Wednesday, May 11, 2011

மீந்துகிடக்கிறது இரவு





கண்களுக்குள் உருளும்
நட்சத்திரங்களை
சேகரிக்க
உன்னுள் பயணித்தேன்
வனங்களில் நுழைந்து
மேகங்களில் மிதந்து
மலைகளில் ஓய்வெடுத்துத்
தொடர்ந்தேன் தேடலை

கண்ணீர்த் துளிகள்
பனித் துகள்களாய்ச் சிதறி
போர்வைகள் ஜொலித்தன

தோட்டத்துச் செடிகளும்
கொடிகளும்
ஜன்னல் வழியே
அறைக்குள் இறங்கின

நாம் ஒளிந்து விளையாடிய
ஆறு
கூரையைத் திறந்து
மழையாய்ப் பொழிந்தது 

உன்
தலைக்குக் கீழே
நசுங்கிக் குலைந்து
மீந்துகிடக்கிறது இரவு
பால்குடிக்கும் குழந்தையைப்போல்
பசித்து அழுகிறது நிலவு


No comments:

Post a Comment