாக இருந்தனர். அவருடைய அக்கா பரத நாட்டிய பெண்மணியாக இருந்தார்.

அவருடைய பதின்ம வயதில் இந்தியாவிற்குச் சென்று கோவில்களில் நடக்கும் கலைப்பணிகளில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டார். அங்கிருந்தவாறே வர்ணம் கலைக் கல்லூரியில் பெரும் புகழ்ப்பெற்ற ஓவியரான அல்போன்சோ தாஸ் மேற்பார்வையில் ஓவியக் கலையில் நுட்பங்களை இன்னும் ஆழமாகக் கற்றுத் தேர்ந்தார்.

மலேசியாவிற்குத் திரும்பியவுடன் பெனெராங்கான் (Penerangan) இதழில் வேலையைத் தொடங்கினார். இந்நேரத்தில்தான் அவருடைய ‘சித்தார் பெண்’ ஓவியம் முதன் முதலில் வெளியிடப்பட்டது.

பிறகு அவருடைய திறமை சமுகத்தின் பார்வையை அவர் பக்கம் திரும்பச் செய்தது. இந்திய சமுகத்தைச் சார்ந்த சிறந்த ஓவியராக அவர் அறியப்படத் தொடங்கினார். பல சமுக நிதிச்சேகரிக்கும் திட்டங்களுக்கு உதவும் பொருட்டு அவருடைய ஓவியங்கள் விற்கப்படத் தொடங்கின. அவருடைய கைவண்ணத்தைத் தாங்கிய சுமார் 500, 000 தீபாவளி வாழ்த்து அட்டைகள் வெளிவந்தன.

கலைநிகழ்வுகளில் பிரபலங்களின் ஓவியங்களை மூன்று நிமிடங்களில் வரைந்து பிரபலமடைந்தார். பிறகு பப்ளிக் வங்கியின் ஆஸ்தான ஓவியராக 1987 முதல் 1992 வரை இருந்தார். அவ்வேளையில் அவ்வங்கியின் பல முக்கிய சின்னங்கள், ஓவியங்கள் வடிவமைப்பத்தில் மும்முரமாக இருந்தார்.

இத்தனை வருடங்களில் இவரின் ஓவிய ஆக்கங்களில் ஆதார சுருதியாய் அன்பு, அணிகலன்கள், சிற்ப வேலைபாடுகள் போன்றவை உள்ளன. மகாபலிபுரத்தில் அமைந்துள்ள பழைய ஆலயங்கள் அவருடைய ஆக்கங்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளன. சத்யஜித்ரே படங்களில் வரும் நாயகிகளின் பாவங்களும் அவருடைய ஓவியங்களாக மாறியுள்ளன.

அவருடைய பணிகளுக்காக 2006-ஆம் ஆண்டு அமெரிக்க கெம்டன் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது. 2009-ஆம் ஆண்டில் சென்னை கலைக் கல்லூரியில் சிலப்பதிகாரத்தில் பயன்படுத்தப்பட்ட அணிகலன்களைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறார்.

இவ்வாண்டு அவருடைய புத்தரைப் பற்றி ‘ஞானம்’ ஓவியம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து ஓவியங்களில் புதுமையைத் தேடும் இவர், தற்போது Friends to Mankind அமைப்பின் கலைத் தூதுவராக பணிப்புரிகிறார்.

2. வி. சந்திரன்

ஒரு தற்காப்பு கலை நிபுணர் புகைப்படக் கலைஞரான கதை இது. சீ விளையாட்டுப் போட்டியில் கராத்தே பிரிவில் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வென்றவரின் ஆன்மாவில் ஆக்ரோசத்தோடு அமைதியான கலையும் கலந்திருந்தது இயற்கையின் பல ஆச்சரியங்களில் ஒன்றுதான். ஃபிரிக்பீல்ட்ஸ் பகுதியில் பிறந்து வளர்ந்தவரான வி. சந்திரன் புகைப்பட கலையில் ஈடுப்பட்டது தற்செயல்தான்.

பதினெட்டு வயதிருக்கும்போது YMCA செயலாளர், டேவிட் வொங் என்ற புகைப்பட கலைஞருக்கு உதவியாளராக இருக்க முடியுமா என கேட்டபோது ஆர்வமாக ஒப்புக்கொண்டார். ஆனால் அது அவரை இவ்வளவு தூரம் தீவிர ஈடுபாட்டுக்கு வழிவகுக்கும் என அவர் நினைக்கவில்லை.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, வோங்கும் சந்திரனும் ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிப்புரியத் தொடங்கினர். அங்கிருந்த ஐந்து வருடங்களும் புகைப்பட கலையில் உள்ள நுட்பங்களைக் கற்று தேர்ந்தார்.

1990-ல் பெரித்தா வெளியிட்டாளர்களுக்குப் பணிப்புரியத் தொடங்கினார். அவர்களிம் வெளியீடான ‘Jelita’ மற்றும் ‘Malaysian Business’ சார்பாக பல வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு அமைந்தது. பயணம் அவருடைய கலைக் கண்ணை இன்னும் கூர்மைப்படுத்தியது எனலாம்.

இன்று சொந்தப் புகைப்பட நிறுவனத்தை வைத்திருக்கிறார் திரு. வி. சந்திரன். அவரின் பெரிய முயற்சியாக வரவேற்கப்பட்டது பகாங் அரசு குடும்பத்தினர் ஏற்பாட்டில் நிகழ்ந்த ‘பகாங் பாரம்பரிய உணவு’ தொகுப்புகளுக்கு புகைப்படம் எடுத்த போதுதான்.

கறுப்பு வெள்ளையில் புகைப்படம் எடுப்பதை இன்னும் விரும்பும் வி. சந்திரன், பாலி நடன மங்கை ஜரிடா மாலிக்கின் நடன அசைவுகளைப் பதிவு செய்த ப‌டங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. நடன அசைவுகளில் இருக்கும் நளினத்தோடு அதன் ஏகாந்தத்தையும் பதிவு செய்யப்பட்ட விதம் பார்ப்பவர் மனங்களைக் கொள்ளைக் கொள்கிறது.

புகைப்படக் கலையிலுள்ள ஈடுபாட்டினால் தனது மனதுக்கு உகந்த விஷயங்களை செய்ய இயலுவது மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்கிறார். தற்சமயம் தன்னுடைய வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும் அளவுக்கு தான் உழைப்பதை நிறைவாகச் சொல்கிறார். இருந்தும் எதிர்காலத்தில் தன் மனதுக்கு உகந்த விஷயங்களில் மட்டும் ஈடுபட உத்தேசித்துள்ளதாகச் சொல்கிறார்.

எதிர்காலத்தில் புகைப்பட கலையில் ஒளியைப் பயன்படுத்தும் விதத்தை இன்னும் கூர்மையாக சிந்திக்க போவதாக சொல்கிறார். ‘இப்போதெல்லாம் யாராலும் படம் எடுக்க முடியும், இருப்பினும் சுற்றிலும் உள்ள ஒளியை எவ்வாறு உங்கள் படங்களில் பிரதிப்பலிக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் படத்தை மிக சிறந்த படமாக மாற்றும்’ என நம்பிக்கையாக சொல்கிறார். ஒளி எல்லோரிடமும் பரவட்டும்.

3. எரிக் பெரிஸ்

நாளிதழ்களின் பரபரப்பு சூழலிலும் தன் படைப்பு மனத்தைத் தக்க வைத்துக் கொண்ட புகைப்படக்கலைஞர் எரிக் பெரிஸ். 1939-ல் முவாரில் பிறந்தவர், கொஞ்ச நாளில் குடும்பத்துடன் சிங்கபூருக்குக் குடிப்பெயர்ந்தார். அங்குப் பல்கலைக்கழகம் வரை தன் படிப்பைத் தொடர்ந்தார்.

ஸ்ட்ரேட் டைம்ஸ் இதழில் வேலைச் செய்துக் கொண்டிருந்தவர், மலேசிய சிங்கப்பூர் பிரிவினைக்குப் பிறகு கோலாலும்பூருக்குக் குடிப்பெயர்ந்தார். 1995 வரை அந்நாளிதழில் புகைப்படப் பிரிவில் வேலை செய்தார்.

நாளிதழ் வேலை தரும் வரமே தொடர்ச்சியான பயணம்தானே. மலேசியாவில் கடைக்கோடி வரை கையில் புகைப்படக் கருவியுடன் அலைந்தார். மலேசியாவின் ரம்மியமான மலைக் காடுகளை அவருடைய புகைப் பட கருவியில் பதிவு செய்தார். ஈய வயல் சார்ந்த அவருடைய புகைப்படங்கள் நூலாக வந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.

என்பதுகளில் அவருடைய கவனம் இந்திய பாரம்பரிய நடன அசைவுகளின் மீது திரும்பியது. ரம்லி இப்ராஹிமின் சுத்ரா நடன அமைப்போடு அவர் இணைந்து உருவாக்கிய புகைப்படங்களும் அவருக்கு நல்ல பெயரைப் பெற்று தந்தது. புகைப்படங்களின் மீது சொந்தமாக வர்ணம் தீட்டும் சிந்தனையும் அவரிடம் இருந்தது. அவருடைய ‘Leaf abstract’ அம்மாதிரியான ஒரு முயற்சிதான்.

தற்போது எண்மய (digital) புகைப்படக் கருவியைப் பயன்படுத்தினாலும், புகைப்படங்களை கணிணியின் உதவியோடு அவர் உருமாற்றுவதில்லை. புகைப்படங்களின் தெளிவையும் ஒளியையும் சரி செய்வதோடு சரி. கண்களே சிறந்த கணினி என இன்னும் நம்புகிறார்.

புத்த மதத்தை சார்ந்தவரான எரிக், புத்தரின் சிந்தனைகளை தன் புகைப்படங்களில் பிரதிப்பலிப்பதை முக்கியமாக உணர்கிறார். அதன் நிலையாமை தத்துவம் அவருடைய படைப்புகளில் விரவிக் கிடக்கிறது. இது அவருடைய படைப்புகளை ஆழ்ந்து பார்ப்பதற்கும் உணர்வதற்கும் வழிச் செய்கிறது.

2007-ல் சமாதி என பெயரில் வெளியான அவருடைய புகைப்படங்கள் இந்நிலையாமை சிந்தனையை இன்னும் விரிவாக புரிந்துக் கொள்ள உதவியது. அதில் தாமரை அடங்கிய புகைப்படம் காலத்தை மீறிய ஏகாந்த உணர்வைத் தருவதைக் கூர்மையாகப் பார்ப்பவர் உணர்வர்.

40 வருடங்களுக்கு மேலாக புகைப்படங்கள் எடுத்தாலும் இன்னும் தான் கற்றுக் கொள்ள நிறைய இருப்பதை அடக்கத்துடன் சொல்கிறார். சிறந்த புகைப்பட நிபுணர் வரிசையில் தான் இருப்பதாக நினைக்கவில்லை என்கிறார். தான் மலேசியாவைச் சார்ந்த எளிய புகைப்படக் கலைஞன் எனச் சொல்வதில் அவருக்கு எவ்வித தயக்கங்களும் இல்லை. ஆனால் அவரின் புகைப்படங்களைப் பார்த்தவர்களும் அதன் ஆழத்தை உணர்ந்தவர்களும் அப்படி நிச்சயம் சொல்ல மாட்டார்கள்.

4. இந்துமதி கிருஷ்ணன்

தமிழகத்தைச் சேர்ந்தவரான திருமதி இந்துமதி கிருஷ்ணன் எழுபதுகளிலே சென்னை கலைக் கல்லூரியில் ஓவியத்தை முறையாக பயின்றவராவார். ஓவியத்தோடு, சிற்பம், சுடுமண், குறிவரைப்படக் கலை என பல கலைகளை ஐந்து வருட படிப்பில் முறையே கற்றுத் தேர்ந்தார்.

எல்லா இளம் ஓவியர்களைப் போலவே அவரும் ஆரம்பத்தில் எதார்த்த ஓவியங்களையே வரையத் தொடங்கினார். அவரது இயல்பான திறமை அப்போதே வெளிப்பட்டு ஊக்கமான வார்த்தைகள் அவருக்குக் கிடைத்தன. ஆனால் மாணவர்கள் சோதனை முயற்சிகளில் ஈடுபட ஊக்குவிக்கப்பட்டபோது அவரும் பூடகமான சோதனை முயற்சிகளை நோக்கி நகர்ந்தார்.

இந்துமதியின் ஓவியங்களில் மிளிரும் கோடுகள் வலிமையானவை. பெண்களே அவருடைய வரைக் கருவாக பெரும்பாலும் உள்ளனர். பெண்களை வரையும்போது தான் மிகவும் ஆத்மார்த்தமாகவும் ஈடுபாட்டுடனும் செயல்பட முடிவதாக கூறுகிறார் இந்துமதி. அண்மையில் அவருடைய ‘மனதின் பாடல்’ என தலைப்பிட்ட கண்காட்சியில் வைக்கப்பட்ட தன்னை மறந்து தாளமிட்டவாறே சித்தார் இசைக்கும் பெண்ணின் ஓவியம் மிகவும் விதந்தோதப்பட்டது. ஓவியத்தில் இசை மற்றும் மகிழ்ச்சியை ஒருமுகமாய் வெளிப்படுத்திய ஆற்றல் அவ்வோவியத்தில் இருந்தது.

பச்சை மற்றும் நீல நிறங்களைப் பெரிதும் பயன்படுத்தும் இந்துமதி ஓவியங்களில் அமெரிக்க ஓவியர் மார்க் ரொட்கோ அவர்களின் பாதிப்பு உள்ளதைச் சொல்கிறார். ரொட்கோவின் வர்ண தெறிப்பு தன்னை மிகவும் கவர்வதாக சொல்கிறார்.

ஒவியக் கண்காட்சிகள் தனக்கு மிகவும் உவப்பை அளிப்பதாக சொல்கிறார் இந்துமதி. தன்னுடைய ஒவியங்கள் மூலமாக தன் மனச்சாரளங்களை மற்றவருடன் பகிர்ந்துக் கொள்ளும் ஊடகமாக கண்காட்சிகள் இருப்பதாக சொல்கிறார்.

ஓவியர் Dr. வி. கிருஷ்ணனை மணந்தப் பிறகு மலேசியாவில் குடியேறிய பின் தொடர்ந்து ஓவியங்களை வரைந்து வருகிறார். ஓவியங்களோடு வரைப்பட கலையிலும் தொடர்ந்து முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். அவருடைய ஓவிய ஆசிரியர்களும் சிறந்த ஓவியர்களுமான அல்போன்சோ தாஸ், அந்தோனி தாஸ் மற்றும் சந்தனராஜ் போன்றவர்களின் வலிகாட்டுதலே தன்னுடைய நீண்ட ஓவிய பயணத்திற்கு உறுதுணையாக இன்னும் இருப்பதாக நம்புகிறார்.

இந்துமதி அவர்களின் வாழ்வியல் பார்வை அவருடைய ஓவியங்களைப் போலவே ரம்மியமாக இருக்கிறது. காலையில் கரிச்சான் குஞ்சுகளின் ஓசையோடு துயிலெழும் போது வாழ்வின் சுதந்திரத்தை உணர முடிகிறது. நம்முடைய மூச்சிலும், தூய்மையான நீரிலும், அகண்ட வானத்திலும், விழும் மழையிலும், நகரும் மேகங்களிலும், இரவின் விண்மீன்களும் சுதந்திரத்தை எனக்கு நினைவுபடுத்துகின்றன. என்னுடைய ஓவியங்களும் சுதந்திரத்தின் பாடலைப் பாடி பறக்கும் பறவையை ஒத்தது என கவித்துவமாக சொல்கிறார் திருமதி இந்துமதி. அவருடைய ஓவியத்தைப் பார்ப்பவர்கள் அதனை ஆமோதிப்பர்.

5. ஜகன்நாதன் ராமச்சந்திரம்

இவர் சிறுவயதில் வங்கியின் ஊழியராக ஆசைப்பட்டவர். பள்ளிப் படிப்பு முடிந்ததும் பதினேழு வயதில் ஃபிரிக்பீல்ட்சில் உள்ள அந்தோனியன் புத்தகக்கடைக்கு வேலை நேர்முகத்திற்குச் சென்றார். கேட்கப்பட்ட 24 கேள்வியில் பத்து சதவிதம் கூட பதிலளிக்காத போதே தன் கனவு நொறுங்கிக் கொண்டிருப்பதை அவர் உணராமல் இல்லை. வேதனையோடு வெளிவந்தபோது, அன்று ஃபிரிக்பீல்ட்சில் ஓவியர் எஸ். சந்திரனின் ஓவிய கண்காட்சிக்குத் தற்செயலாகச் சென்றார். அந்த ஓவியங்கள் அவருள் உறங்கிக் கொண்டிருந்த ஓவியனைத் தட்டி விழிக்கச் செய்தது. அன்றே ஓவியத் தளவாடங்களை வாங்கினார்.

ஒரே வாரத்தில் அவர் வரைந்த ஓவியம் தமிழ் நேசனில் வெளிவந்து, அவரை உற்சாகமடைய செய்தது. மூன்று வாரங்களுக்குப் பிறகு சஞ்சய் காந்தியின் திடீர் மறைவு அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் சஞ்சய் காந்தியை ஓவியமாக தீட்டி ஒரு பத்திரிக்கைக்குத் தந்திருந்தார். இப்படியான ஆச்சரியங்கள் அவர் வாழ்க்கையில் இன்னும் பல இருக்கிறது.

பிறகு ஸ்ட்ரேட் டைம்ஸில் ஓவியராக பணிப்புரியத் தொடங்கினார். ஆனால் அவருள் இருந்த கலைஞனின் தேடல் அவரைப் பயணம் போகத் துரத்திக் கொண்டே இருந்தது. 1982-ல் இந்தியாவிற்கு பயண‌மானார். அங்கு ஓர் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து ஓவியம் கற்கத் தொடங்கினார். ஆனால் அது அவருக்கு உவப்பானதாக இருக்கவில்லை. கல்வியை நிறுத்திவிட்டு வடக்கு நோக்கி பயணமானார். இமாலய பிரதேசங்களில் சுற்றித் திரிந்தார்.

மீண்டும் தமிழகம் வந்தார். அங்கு தன் நண்பரின் மாமானாரான தங்கவேல் ஆச்சாரியிடம் சேர்ந்து ஓவியம் கற்கத் தொடங்கினார். அவர் பெரும்பாலும் கண்டு உள்வாங்கியே தன் திறமையை வளர்த்துக் கொண்டார்.

1984-ல் மலேசியா திரும்பியவர் இந்திய தொழிலாளர்களை மையமாக வைத்து ஓவியங்களை வரையத் துவங்கினார். முழுநேரமாக கலைஞனாக இருந்ததால் வறுமை அவரை வதைத்துக் கொண்டிருந்தது. இடையில் மாரடைப்பு வந்து மீண்டு வந்தார்.

நோய் அவருக்கு இன்னும் பல சாரளங்களைத் திறந்தது. தன் தமக்கையுடன் இணைந்து இந்து அறிவியல் என ஓவியங்களைக் கொண்ட நூலை அச்சடித்து சொந்தமாகவே விநியோகிக்கத் தொடங்கினார். மீண்டும் அவருக்கு ஓவிய சார்ந்த நல்ல வாய்ப்புகள் வரத் துவங்கின.

ஜகன் அவர்களின் ஓவியங்கள் குறியியல் சார்ந்தவை. தன் முகத்தையே பல்வேறு குறியீடுகளில் வரைந்திருக்கிறார். விநாயகர் பல்வேறு குறியீடுகளில் ஜகனின் ஓவியங்களில் காட்சியளித்துக் கொண்டிருப்பது அவரைத் தொடர்ந்து வரும் ரசிகர்கள் அறிவார்கள்.

ஜகன் அவர்களின் அபூர்வமான நகைச்சுவை உணர்வு அவருடைய ஓவியங்களிலும் பிரதிபலிக்கும். அவரின் ஓர் ஓவியத்தில், மலாயா கணபதியின் முகத்தில் மேய்ந்துக் கொண்டிருக்கும் நண்டுகள் எதன் குறியீடு தெரியுமா? உங்களுக்குப் புரியவில்லை என்றால் நீங்கள் தமிழனே இல்லை.

6. டாக்டர். வி. கிருஷ்ணன் 

சுங்கைவேவில் பிறந்தவர் டாக்டர். வி. கிருஷ்ணன். கேலிச்சித்திரங்கள் மீதான ஈர்ப்பே அவரை ஓவியங்களை நோக்கி நகர்த்தியதென நினைவு கூர்கிறார். குறிப்பாக பேனோ, டெண்டி மற்றும் டோப்பர் முதலிய கேலிச்சித்திரங்கள். சிறுவயதில் ஃபிரிக்பீல்ட்ஸ் பகுதியில் சீனக் கேலிச் சித்திரங்களைப் பார்த்து வளர்ந்ததும் முக்கியமான பாதிப்பாக உணர்கிறார். எளிய கோடுகளால் உருமாறும் கேலிச்சித்தங்களின் பாதிப்பு இன்னும் அவர் ஓவியங்களில் காணலாம். குறிப்பாக கிருஷ்ணரை ஒரு சமுராய் வீரனைப் போல் உருவகப்படுத்திய ஓவியம்.

ஒரு மருத்துவராக உருவாக சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரிக்கு 1964-ல் பயணமானார். ஆனால் கலை மீதான ஆர்வம் அவரை சென்னை கலைக் கல்லூரி நோக்கி திருப்பியது. ஏற்கெனவே கலைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவர் நண்பர்கள் மூலம் கல்லூரி பேராசிரியர்களும் சிறந்த ஓவியர்களுமான அல்போன்சோ தாஸ், சந்தானராஜ் மற்றும் அந்தோனி தாஸ் போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது.

காலையில் மருத்துவத்திலும் மாலை நேரங்களில் கலைக் கல்லூரியில் கடினமாக உழைத்துக் கற்கத் தொடங்கினார். சென்னையிலுள்ள கலைக் கூடங்களிலும் அருங்காட்சியகங்களிலும் உள்ள முக்கிய ஓவியங்களைப் பார்வையிடுவதும் வரைவதுமாக காலம் சென்றது. முக்கியமாக ஓவியர் ராஜா ரவிவர்மா ஓவியங்கள் அவரை மிகவும் கவர்ந்திருந்தது.

வார இறுதியில் அவர் தன் நண்பர்களோடு தமிழகத்திலுள்ள மலேசிய தூதரகத்தில் ஓவியங்கள் வரைவார்கள். அதை அப்போதைய துணைத் தூதுவரான அல்பிரட் குமரசேரி வாங்கி தூதரக சார்பாக பரிசாக தந்து அவர்களை ஊக்கப்படுத்தினார். அதோடு குமரசேரியின் ஊக்குவிப்போடு ‘மலேசிய ஓவியங்கள்’ என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியும் இடம்பெற்றது. அவ‌ரோடு ஓவியங்களைக் காட்சிக்கு வைத்த மற்ற மலேசிய ஒவியர்கள் முறையே சுசிலா சொக்கலிங்கம், K. கிருஷ்ணன் மற்றும் சையது தாஜுதின் ஆவார்கள். அந்தக் கண்காட்சியில் பாத்திக் கலை சார்ந்த ஓவியத்தைக் காட்சிப்படுத்தினார் வி. கிருஷ்ணன்.

கிருஷ்ணரின் உருவம் தொடர்ந்து அவருடைய ஓவியங்களில் இடம் பெறுகிறது. இதை மதம் சார்ந்த ஒன்றாக அவர் நினைக்கவில்லை. கிருஷ்ணரை வீரத்தின், தத்துவத்தின், நற்பண்புகளின் பிரபஞ்ச அடையாளமாகவே வி. கிருஷ்ணன் அவர்களின் ஓவியங்களில் இடம்பெறுகிறது. கிருஷ்ணர் மாயாவைக் வென்றதின் குறியீடாக, சாராம்சமாக அவருடைய ஓவியங்கள் அமைந்திருக்கின்றன.

முப்பது வருடங்களாக மருத்துவராக இருந்துவரும் இவர், மருத்துவத்தையும் ஓவியத்தையும் தன் இரு கண்களாக நினைக்கிறார். இரண்டையுமே மனித வாழ்க்கையின் தரத்தை உயர்த்தும் ஊடகமாகவே இருப்பதாக சொல்கிறார். மருத்துவம் உடலையும் கலை மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் சாதனமாக இருப்பதாக நம்புகிறார். அறிவியலும் கலையும் இணையும் இடத்தில் ஆரோக்கியமான சிந்தனைகள் வெளிப்படுவது இயல்பு. வி. கிருஷ்ணனின் ஓவியங்கள் அதை வழிமொழிகின்றன.

7. K. கிருஷ்ணன்

டாக்டர் வி. கிருஷ்ணனைப் போலவே 1966-ஆம் ஆண்டில் மருத்துவம் பயில தமிழகம் சென்றவர் K. கிருஷ்ணன். ஆனால் மருத்துவ படிப்பைத் தொடராமல் கலை கல்லூரியில் சேர்ந்து பயிலும் அளவுக்குக் கலை தாகம் கொண்டவர். சுசிலா சொக்கலிங்கம், K. கிருஷ்ணன் மற்றும் சையது தாஜுதின் போன்ற மலேசியாவைச் சார்ந்த மற்ற ஓவிய நண்பர்களோடு தமிழகத்திலுள்ள மலேசிய தூதரகத்தில் தன் ஓவியங்களைக் கண்காட்சிக்கு வைத்தவர்.

K. கிருஷ்ணன் கொஞ்சம் வித்தியாசமானவர். அப்பொழுதே பந்துமுனை மைக்கோலை (ballpoint pen) ஓவியம் வரையப் பயன்படுத்தியவர். அவருடைய பெரும்பாலான ஓவிய நண்பர்களைப் போலவே நவீன ஓவியம்தான் அவருடைய ஆரம்ப கால விருப்பமாக இருந்தது. 1972-ல் மலேசியா திரும்பியவுடன் கோலாலும்பூரில் அமைந்துள்ள சமாட் கலைக் கூடத்தில் தனது முதல் தனி ஓவிய கண்காட்சியை வைத்தார். எட்டு வருடங்களுக்குப் பிறகு, பினாங்கு அருங்காட்சியகத்தில் தனது இரண்டாவது ஓவிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தார். அவரிடம் அப்பொழுது 50-க்கும் அதிகமான ஓவியங்கள் இருந்தன. நீர் வர்ணம், மை என பல்வேறு உபகரணங்களைப் பயன்படுத்தி ஓவியங்களை எழுப்பியிருந்தார் K. கிருஷ்ணன்.

வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு சமுதாயத்தில் நேரும் புறக்கணிப்புகள் K. கிருஷ்ணன் அவர்களுக்கும் நேர்ந்தது. ஓவியங்கள் மூலமான வருமானத்தில் குடும்பம் நடத்துவது அவருக்குச் சிரமமாக இருந்தது. சிங்கப்பூரில் பாதுகாவலர் வேலைக்குப் போகும் சூழல் அவருக்கு அமைந்தது. வாழ்வியல் சிக்கல் வயிறைக் கட்டிபோடலாம். கலைஞனின் மனதைக் கட்டிப் போட இயலாது. அன்றாடம் வேலைக்கு செல்லும்போது, எல்லையைக் கடக்கும் மனித கூட்டத்தின் பிம்பம் அவரின் ஓவிய மனதை இன்னும் விரிவடையவே செய்தது. நெரிசல் உருவாக்கும் ஒளியும் இருளும் அவருடைய கலைக் கண்களில் ஓவியங்களாக மிளிரத் துவங்கின.

உண்மையான கலைஞர்களை கலை உள்ளம் கொண்டவர்கள் சரியாக அடையாளம் கண்டு விடுவார்கள். சிங்கபூரில் ஓவியக் கலைக் கூட உரிமையாளர் ஒருவர் K. கிருஷ்ணன் அவர்களின் திறமையைக் கண்டு கண்காட்சி வைக்க உதவினார். அங்கு கண்காட்சி வைக்கப்பட்ட ஓவியங்கள் பந்துமுனை மைக்கோலை பயன்படுத்தி வரைந்தவை.

எழுபதுகளில் K. கிருஷ்ணன் அவர்களின் பந்துமுனை மைக்கோல் ஓவியங்கள் கோடுகள் மிகவும் அழுத்தமாகவும் இருளடர்ந்தும் இருந்தன, தற்போது அவருடைய கோடுகளில் மெதுதன்மை தவழ்வது அவருடைய ஓவியத்தின் தொடர் ரசிகர்கள் உணர்வார்கள். உதாரணத்திற்கு அவருடைய வேட்டைக்காரன் (2009) ஓவியத்தைச் சொல்ல வேண்டும். உருவமும் பின்னணியும் நெருக்கமான கோடுகளால் பிணைந்து இருப்பதுபோல் வரைவது K. கிருஷ்ணன் அவர்களின் பாணியாக இருக்கிறது.

காகிதங்களை பெரும்பாலும் வரைவதற்குப் பயன்படுத்துகிறார் K. கிருஷ்ணன். ‘காகிதங்கள் என்னுடைய ஓவியங்களை விட முக்கியமானவை’ என சொல்லும் அளவுக்குக் காகிதங்களை முக்கியமாக கருதுகிறார். அவை ஓவியங்களை எண்ணங்களைத் தாங்கும் ஆவணங்கள் என்பார்.

பொதுவாக எந்த ஓவிய சிந்தனைகளோடும் தன்னை இணைத்துக் கொள்பவரில்லை K. கிருஷ்ணன். ஆனால் அவர் புத்த தரிசனங்களை, கிரேக்க தத்துவத்தில், உலகப் புராணங்களில் இன்னும் தனது வாசிப்பையும் ஆய்வையும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்.

8. மைக்கல் அந்தோனி

மைக்கல் அந்தோனி அவர்களின் கலைவாழ்வு வர்ணமயமான நாடோடி வாழ்வை ஒத்தது. சுங்கை சிப்புட் பிறந்தவரின் இன்றைய வாழ்வு பிரான்ஸ் தேசத்திற்கு நகர்ந்திருக்கிறது. எட்டு குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் இரண்டாமவரான மைக்கல் சிறுவயதிலேயே ஓவியத்தின் பால் ஈடுபாடு கொண்டவராக இருந்திருக்கிறார். குடும்ப சூழலால் 13 வயதிலேயே பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு பெற்றோர்களோடு பால் மரம் சீவ உதவினார். பிறகு கோலாலும்பூருக்கு வந்து மளிகை கடைகளிலும், கிளினிக்களிலும் வேலை செய்தார்.

பிறகு சுற்றுலா பயணிகளை பூக்கேட்டிலிருந்து பினாங்கிற்கு கொண்டு வரும் இயந்திர படகில் உதவியாளராக பணிப்புரிந்தார். பிறகு நண்பர் ஒருவர் மத்திய தரைக் கடல் நாடுகளுக்கு உல்லாசப் படகில் பயணம் செய்யும் வாய்ப்பை வழங்கினார். ஆனால் அவருடைய பயணம் இலங்கையிலேயே முறிந்து மீண்டும் மலேசியா வந்தார். மீண்டும் கடற்பயணம் அவரை அழைத்துக் கொண்டே இருந்தது. இம்முறை சைப்ரஸ்.

ஐரோப்பாவில் கென் ஸ்கோட் என்ற ஆடை வடிவமைப்பாளரின் நட்பு கிடைத்தது. அவரின் உதவியாளராக 1979லிருந்து 1991 வரை இருந்தார். பகட்டும், அலங்காரமும் நிறைந்த உலகம் அது. வடிவமைப்பு சார்ந்த அனுபவம் அவரது பிந்தைய சிற்ப கலை உருவாக்கத்திற்குப் பெரிதும் உதவியது. அவரது மற்ற நண்பர்களான சூசன் நெவல்சன் (ஆடை மற்றும் வீடு அலங்கரிப்பு), சில்வி பிரேவர்மன் (பொறிமுறைவரைதிறன் (draughtmanship) மற்றும் ஓவியங்கள்) போன்றவர்களின் பாதிப்பும் அவருடைய கலைச்சிந்தனையில் பெரும் பங்கு வகித்தது.

மைக்கல், கென் ஸ்கோட் பற்றி இப்படி சொல்கிறார். ‘அவர் எனக்கு பாணி பற்றிய ரசனையையும், வர்ணங்கள் பற்றிய நுட்பமான பார்வையையும் கற்று தந்தார். எதைப் பார்த்தாலும் புதிய கண்ணோட்டத்தில் காணச் சொல்லி தந்தார்’.

மைக்கல் மிலான் நகரிலுள்ள ஸ்குலா ப்ரேரா கலைக் கல்லூரியில் இணைந்து நவீன ஓவியங்கள், சிற்பங்களை புதிய பாணியில் உருவாக்குவதைக் கற்றார். மைக்கலின் சிற்பங்களின் வளைவுகளில் இருக்கும் நளினம் முக்கியமானவை. அவருடைய சிற்பங்களின் பின் வடிவமும் (post geometric) அச்சிற்பங்களுக்கு பெண்களின் பெயரிடுதலும் பார்வையாளர்கள் சீண்டவும் கேலிச் செய்யும் தன்மை கொண்டவை.

சியாரா சமுகியோ என்ற பெண் புகைப்படக்காரரோடு கலைக் கூடத்தை பங்கு வைத்து கொண்டிருக்கும், இடவசதியின்மையின் காரணமாக இப்போது ஓவியங்களை அதிகம் வரையத் துவங்கியிருக்கிறார். புதிய சிந்தனைகளையும் பாணிகளையும் தன் கலைப் படைப்பில் பயன்படுத்தத் தயங்காதவர் மைக்கல். அவருடைய படைப்புகளில் ஆதார சுருதியாக மானுட ஒற்றுமை, சுதந்திரம், அமைதி போன்றவை குறியீடாக உள்ளன.

பன்மொழிகளில் உரையாடும் வல்லமை கொண்டவரான மைக்கல் மலேசியாவைத் தவிர இத்தாலி, ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளில் தன் கலைக் கண்காட்சியை வைத்துள்ளார். இன்னும் பல நாடுகளில் இந்த நாடோடி கலைஞனின் படைப்புகள் வைக்கப்படும் வேண்டும் என்பது நம் அவா.

9. நிர்மலா கருப்பையா

குவாந்தானில் பிறந்த புகைப்படக் கலைஞர் நிர்மலா கோலாலும்பூரில் வளர்ந்தவர். மலேசிய காலைக் கல்லூரியில் படித்தவரான நிர்மலாவைப் புகைப்படக்கலை உள்ளிழுத்துக் கொண்டது. தன்னுடைய இறுதி ஆண்டு கள ஆய்வாக அவர் தெரிவுச் செய்தது இந்திய பாரம்பரிய நடனமான ஒடிசியை. அங்கிருந்து தொடங்கியதுதான் கலைஞர் ரம்லி இப்ராஹிமுடனான நட்பு.

படிப்பு முடிந்ததும் சில காலம் குறிவரை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் பிறகு ஸ்டார் நாளிதழில் புகைப்படக்காரராக இணைந்தார். அங்கு ஒன்பது வருடங்கள் பணியாற்றினார்.

2005-ல் வேல்வர்ஹெம்டன் பல்கலைக்கழகத்தில் புகைப்படத்துறையில் முதுகலை படிக்கச் சென்றது அவரது புகைப்படக் கண்களை இன்னும் கூர்மையடையச் செய்தது. ஒடிசி நடன படத்தை பட்டுத் துணியில் பதிவுச் செய்து அவருடைய ஆய்வுக்குச் சமர்ப்பித்தார். பட்டுத் துணியின் மிருதுத் தன்மையும் மிளிரும் ஒளியும் ஒடிசி நடன அசைவுகளை மேலும் மெருகேற்றின.

நிர்மலாவுக்கு எப்போதுமே புகைப்படக் கருவியில் இருக்கும் நம்பிக்கையைவிட அதை உபயோகிக்கும் மனிதனின் திறமையே முக்கியம்.

நிர்மலாவிற்குப் பாரம்பரிய நடனங்கள், அதற்கான ஆயத்தங்கள், நடனத்திற்குப் பின்பான ஓய்வு போன்றவற்றை பதிவுச் செய்வதில் அலாதி ஆர்வம் உண்டு. இந்திய நடனங்கள் தவிர்த்து மலாய் நடனங்களைப் பற்றிய புகைப்படங்களும் அவருடைய சேமிப்பில் உள்ளன. எடுத்துக்காட்டாக Main Petri Makyong என்ற கிளந்தானைச் சேர்ந்த பார்வையாளர்கள் அருகிவரும் நடனம் குறித்து அவருடைய புகைப்படங்கள் முக்கியமானவை. அதிலும் அந்நடனத்தில் பெயர்பெற்ற மெக் செபியாவை (Mek Sepiah) பதிவு செய்த படங்கள். இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்ட சில வாரங்களிம் மெக் செபியா காலமானார்.

பதினேழு ஆண்டுகளாக புகைப்படகாரராக இருந்துவரும் நிர்மலா தன்னுடைய புகைப்பட ஆர்வங்களை பல மாதிரிகளாக மாறி வந்திருக்கின்றன. சுற்றுச்சூழல், பட்டண அமைப்பு, கட்டட அமைப்புகள், மனித உருவங்கள் என அவருடைய விருப்பங்கள் புகைப்படங்களாக மாறியுள்ளன.

2009-ல் ஃப்ரிமன் உதவி தொகை கிடைத்து அமெரிக்காவில் உள்ள வெர்மண்ட் நிலையத்தில் தங்கி தன் புகைப்பட திறமையை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. அங்கு மேபல் (maple) இலைகளைத் தனது புகைப்பட பொருளாக எடுத்துக் கொண்டார். மேபல் இலைகளைப் பற்றிய அவரது தேடல் செவ்விந்தியர்களில் மேபல் நடனம் வரை இட்டு சென்றது. மேபல் நடனத்திற்கும் ஒடிசி நடன அசைவுகளுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை அவரது புகைப்படங்கள் வாயிலாக கண்டுணர்ந்தார். எது எப்படியோ நிர்மலா அவர்களின் பயணம் முழுவதிலும் நடனங்கள் மேலெழுந்து வந்து கொண்டே இருக்கின்றன.

10. சையது தஜூடின் ஷேக் அபு தாலிப்

1943 ஆண்டு அழகன் குளத்தில் பிறந்தவர் தஜுடின். அவருடைய பெற்றோர்கள் இந்தியாவில் விடுமுறைக்காக தங்கியிருந்தபோது பிறந்தார். அச்சமயம் ஜப்பானிய படையெடுப்பால் அங்கேயே தங்கியிருந்து 1954-ல் பினாங்கு தீவிற்கு திரும்பி வந்தனர்.

மீண்டும் உயர்கல்வி பெரும்பொருட்டு 1960களில் தமிழகம் சென்றார். சென்றதென்னவோ மதுரை மருத்துவ கல்லூரியில் படிக்கும் பொருட்டுதான். ஆனால் கலை ஆர்வம் அவரை சென்னை கலைக் கல்லூரியில் சேரச் செய்தது.

அக்கல்லூரியில் காலையில் ஓவிய நுட்பங்களை பயில்வதிலும் மாலை ஓவிய பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடவும் உதவியது. அங்கு அவர் கற்ற இராமாயணமும் மகாபாரதமும் அவருடைய கலை சிந்தனையை மேலும் செழுமைப்படுத்தின.

கலைக் கல்லூரி ஆசிரியர்கள் அவரை காசி, கஜராஹோ போன்ற ஓவியம், சிற்பங்களுக்குப் பெயர் போன இடங்களுக்குப் பயணம் போக ஊக்குவித்தனர். அதில் அஜுந்தா ஓவியங்கள் அவரைப் பெரிதும் பாதித்தன. இன்றும் அவருடைய ஓவியங்களில் அந்தப் பாதிப்புகள் உள்ளன.

தமிழகத்தில் இருக்கும்போதே அவருடைய நண்பர்களான சுசிலா, வி.கிருஷ்ணன், K.கிருஷ்ணன் போன்றவர்களோடு இணைந்து மலேசிய தூதரகத்தில் அவருடைய ஓவியங்களையும் கண்காட்சிக்கு வைத்தார்.

மலேசிய திரும்பியதும் மாரா தொழில்நுட்ப கல்லூரியில் ஓவிய ஆசிரியராக பணிப்புரிந்தார். இந்தியாவில் படித்து அங்கு வேலை செய்தது அப்போது அவர் ஒருவரே. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய CIMB வங்கியில் இணைந்து 26 வருடங்கள் அங்குப் பணியாற்றினார்.

தஜுடின் வேலைகளுக்கு இடையில் தொடர்ச்சியாக வீட்டிலேயே ஓவியங்கள் வரைந்தார். பிறப்பும் வாழ்வும் அவருடைய வரைப் பொருள்களாக இருந்தன. பிறகு மலேசியா ஒட்டிய ஓவியங்களை வரையத் துவங்கினார். எடுத்துக்காட்டாக பரமேஸ்வரா, மலாய் அரச பரம்பரை இசைக்கலைஞர்கள் மற்றும் பாத்திக் போன்றவை மீது அவர் ஆர்வம் இருந்தது.

பிறகு ஒடிசி நடனத்தைப் பிரதிபலிக்கும் ஓவியங்களை வரைந்தார். நடனத்தின் போது பயன்படுத்தப்படும் ஆபாரணங்கள், உடைகளை ஒளி மிகுந்து வரைந்தது அதன் கலைத்தன்மையை மேலும் மெருகேற்றின. நம் நாட்டின் பல்லின கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவும் அவருடைய ஓவியங்கள் இருந்தன. ‘கண்களின் சந்திப்பு’ (2005) பிரதிபலிக்கப்படும் மரச் சன்னல் ஓவியம் குறிப்பிடத்தக்கது.

காதலையும் பெண்களையும் தொடர்ந்து வரையும் தஜுடின் ஒரு ஓவியத்தை வரைந்து முடிக்க குறைந்தது ஆறு மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். ‘நீங்கள் பொறுமையாகவும் உங்கள் ஓவியத்திற்கு உண்மையாகவும் இருக்க வேண்டுமென்றால் இந்த காலம் தேவையே’ என்கிறார். அவருடைய பல் அடுக்குகளும் நுட்பமான ஓவியங்களுமே அதற்கு சான்று.

11. சிவம் செல்வரத்னம்

சிவம் செல்வரத்னம் 1950-களில் பீட்டர் ஹெரிஸின் புதன் கலை குழுவில் அங்கத்தினராக இருந்தவர். அக்குழுவில் சையட் அமாட் ஜலால், சியோங் லை தோங், ஜோலி கோ, பெட்ரிக் ங் கா ஓன் போன்றவர்களும் இருந்தனர். புதன்கிழமைதோறும் ஃபிரிக்பில்ட்சில் அமைந்துள்ள பெண்கள் மெதடிஸ்ட் பள்ளியில் கூடுபவர்கள், அங்குள்ள இளம் ஓவியர்களுக்குப் பயிற்சி வழங்குவார்கள். மேலை நாட்டில் படித்து விட்டு வந்தவர்களான அவர்கள் தங்கள் அனுபவங்களை இளையோர்களிடம் பகிர்ந்து கொள்ளும் களமாக இது அமைந்தது.

கோதா பாருவிலும் பிறகு ஆசிரியர் வல்லுனர் பயிற்சி கழகத்திலும் தனது படிப்பை முடித்தப் பிறகு லண்டன் தொழிட்நுட்ப கல்லூரியில் ஆடை வடிவமைப்பில் கல்வியைத் தொடர்ந்தார். ஆனால் அங்கு அச்சு, ஓவியம் போன்றவற்றிலும் ஆழமாக கற்றுக் கொள்ளும் வாய்ப்பிருந்தது. தன் இறுதியாண்டு ஆய்வாக ஒலி மற்றும் வர்ணங்கள் ததும்பும் உடலை ஓவியமாக வரைந்திருந்தார்.

அவருக்கு இசைமேதைகள் ரவிசங்கர் மற்றும் அலி அக்பர் கான் மீது பெரிய ஈர்ப்பு இருந்தது. இது அவரை ஓவியத்தில் இசையின் சாத்தியங்களை முயல உதவியது. மலேசிய திரும்பியதும் 1970-ல் பிரிட்டிஷ் தூதரகத்தில் தன்னுடைய முதல் தனி ஓவிய கண்காட்சியை வைத்தார். ஒன்பது வருடங்களுக்குப் பிறகு சிங்கபூர் இளையர் கல்லூரிக்கு கலை ஆசிரியராக பணிப் புரிய சென்றார்.

பிறகு அவருடைய கணவர் வேலை நிமித்தமாக லண்டன் சென்றபோது அவரும் லண்டன் செல்லும்படி ஆயிற்று. லண்டனில் தனது கலை மற்றும் வடிவமைப்பில் முதுகலை பட்டம் பெற்றார்.

சிவம் அவர்களின் ஓவியங்கள் பெரும்பாலும் இந்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. குறிப்பாக மரபிசை, யந்திரங்கள், இயற்கை அவருடைய தொடர்ச்சியான வரைப் பொருளாக இருக்கிறது. சிறுவயதில் இயற்கை அழகு கொஞ்சும் காஜாங் பகுதியில் வசித்தது காரணமாக அமைந்தது. அவர் வீடு அமைந்திருக்கும் பகுதியில் ஆறும், பழமரங்களும், மிருகங்களும் இருந்ததாக கூறுகிறார். சிறுவயதில் பல மணி நேரங்கள் இங்கு விளையாடியதைச் நினைவு கூர்கிறார்.

சிவம் அவர்களின் ஓவியங்களில் மேற்கத்திய பாதிப்புகளும் இல்லாமல் இல்லை. அவருக்கு பவுல் கண்டிஸ்கி, பவுல் லீ போன்றவர்கள் ஆதர்சமாக இருந்துள்ளனர். தற்சமயம் வரைந்து கொண்டிருக்கும் ஜெக்சன் பொல்லாக்கும் அவருக்கு விருப்பமானவராக இருக்கிறார். இம்மூவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. மூவருமே சிவம் போல ஓவியத்தோடு இசையிலும் விருப்பமுள்ளவர்கள்.

சிவம் ஓவியம் வரையும்போது கர்நாடக இசையின் ராகங்களைக் கேட்டவாறே வரைகிறார். ‘இசைக் கலைஞர்கள் ராகங்களின் ஒத்திசைவில் கவனம் கொள்கின்றனர், ஓவியர்கள் வர்ணங்களின் ஒத்திசைவில் அக்கறை கொள்கின்றனர்’ என்கிறார் சிவம். சிவத்தின் அக்கறையை அவரது ஓவியங்கள் பிர‌திபலிக்கின்றன.

12. சிவராஜா நடராஜன்

சிவராஜா வளர்ந்ததென்னவோ கோலாலும்பூர்தான். தஞ்சையில் பிறந்து மலேசியாவிற்கு குடிப்பெயர்ந்த அவரது தந்தையின் அரவணைப்பு சிவராஜா அவர்களுக்கு ஓவிய ஆர்வத்திற்குத் துணையாக இருந்தது.

மலேசிய கலை கல்லூரியில் நுண்கலையில் பட்டம் பெற்ற சிவராஜாவிற்கு அங்கு ஆசிரியர்களாக லு ஃபோ சாங், பீட்டர் லியு, யோ ஜின் லியோங், அங் போன்றவர்கள் ஆசிரியர்களாக இருந்து வழிநடத்தினர். ஆரம்பத்தில் சிவராஜாவிற்கு உடலியல் சார்ந்த ஓவியங்களை வரைவதில் ஆர்வம் இருந்தது. ஓர் ஆய்விற்காக அவரது ஆசிரியர் நடன அசைவுகளை பற்றி தெரிந்து கொள்ள சுத்ரா நடன குழுவை நாட சொன்னார்.

சுத்ரா நடன குழுவின் ரம்லி இப்ராஹிமிற்கு சிவராஜா அவர்களை வடிவமைத்ததில் பெரும் பங்குண்டு. ரம்லியின் நடன ஒத்திகைக்கு அழைத்து நடன அசைவுகளின் கலாப்பூர்வமான அர்த்தங்களை மேலும் உணரச் செய்தார். 1993-ல் தன் பட்டப்படிப்பை முடித்த கையோடு பெட்டாலிங் ஜெயா சிவிக் மையத்தில் (Civic Centre) ‘வாசனை’ என கருப்பொருளில் தன் ஓவியங்களை கண்காட்சிக்கு வைத்தார்.

பிறகு சுத்ரா நடன குழுவின் நிகழ்வுகளுக்கு பிந்திரை ஓவியங்களை உருவாக்க ரம்லி அவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டார். இன்றோ அந்நாடக குழுமத்தின் அரங்க வடிவமைப்பு, உடைகள், மேடை மேலாண்மை, என அத்தனையும் பார்த்துக் கொள்ளும் அளவுக்கு அவர்களிடையிலான கடந்த இருபது வருடங்களாக நட்பு வளர்ந்துள்ளது.

சிவராஜாவின் ஓவியங்களில் நடன தொடர்பான வரைப்பொருள் தொடர்ந்து உள்ளது. அவரது நடன சம்பந்தமான தேடல் ஒடிசியிலிருந்து பிறகு பரதநாட்டியம், கொதிபுவா (ஒரிசா சிறுவர் நடனம்), நவீன நடனம் மற்றும் பாரம்பரிய மலாய் நடனங்களான மாக்யோங், மாய்ன் பெத்ரி, மற்றும் மெனொரா என இன்று விரிவடைந்துள்ளது. நடனத்தை ஒட்டிய அவரது ஆழ்ந்த ஈடுபாடு அவரது ஓவியங்களில் மிகவும் நுட்பமான நடன அசைவுகள், முகபாவங்கள் போன்றவற்றை மிகுந்த ஆற்றலுடன் வெளிப்படுத்த முடிகிறது.

2007-ல் எண்மய (digital) அச்சு தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி தன் முகங்களையே ஓவியங்களாக மாற்றினார். அவருடைய மற்றொரு முக்கிய சாதனை அவருடைய ‘மாலை ராகம்’ என ஓவியம் குறிக்கப்படுவதில் இருக்கிறது. அதில் பிண்ணிய நிலையிலுள்ள பாம்புகளை பிரிக்கும் பாம்பு போன்ற வெள்ளை கோடு தாந்திரீக ஆற்றலை அந்நடனத்தில் கொண்டு வரும் முயற்சியில் செய்யப்பட்டது.

சுத்ரா நடன குழுமத்தோடு உலக முழுவதும் பயணம் செய்து பல அரிய இடங்களை, நடன ஒத்திகைகளை, நடன விழாவை புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது.
அவருடைய ஒலி அமைப்பு அனுபவமும் ஓவிய ஆற்றலும் ஒன்றில் ஒன்றை நிறைவு செய்யும் தன்மை கொண்டது. அதனால் இரண்டையும் கலை நேர்த்தியோடு கையாள அவரால் முடிகிறது. இருப்பினும் நடன அமைப்புகளில் அவருடைய ஈடுபாடு ஒரு கூட்டு நடவடிக்கை என்பதை அவர் உணராமலில்லை. அதனால் தன்னுடைய சுய அடையாளத்தை வெளிக் கொண்டுவரும் ஓவியத்திலேயே இனி அதிகம் கவனம் செலுத்த வேண்டுமென்பது அவரது விருப்பமாக உள்ளது.

13. ஸ்டீபன் மேனன்

குவாந்தான் பகாங்கில் பிறந்தவர் ஸ்டீபன் மேனன். நம் நாட்டின் சிறந்த உடலியல் ஓவியர் என அறியப்படுகிறார்.

அவருடைய ஓவிய ஆர்வம் 1990-ல் மலேசிய கலை காட்சியகத்தில் அம்ரோன் ஓமாரின் ‘சுய ஓவியங்களை’ கண்ணுற்றபோது துளிர்த்தாக சொல்கிறார். கைலி கட்டிக் கொண்டு பிரம்பு நாற்காலியில் இறுகிய முகத்துடன் அம்ரோன் ஒமார் அமர்ந்திருக்கும் காட்சி அவரை வெகுவாக கவர்ந்தது.

இடைநிலை கல்வியை முடித்ததும் கோலாலும்பூர் கலைக் கல்லூரியில் குறிவரை வடிவமைப்பில் படிக்கத் தொடங்கினார். படிப்பு முடிந்ததும், அனிமேட்டராக பணிப்புரிந்து கொண்டே உடலியல் அசைவுகள் பிரதிபலிக்கும் ஓவியங்களை வரைய முற்பட்டுக் கொண்டிருந்தார்.

2000-த்தில் மேனன் தான் குருவாக நினைக்கும் அம்ரோனிடம் தன் ஓவிய கல்வியைத் தொடங்கினார். வெள்ளிக்கிழமை கோலாலும்பூர் வந்து அம்ரோனிடம் கற்றுவிட்டு ஞாயிறு மீண்டும் குவாந்தானுக்குத் திரும்புவார்.

கரித்துண்டைப் பயன்படுத்துவது மேனனின் விருப்பத்துக்குரிய ஒன்றாகும். அவர் ஆழமாகவும் முரண்பட்டும் நிற்கும் வெள்ளை கருப்பு கோடுகள் மிகவும் பிரியமானவை. வர்ணங்களையும் அவர் பயன்படுத்துவதுண்டு. அவருடைய பன்முக ஆளுமையை அவரது ‘கண்ணோடு கண்’ என்ற தலைப்பில் வரைந்த ஓவியங்களில் காணலாம். பெரும்பாலும் தன் முகத்தையே ஓவியமாக வரையும் மேனனின் ஓவியங்களில் அவரது கண்கள் துணியால் கட்டப்பட்டிருக்கும்.

அவர் தன்னைச் சுற்றியுள்ள இயற்கையோடு எதிர்வினையாற்ற விரும்பவில்லை என குறிப்பிடுகிறார். ‘கண்ணோடு கண் தலைப்பு ஓவியங்களில் நான் என் கண்களைக் கட்டிக் கொண்டேன். நான் எனக்குள் என்னை அறிந்து கொள்ள விரும்புகிறேன். நான் எந்த கருத்துகளும் சொல்ல விரும்பவில்லை. மாறாக நான் நானாக இருக்க விரும்புகிறேன். சில நேரங்களில் என கண்களைக் கட்டிக் கொள்ளும்போது என்னுடைய உள்ளணர்வின் வலிமையை உணர்கிறேன். இது என்னுடைய என் அனுபவத்தை நோக்கிய உள்முகபயணம்’ என தொடர்ந்து குறிப்பிடுகிறார்.

சமீப காலங்களில் கேலிச்சித்திரம் வகைப்பட்ட ‘இன்னும் தொடரும்’ தலைப்பில் ஓவியங்களை 2009-ல் வெளியிட்டார். தற்சமயம் சீன ஓவியர் மவோ ஜெடோங் அவர்களைப் பின்பற்றி ஓவியங்களை வரைந்து வருகிறார். 2010-ல் 60களில் வெளியான சுவரொட்டியில் கருப்பு வண்ணத்திலான தனது கை அச்சை வைத்து ஓவியங்களை உருவாக்கியிருக்கிறார் உள்முக பயணத்தை பெரிதும் நம்பும் இந்த ஒவியர்.

துணை நூல்: Winds of Desire

நன்றி : வல்லினம் 
http://www.vallinam.com.my/issue20/column2.html

Saturday, November 20, 2010

இந்த முறை ஒரிசா - ரவிக்குமார்



ஒரிசாவில் கந்தமால் பகுதியில் கிறித்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளில் பதினான்கு பேருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தக் கலவரம் நடந்த நேரத்தில் நான் ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரை இது : 









‘‘தேர்தல் வரும் பின்னே, மதக் கலவரம் வரும் முன்னே’’ என்பது ஒரு புதுமொழியாக இந்திய அரசியலில் உறுதிப்பட்டு வருகிறது. ஒரிசா எரிந்து கொண்டிருக்கிறது. பதினாறு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. தேவாலயங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் & ஏன்? அனாதை விடுதிகளும்கூட விட்டு வைக்கப்படவில்லை. எல்லாம் சாம்பலாக்கப்பட்டிருக்கின்றன. ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் காடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். மதவாதத்தின் பரிசோதனைக்கூடம் என்று அழைக்கப்பட்ட குஜராத்தைத் தொடர்ந்து இப்போது ஒரிசா. குஜராத்தில் முஸ்லீம்கள், ஒரிசாவிலோ கிறிஸ்தவர்கள். அதுதான் வித்தியாசம்.
குஜராத்துக்கு அடுத்தது ஒரிசாதான் என்று முன்பே அபாய எச்சரிக்கை ஒலிக்கப்பட்டது. ஆனால் அரசாங்கம்தான் அதை கண்டுகொள்ளவில்லை. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாநிலத்தில் தொழு நோயாளிகளிடையே சேவை செய்து வந்த ஆஸ்திரேலிய நாட்டுப் பாதிரியார் க்ரஹாம் ஸ்டூவர்ட் ஸ்டெய்ன்ஸ் என்பவரையும், அவரது மகன்கள் பிலிப் மற்றும் திமோத்தி ஆகியோரையும் சங்கப்பரிவாரத்தினர் உயிரோடு எரித்துக் கொலை செய்தபோதே அந்த அபாயச்சங்கு ஊதப்பட்டது. அதே ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அருள்தாஸ் என்ற பாதிரியார் சங்கப்பரிவாரத்தினரால் அம்பு எய்து படுகொலை செய்யப்பட்டார். 2002ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி திரிசூலம் ஏந்திய வி.எச்.பி. தொண்டர்கள் ஒரிசா சட்டமன்றத்துக்குள் புகுந்து அதை அடித்து நொறுக்கினார்கள். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக ஒரிசா மாநிலத்திற்குள் மதவாத நஞ்சு ஏற்றப்பட்டது. அதை அங்கிருந்த மாநில அரசும் ஆதரித்து வளர்த்தது.
தற்போது ஏவப்பட்டுள்ள கலவரம் ஆர்.எஸ்.எஸ். ஆதரவோடு ஒரிசாவில் செயல்பட்டு வந்த சுவாமி லக்கானநந்தா என்பவர் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து ஆரம்பித்தது என்று செய்திகள் குறிப்பிடுகின்றன. ஆனால் இந்த கலவரத்துக்கான ஒத்திகை கடந்த டிசம்பர் மாதமே ஆரம்பமாகி விட்டது. குஜராத் மாநில சட்டமன்றத்துக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்து நரேந்திரமோடி வெற்றிபெற்ற செய்தி கடந்த டிசம்பர் 23ஆம் தேதி வெளியானது. குஜராத்தில் ஒலித்த வெற்றி முழக்கத்தின் எதிரொலி அதற்கு மறுநாள் ஒரிசாவில் கேட்டது. ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தில் சங்கப்பரிவாரத்தினர் உற்சாகமாகக் களத்தில் இறங்கினர். பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த பாஸ்டர் ஜூனாஸ் திகால் என்பவரை வெளியே இழுத்துப்போட்டு அடித்து உதைத்தனர். அவரது உடைகளையெல்லாம் கிழித்து நிர்வாணமாக்கி தெருவில் ஊர்வலம் விட்டனர். கிறிஸ்துமஸுக்காக தேவாலயங்களில் செய்யப்பட்டிருந்த அலங்காரங்கள் அடித்து நொறுக்கப்பட்டுப் பந்தல்கள் எரிக்கப்பட்டன. மூன்று நாட்களுக்குள் கந்தமால் மாவட்டத்தில் ஐந்து பெரிய தேவாலயங்களும், நாற்பத்தெட்டு கிராம சர்ச்சுகளும், கன்னியாஸ்திரிகளின் ஐந்து கான்வென்ட்டுகளும், ஏழு ஹாஸ்டல்களும், ஏராளமான கிறிஸ்தவ நிறுவனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன. சங்கப்பரிவாரத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் சில்லு, அவினாஷ் நாயக் என்ற இரண்டு சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். பல நாட்கள் வரை வன்முறையைக் கட்டுப்படுத்த மாநில அரசு முன்வரவில்லை. இப்போது நடந்து கொண்டிருக்கும் தாக்குதல் கடந்த டிசம்பரில் ஏவப்பட்ட வன்முறையின் தொடர்ச்சிதான்.
சுவாமி லக்கானநந்தாவை படுகொலை செய்தவர்கள் யார் என்று தெரியாத நிலையில் மாவோயிஸ்டுகள் அதைச்செய்திருக்கலாம் என்ற யூகங்கள் பத்திரிகைகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சங்கப்பரிவாரத்தினரோ சுவாமியைக் கொன்றது கிறிஸ்தவர்கள் தான் என்று குற்றம் சாட்டுகின்றனர். கிறிஸ்தவர்களோ அதை வன்மையாக மறுத்து வருகின்றனர். சுமார் எண்பத்து மூன்று வயது கொண்ட லக்கானநந்தா தனது மதவெறிப் பேச்சின் மூலமாகப் பிரபலம் அடைந்தவர். சலவைத் தொழில் செய்யும் குடும்பம் ஒன்றில் பிறந்த லக்கான் 1969ஆம் ஆண்டு சக்கபடா ஆசிரமத்தை நிறுவியதன் மூலம் சுவாமி லக்கானநந்தா சரஸ்வதி என புது அவதாரம் எடுத்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ரகுநாத் சேத்தி என்பவரால் துவக்கத்தில் வழிநடத்தப்பட்ட லக்கானநந்தா ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தை ‘கிறிஸ்துஸ்தான்’ ஆக்குவதற்கு கிறிஸ்தவர்கள் சதி செய்கிறார்கள் என்ற பிரச்சாரத்தை நம்பினார். ஆதிவாசி மக்களை கிறிஸ்தவத்திலிருந்து மீட்பதே தனது லட்சியம் என்று கடந்த நாற்பது ஆண்டுகளாக செயல்பட்டு வந்தவர் அவர். 2006ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிதாமகர்களில் ஒருவரான கோல்வால்கரின் நூற்றாண்டை லக்கானநந்தா முன்நின்று நடத்தினார். அதன்மூலம் அந்தப்பகுதியில் இந்துத்துவ செல்வாக்கை வளர்த்தார். அவருடைய பிரச்சாரத்துக்கு ஒத்துழைத்த இன்னொரு முக்கியமான நபர் குய் சமாஜ் என்ற அமைப்பின் தலைவரான லம்போதர் கன்ஹார் என்பவராவார். வழக்கறிஞரான கன்ஹார் நேரடியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்போடு தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாவிட்டாலும் இந்துத்துவ அமைப்புகளின் ஆதரவு அவருக்கு எப்போதும் இருந்து வருகிறது.
ஒரிசா மாநிலத்தின் மக்கள் தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.4 விழுக்காடுதான். இப்போது கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கந்தமால் மாவட்டத்தில் 16 சதவீதம் கிறிஸ்தவர்கள் வசிக்கின்றனர். ஒரிசாவின் ஆதிவாசி மக்களிடையே இந்துத்துவ அமைப்புகள் நீண்டகாலமாகவே வேலை செய்து வருகின்றன. சங்கப்பரிவாரத்தினர் ஒரிசாவின் ஆதிவாசி மக்களிடையே 391 சரஸ்வதி சிசு மந்திர் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். அவற்றில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயிலுகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஏகல் வித்யாலயா, வனவாசி கல்யாண் பரிஷத், விவேகானந்தா கேந்த்ரா, சேவா பாரதி போன்ற நிறுவனங்களும் சங்கப்பரிவாரத்தினரால் நடத்தப்படுகின்றன. ஒரிசாவில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் முழுநேர தொண்டர்களைக் கொண்ட ஆறாயிரம் ஷாக்காக்களை ஆர்.எஸ்.எஸ். நடத்தி வருகிறது. இப்படியான திட்டமிட்ட செயல்பாடுகளின் மூலமாகத்தான் ஒரிசாவில் கொஞ்சம் கொஞ்சமாக மதவெறி ஏற்றப்பட்டு இருக்கிறது.
ஆதிவாசிகளை இந்துக்களாக மாற்றுவது என்பதுதான் ஒரிசாவில் சங்கப்பரிவாரங்களின் முதன்மையான செயல்திட்டம். ஒரிசாவில் இருக்கும் ஆதிவாசி மக்களை கிறிஸ்தவர்களாகவும், இந்துக்களாகவும் மதமாற்றம் செய்கிற முயற்சி பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே ஆரம்பமாகி விட்டது. சாதி அமைப்புக்குள் வராத ஆதிவாசி மக்களை மதமாற்றம் செய்து சாதி உணர்வு கொண்டவர்களாக மாற்றியது சங்கப்பரிவாரங்களின் சாதனை என்றே சொல்லலாம். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் குற்றப்பரம்பரையினராக ஒதுக்கப்பட்ட பானா என்ற ஆதிவாசி பிரிவினரைத் தீண்டத் தகாதவர்களாக இந்துக்கள் நடத்திய காரணத்தினால் அவர்களில் கணிசமானவர்கள் கிறிஸ்தவத்தைத் தழுவினார்கள். அப்படி கிறிஸ்தவர்களாக மாறிய பானா ஆதிவாசிகளுக்கு எதிராக கந்தா உள்ளிட்ட ஆதிவாசிப் பிரிவினரை ஏவுகிற காரியத்தைத் தொடர்ந்து திட்டமிட்ட முறையில் சங்கப்பரிவாரத்தினர் செய்து வந்துள்ளனர். மதம் மாறினாலும் இடஒதுக்கீட்டு சலுகைகளை அனுபவித்து வந்த பானா கிறிஸ்தவர்களுக்கு ஆதிவாசி அந்தஸ்தை வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து குய் சமாஜ் அமைப்பினர் போராடி வருகின்றனர். அதை ஆதரித்தவர்தான் லக்கானநந்தா. பானா கிறிஸ்தவர் பிரிவைச் சேர்ந்த பத்மநாவ் பெஹரா என்பவர் நவீன் பட்நாயக் அமைச்சரவையில் சுரங்கத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார். அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று குய் சமாஜ் அமைப்பினரும், இந்துத்துவ சக்திகளும் கொடுத்த அழுத்தத்துக்குப் பணிந்து நவீன் பட்நாயக் கடந்த டிசம்பரில் அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கியது சங்கப்பரிவாரங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்து விட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த வன்முறையின்போது அரசு எந்திரமும், சங்கப்பரிவாரத்தினரும் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தியதாகப் பல்வேறு செய்திகள் வெளிவந்தன. அதைச் சரி செய்வதற்கு நவீன் பட்நாயக் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது நடந்து வரும் வன்முறைத் தாக்குதல்கள் அந்த மெத்தனத்தின் விளைவுகள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஒரிசா கலவரத்தைப் பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று இப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்று ஒருவேளை உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தாலும்கூட ஒரிசாவில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு அதனால் பெரிய அளவில் பாதுகாப்பு எதுவும் கிடைத்துவிடும் எனக் கூறமுடியாது. தேர்தல் நெருங்க நெருங்க சங்கப்பரிவாரங்களின் வன்முறை வெறியாட்டம் அதிகரிக்கும் என்பது எல்லோரும் அறிந்ததுதான். மதவாத ரதத்தில் பயணம் செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது என்பதுதான் சங்கப்பரிவாரங்களின் செயல் திட்டமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சேதுசமுத்திர திட்டமும் அந்த விதத்தில்தான் அவர்களால் கையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதச்சார்பற்ற சக்திகள் வலியுறுத்த வேண்டிய முக்கியமான விஷயம் தற்போது மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்டிருக்கும் ‘‘மதவாத வன்முறை (தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு) மசோதா-2005’’ஐ உடனடியாக சட்டமாக்க வேண்டும் என்பதுதான்.
மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்த சட்டத்தை கொண்டு வருவதாகத் தனது குறைந்த பட்சப் பொது வேலைத் திட்டத்தில் வாக்குறுதி அளித்திருந்தது. இடதுசாரிக் கட்சிகளின் வற்புறுத்தலின் காரணமாக கடந்த 2005ஆம் ஆண்டு மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அதில் இருந்த குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன. அதன்காரணமாக அது நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாவின் மீது பல்வேறு திருத்தங்களை இந்தியா முழுவதும் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், மனித உரிமை அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் முன்மொழிந்தன. அவற்றையெல்லாம் நிலைக்குழுவும் தொகுத்து அரசிடம் அளித்திருந்தது. இருந்தபோதிலும் இந்த மசோதா இதுவரை சட்டவடிவம் பெறவில்லை. தங்களது ஆதரவை விலக்கிக்கொள்வதற்கு முன்பாக இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்திய பல்வேறு விஷயங்களில் இந்த மசோதா சட்டமாக்கப்பட வேண்டும் என்பதும் இடம் பெற்றிருந்தது.
இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் ஓரளவுக்கு மதவாத வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியும். அடிக்கடி மதக்கலவரங்கள் நடைபெறும் பகுதிகளை மதவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என அறிவிக்கவும், அப்பகுதிகளில் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்தச் சட்டம் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. மதக்கலவரங்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்தச் சட்டத்தில் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றில் ஒரு குற்றத்துக்கு வரையறுக்கப்பட்டுள்ள தண்டனையைப் போல இரண்டு மடங்கு தண்டனையை மதவாத வன்முறையில் ஈடுபடுகிறவர்களுக்கு வழங்குவதற்கும் இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. அரசுப் பணிகளில் இருப்பவர்கள் மதவாத வன்முறைக்கு ஆதரவாக செயல்பட்டால் அவர்களுக்குக் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை வழங்குவதற்கு இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுகிற ஒருவர் ஆறு ஆண்டுகள் வரை எவ்விதப் பதவியையும் வகிப்பதற்கு தகுதியற்றவர் எனவும் இந்தச் சட்டம் குறிப்பிடுகிறது. மதவாத வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு நிதி உதவி செய்தால் அவர்களை குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கலாம் என இந்தச் சட்டம் கூறுகிறது. இப்படிப் பல்வேறு நல்ல அம்சங்கள் கொண்ட இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் ஏனோ மத்திய அரசு மெத்தனமாக இருக்கிறது.
ஒரிசாவில் மதக்கலவரம் நடந்து கொண்டிருக்கிற இந்தச்சூழலில் தமிழ்நாட்டு அரசியலில் இந்துத்துவம் பற்றிய விவாதங்கள் சூடு பிடித்திருக்கின்றன. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அ.தி.மு.க. என்ன நிலையை மேற்கொண்டது என்பதைப்பற்றியெல்லாம் இப்போது விலாவாரியாகச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தமிழக முதல்வர் இதுகுறித்து ஆதாரப்பூர்வமான தகவல்களை எடுத்து வைத்திருக்கிறார். தமிழகத்தில் மதவாத சக்திகள் காலூன்றி விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு கருத்துக்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் அவர்கள் அதே பொறுப்புணர்வோடு மத்திய அரசை வலியுறுத்தி, தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ள ‘‘மதவாத வன்முறை (தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு) மசோதா-2005’’ஐ உடனடியாகச் சட்ட வடிவம் பெறச்செய்ய வேண்டும். இது இந்தியா முழுவதும் இருக்கும் சிறுபான்மை மதத்தவரின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, மதச்சார்பற்ற சக்திகளின் வேண்டுகோளும்கூட.

03.09.2008

2ஜி விவகாரத்தில் பிரதமர் பதில்

இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் இரண்டாம் தலைமுறை அலைவரிசைகள் ஏலம் விடப்பட்டதில் அரசுக்கு சுமார் 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக சிஏஜி எனப்படும் இந்திய தணிக்கை ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இதன் பின்னர் தான் எவ்வித தவறையும் செய்யவில்லை என கூறியிருந்த தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராஜா கடந்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் 16 மாத காலமாக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டை ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சுவாமி பதிவு செய்து இருந்தார். இது குறித்து இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் விளக்கமளிக்க வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில் இந்திய பிரதமரின் விளக்கம் அவரது அலுவலகத்தின் இயக்குநர் வித்யாவதி மூலமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் தாங்கள் நட்வடிக்கை எடுக்கவில்லை என்பதை பிரதமர் மறுத்துள்ளார். மேலும் இதில் சுப்ரமணியன் சுவாமி அவர்கள் பிரதமருக்கு அனுப்பிய கடிதங்கள் தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்புத்துறையின் முன்னாள் அமைச்சர் ஆ.ராஜா மீது குற்ற நடவடிக்கை எடுக்க சுப்ரமணியன் சுவாமி பிரதமரிடம் அனுமதி கேட்டது குறித்து, பிரதமர் அலுவலகம் சட்ட அமைச்சகத்திடன் ஆலோசனை கேட்டதாகவும், ஆனால் சி.பி.ஐ விசாரித்து வருவதால் சட்ட அமைச்சகத்தின் ஆலோசனையை பெற முடியவில்லை என்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதிலில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே புதுதில்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நாடாளுமன்றம் நடைபெறுவதற்கு எதிர்கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும் என்றும், எந்த ஒரு விஷயத்தை விவாதிக்கவும் தாங்கள் அஞ்சவில்லை என்றும் கூறினார்.
இந்த நிலையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியன் சுவாமி, இரண்டாம் தலைமுறை அலைகற்றைகள் ஏலம் கொடுக்கப்பட்டது தொடர்பில் தான் எழுப்பிய அனைத்து பிரச்சனைகளையும் பிரதமரின் அலுவலகம் கொடுத்துள்ள பதில் மனு உறுதிப்படுத்துவதாக கூறியுள்ளார்.
அத்தோடு தொலைத்தொடர்புதுறை முன்னாள் அமைச்சர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க தான் கீழ் நீதிமன்ற ஒன்றை அணுக தனக்கு இப்போது தடை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது ஒரு புறம் இருக்க, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2004 முதல் 2007 வரை தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதிமாறன், ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயத்தை அமைச்சரவை குழு முடிவு செய்ய கூடாது என்றும், இது குறித்த முடிவை தனது அமைச்சகம் மட்டுமே எடுக்கும் என்பதை பிரதமர் அங்கீகரிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தற்போதைய ஜவுளித்துறை அமைச்சரான தயாநிதிமாறன், 2006 ஆம் ஆண்டு தான் அமைச்சராக இருந்த போது, அலைகற்றைகள் ஏற்கனவே சேவையில் இருந்த நிறுவனங்களுக்கே கொடுக்கப்பட்டது என்றும், பெரும்பாலான அலைகற்றைகள் பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் போன்ற அரசு சார் நிறுவனங்களுக்கே கொடுக்கப்பட்டது என்றும், அத்தோடு அலைகற்றைகளின் விலையானது டிராய் எனப்படும் தகவல் தொடர்பு ஆணையத்தின் அறிக்கைகளை பொறுத்தே அமைக்கப்பட்டது என்றும் கூறினார்.

courtesy : பிபிசி தமிழோசை