Tuesday, May 3, 2011

பின் லேடன்: ஒரு பார்வை'

http://www.worldservice.com/tamil
02 மே, 2011 - பிரசுர நேரம் 13:09 ஜிஎம்டி

'பின் லேடன்: ஒரு பார்வை'

அல்கைதா அமைப்பின் தலைவர், நிறுவநர் என்ற வகையில் கடந்த பல ஆண்டுகளாக எல்லாருக்கும் நன்கு பரிச்சயமான பெயர் ஒசாமா பின்லேடன்.
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு மேற்குலகில் வாழும் பலரைப் பொறுத்தவரை உலக பயங்கரவாதத்தின் வடிவமாக அவர் திகழ்கிறார். ஆனால், ஏனையவர்களைப் பொறுத்தவரை அவர் ஒரு காதாநாயகன். ஜிகாத் புனிதப் போரின் பெயரால், உலகின் இரண்டு வல்லரசுகளுக்கு எதிராகப் போராடிய ஒரு உண்மையான முஸ்லிம் அவர்.
சவுதியில் கட்டுமானத் தொழில் துறையில் பிரபலமாக விளங்கும் ஒரு செல்வந்த குடும்பத்தின் ஒரு மகனாகப் பிறந்த பின்லேடன், பல வகைகளிலும் மிகுந்த செல்வச் செழழிப்புடன் வாழ்க்கையை நடத்தியவர். சவுதி அரேபிய வீதிகளில் 80 வீதமானவற்றைக் கட்டியது இந்த குடும்பத்தின் கட்டுமான நிறுவனந்தான். 52 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் 17 வது குழந்தையாக, 1957 இல் பிறந்தவர் ஒசாமா பின் லேடன்.
பின்னர் தனது சொந்த நாட்டுக்கு திரும்பி வந்த அவர், சவுதி ஆட்சியாளர்கள், குவைத் மண்ணில் இருந்து சதாம் ஹூசைனின் படைகளை விரட்டுவதற்காக சவுதி மண்ணில் அமெரிக்க படைகளை இடம் தரவே, அதனை எதிர்க்கத் தொடங்கிவிட்டார்.
1998 இல் அவர் அனைத்து அமெரிக்கர்களுக்கும் எதிராக போரை பிரகடனம் செய்தார்.
பொதுமக்கள் மற்றும் இராணுவ இலக்குகள் என்று வேறுபாடின்றி அனைத்து அமெரிக்க இலக்குகளும் தாக்கப்படும் என்று தனது மத ஆணையில் அவர் தெரிவித்திருந்தார்.
2000 ஆம் ஆண்டில் ஏடன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'யூ எஸ் எஸ் கூல்' என்ற பில்லியன் டாலர்கள் பெறுமதியான அமெரிக்க போர்க்கப்பலில் அவரது அல்கைதா அமைப்பு ஒரு பெருந்துவாரத்தை போட்டு விட்டது.
அதன் பிறகு 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 இல் பயணிகள் விமானங்களை கடத்தி நியூயோர்க்கிலும், வாசிங்டனிலும் மோதச் செய்து பெருந்தாக்குதல்களை அல்கைதா அமைப்பினர் நடத்தினார்கள். அதனை அடுத்து ஒசாமா பின் லேடனை பிடிக்க வேண்டும் என்று அப்போதைய அமெரிக்க அதிபர் புஸ் உறுதிபூண்டார்.
உலகிலேயே மிகவும் அதிகமாக தேடப்பட்டு வந்த நிலையில் அவர் மிகவும் அபூர்வமாக அறிக்கைகளை இணையத்தில் பிரசுரித்து வந்தார். அத்துடன் தனது அல்கைதாவின் ஆன்மீக தலைமைத்துவத்தை தன்னை ஆலோசனை கூறி வழிநடத்துபவரான எகிப்திய இஸ்லாமியவாதியான டாக்டர். அய்மன் அல் ஷவாஹிரி அவர்களிடம் பின்லேடன் விட்டுவிட்டார்.
ஆனால், மேற்குலகின் மற்றும் மிதவாத அரபு நாடுகளின் நடவடிக்கைகளுக்கு எதிரான வன்செயல்களுக்கு தன்னை பின்பற்றும் எண்ணிக்கையில்லாதவர்களை இட்டுச் சென்ற ஒருவராக, தான் இறந்த பல வருடங்களின் பின்னரும் அவர் கருதப்படுவார்.

No comments:

Post a Comment