Tuesday, May 3, 2011

அணைக்கரையில் மீன் உணவு


அணைக்கரையில் மீன் உணவு

நீங்கள் சென்னையிலிருந்து கும்பகோணம் போகும்பொது மதிய வேளையில் அணைக்கரையைக் கடக்க நேர்ந்தால் கட்டாயம் நீங்கள் டேப் தங்கராசு கடையில் மீன் குழம்போடு சாப்பிடவேண்டும். டேப் தங்கராசு திராவிடர் கழகப் பிரச்சாரப் பாடகர். இப்போது காலமாகிவிட்டார். எனினும் கடையை அவரது குடும்பத்தினர் நடத்துகிறார்கள். அணைக்கரையில் பிடிக்கும் கட்லா கெண்டைகளும், இறால்களும் அருமையாக சமைக்கப்பட்டு அங்கே கிடைக்கும். அண்மையில் நான் அங்கு போயிருந்தேன். அணைக்கரைக்கு அருகில் மீன் விற்பனையும் ஜோராக நடந்துகொண்டிருந்தது. இப்போது அணைக்கரையில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் அங்கே வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. 







No comments:

Post a Comment