காட்டுமன்னார்கோயில் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீமுஷ்ணத்தில் திடீரென சூறைக்காற்று அடித்து குடிசைகளெல்லாம் பிய்ந்துபோய்விட்டன. ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளும் பறந்துவிட்டன. மரங்கள் சாய்ந்ததிலும் சில வீடுகள் உடைந்துவிட்டன.அந்தப் அப்பகுதியைப் பார்வையிட்டு, வருவாய்த் துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன். பேரிடர் நிவாரண நிதியின் கீழ் இப்படியான சேதங்களுக்கும் நிவாரணம் வழங்க முடியும். ஆனால் அதிகாரிகளுக்கு அப்படியொரு அரசாணை இருப்பதே தெரியவில்லை என்பது மட்டுமின்றி பாதித்த பகுதிகளைப் பார்க்கவோ மக்களுக்கு நிவாரணம் வழங்கவோ மனம் இல்லை. நான் மிகவும் வலியுறுத்தியதால் தாசில்தார் வந்தார். எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
நான் சேதமடைந்த வீடுகளை எனது மொபைல் போனில் படம் பிடித்தேன்.
No comments:
Post a Comment