Wednesday, October 12, 2011

ரவிக்குமார் கவிதை


ஓவியம் : சவி சாவர்கர் 




ஊர்களும் பேர்களும்
ஒன்றாகிவிட்ட நாட்டில்
இயலாது
ஒன்றை விட்டு இன்னொன்றை
மறப்பது

நந்தனை மறக்கவேண்டுமென்றால்
சிதம்பரத்தை மறந்தாகவேண்டும்
இமானுவேலை மறக்கவேண்டுமென்றால்
முதுகுளத்தூரை மறந்தாகவேண்டும்
கருகிப் பொடியான
உயிர்களை மறக்க
மறந்தாகவேண்டும்  கீழ்வெண்மணியை

அப்படித்தான் .....
விழுப்புரத்தை
கொடியங்குளத்தை
மேலவளவை
பரமக்குடியை

நினைத்துக்கொண்டிருப்பது
அவர்களின் உரிமை
மறந்துபோவது
மக்களின் கடமை

2 comments:

  1. கூடவே வாச்சாத்தியையும் இணைத்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete