Thursday, January 17, 2013

சன் நியூசில் எஸ்.ராமகிருஷ்ணனின் ஷோ


சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியையொட்டி தொலைகாட்சி சேனல்களில் இப்போது தினந்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். புதிய தலைமுறை சேனலில் மாவட்டவாரியாக நூலகங்களின் அவலநிலையைப் படம்பிடித்துக் காட்டினார்கள். உருப்படியான முயற்சி.சன் நியூஸ்  தொலைக்காட்சியில் தினமும் அரை மணி நேரம் புத்தகக் கண்காட்சிக்கென  ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்க விஷயம். அந்த நிகழ்ச்சியை எழுத்தாளர்  எஸ்.ராமகிருஷ்ணன் வழங்கிவருகிறார்.

அவ்வப்போது அந்த நிகழ்ச்சியை சில  நிமிடங்கள் கவனி த்தேன். உங்களில் பலரும் அதைப் பார்த்திருக்கக்கூடும். புத்தகங்களின்மீது காதலை உருவாக்கி மக்களை புத்தகக் கண்காட்சி நோக்கிச்  செலுத்துவதற்குக் கிடைத்த அற்புதமான ஒரு வாய்ப்பை எஸ். ராமகிருஷ்ணன் வீண் அடிக்கிறாரோ என எனக்குத் தோன்றியது. கலந்துகொள்பவர்களும் எந்த சுரத்தும் இல்லாமல் பேசுவதைப் பார்த்தபோது கஷ்டமாக இருந்தது. ராமகிருஷ்ணனுக்கு வலது கை மட்டும்தான் இருக்கிறதோ என்று எண்ணும் அளவுக்கு அதை சுழற்றிக்கொண்டே இருக்கிறார். கையாலேயே நடனமாடிய பானுமதியை அது நினைவுபடுத்துவதாக இருந்தது.

 ட்ராட்ஸ்கி மருது , ஆழி செந்தில்நாதன், புத்தகம் பேசுது நாகராஜன், எனப் பலரும் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளைப் பார்த்தேன். இணையம் வந்துவிட்டதால் புத்தக வாசிப்பு குறைகிறதா என்று விவாதித்ததையும்  நேற்று கவனித்தேன். படு போர் !

ராமகிருஷ்ணனை நிகழ்ச்ச்சியை வழங்கவைத்ததற்குப் பதிலாக அவரிடம் ஒரு பேட்டி எடுத்திருக்கலாம், அல்லது அவரையும் ஒரு பங்கேற்பாளராக இடம்பெறச் செய்திருக்கலாம்.

ராமகிருஷ்ணன் சுவாரஸ்யமான எழுத்தாளர். எழுத்தாளர் என்பதைவிடவும் கதை சொல்லி என்று குறிப்பிடுவதே பொருத்தமானது. ஆனால் நிகழ்ச்சி ஒன்றை வழங்குவதில் அவர் படு தோல்வி அடைந்துவிட்டார் என்றே நினைக்கிறேன். சன் நியூஸ் தொலைக்காட்சியில் வேலை செய்யும் நெல்சன், எஸ். ராமகிருஷ்ணனைவிட இந்த நிகழ்ச்சியை சிறப்பாக வழங்கியிருப்பார் என்பது என் எண்ணம். அந்த நிகழ்ச்சியைப் பார்த்தபோது ஓப்ரா  வின்ஃ பிரே ஷோ  நினைவுக்கு வந்தது.

No comments:

Post a Comment