Friday, October 22, 2010

எந்திரன் : டூவீலர் மெக்கானிக் செய்த பொம்மை





''எந்திரன் நன்றாக இருக்கிறது" - நேற்று படம் பார்த்த நண்பர்களும் என் மகன் அதீதனும் அளித்த சான்றிதழ் இது. எனவே அதை உடனடியாகப் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலை அடக்க முடியவில்லை . கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நான் ரஜினி படத்தை மட்டும்தான் தியேட்டருக்குச் சென்று பார்த்து வருகிறேன். தற்போதிருக்கும் தமிழ் நடிகர்களில் மிகவும் திறமையான நடிகர் அவர்தான் என்பது என் கருத்து. ஆனால் அவரது நடிப்புத் திறமையைப் பயன்படுத்தும் ஆற்றல் கொண்ட இயக்குனர்கள் தான் தமிழில் இல்லை. இந்தப் படம் அதைத்தான் உறுதிப்படுத்துகிறது. 
கதை மிகவும் பத்தாம் பசலித்தனமானது. இந்தப் படத்தின் வசனம் சுஜாதா எழுதியது என்கிறார்கள் . அவரிடம் நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. ஆனால் இதில் அது சுத்தமாக வெளிப்படவில்லை. நகைச்சுவை நடிகர்கள் ஒருவருக்கு இருவராக இருந்தும் பயனில்லை. அவர்கள் ரோபோ ரஜினியோடு பேசுவது அபத்தமாக இருக்கிறது. ஒரு விஞ்ஞானியின் உதவியாளர்கள் என்று அவர்களை நினைக்கவே முடியவில்லை. ஏதோ மெக்கானிக்கிடம் எடுபிடியாக இருப்பதுபோல பேசுகிறார்கள். வில்லன் பாத்திரமும் அப்படித்தான் அரைகுறையாக இருக்கிறது. ரஜினியின் தொடக்கக்கால படங்களில் நடித்தவர் என்பதால் டேனிக்கு அந்த வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது போலும். 
எந்திரன் முழுக்க முழுக்க சிறுவர்களை குறிவைத்து தயாரிக்கப்பட்டிருக்கிறது .அவர்கள் தமது வீடியோ கேம்ஸை அகலமானத் திரையில் பார்த்து ரசிக்க ஒரு வாய்ப்பு. ரஜினிக்கு  வில்லன்  பாத்திரங்களைச்  செய்வதென்றால் குல்பி சாபிடுவதுமாதிரி. சந்த்ரமுகியில் வேட்டைய மகாராஜாவாக வந்து அசத்தியத்தை எவரும் மறக்க முடியாது . இந்தப் படத்திலும் அதற்கு அருமையான வாய்ப்பு இருந்தது. ஆனால் சிட்டி பாத்திரத்தை சரியாக வடித்தேடுக்காமல் பாழடித்துவிட்டார்கள் . 
தமிழில் சயன்ஸ் பிக்ஷன் என்பது உருப்பெறவே இல்லை. சுஜாதா எழுதியவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டவற்றின் மலிவான நகல்கள்தான் .  ஐசக் அசிமோவ் , ப்ராட்பரி போன்றவர்களைப் படித்தால் நாம் சுஜாதாவின் எல்லையைப் புரிதுகொள்ளலாம் . அவர்கள் எழுதியவற்றை நேரடியாகப் படிக்க முடியாதவர்களுக்கே சுஜாதா சிறந்த சயன்ஸ் பிக்ஷன் எழுத்தாளராக இருந்தார். எழுத்து விஷயத்தில்  இருக்கும் இத்தகைய பற்றாக்குறை திரைப்படங்கள் விஷயத்தில் இல்லை. உலகின் மூலை முடுக்குகளில் தயாரிக்கப்படும் சினிமாக்கள் கூட இப்போது நமக்கு எளிதாகக் கிடைத்துவிடுகிறது. எனவே இந்தப் படத்தின் பிரம்மாண்டம் ' குழந்தைகளைக்கூட வசீகரிக்கும் எனத் தோன்றவில்லை. 
சுஜாதாவின் ' டுபாக்கூர் சயன்ஸ் பிக்ஷனை ' அடியொற்றியே இந்தப் படமும் வந்திருக்கிறது. பாவம் ரஜினி தனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்காமலேயே அவர் நடிப்பிலிருந்து ஒய்வு பெற்றுவிடுவார் போலிருக்கிறது. 
அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் .

2 comments:

  1. I read the article immediately after it was posted. A few days ago I had a chance to watch Bhuvana Oru Kelvi Kuri. Rajini came across as an extremely talented actor. The songs are good. especially Raja Yenbar Manthiri Yenbar song was touching. Tamil cinema completlely failed to utilise the talents of a great actor. It is really sad.
    Kolappan

    ReplyDelete
  2. Sorry sir.I dont agree with your views on Sujatha's science fiction.May be he had modelled his science fiction on the lines of Isaac Asimov,Bradbury et al.But he paved the way for promoting this genre in Tamil.Unfortunately no one ever has tried alteast to imitate his or other western scince fiction writers.

    ReplyDelete