திரு.திலிப் சக்ரவர்த்தி அவர்களிடம் நான் பதிவுசெய்த நேர்காணல் தி இந்து நாளேட்டில் கடந்த 22.09.2013 ஞாயிறன்று வெளியானது. அதைதமிழ்மன்றம் மடற்குழுவில் (tamilmanram@googlegroups.com )பகிர்ந்திருந்தேன். அதற்கு வந்த எதிர்வினைகளை இங்கே தந்திருக்கிறேன்.
1. இராம.கி, தமிழறிஞர்
தமிழறிஞர் பலரும் வெறுமே பட்டிமன்றம், துதிபாடுங்கருத்தரங்கம், பாட்டரங்கம் என்று தமிழ்நாட்டிற்குள்ளேயே அலைந்துகொண்டிருக்கிறார்கள். [இதைச் சொன்னால்பலருக்குக் கோவம் வருகிறது.) உருப்படியானஆய்வுகள் இங்கு உருவாவதில்லை. சங்கதம்,பாகதம், பாலி, தெலுங்கு, கன்னடம், மலையாளம்அல்லது வேறு திராவிட மொழி என்று இன்னொருஆய்வு மொழியைக் கற்கமாட்டேம் என்கிறார்கள்.தமிழியலை ஆய்வோடு சேர்த்துப் பொருத்தும் படிஇன்னொரு அறிவியல், நுட்பியல் போன்றகளங்களில் ஆர்வங் கொள்ளமாட்டேம்என்கிறார்கள். எண்ணுதி முறைகள் (numerical methods), குமுகவியற் தேற்றங்
அதே பொழுது தமிழ்ச் செவ்வியல் இலக்கியக்குழுக்களில் இருக்கும் இன்னொருசாரார் தம்முடைய நிகழ்ப்பின் (agenda)அடிப்படையில் “சங்கதம் மேடு; தமிழ் பள்ளம்;அங்கிருந்து தான் இங்கு எல்லாமும் வந்தன” என்றகருத்தை விடப்பிடியாக வல்லடியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேனாட்டுஅறிஞர்களும் தெரிந்தோ, தெரியாமலோ துணைபோகிறார்கள். மேனாட்டார் நூல்களுக்கு மறுப்புஎழுதக் கூடத் தமிழறிஞர் முன்வருவதில்லை. இந்தச்சண்டை நிகழ்வது தன்னலம் பேணும்எல்லோருக்கும் உகந்தது போலவே தெரிகிறது.
பொருந்தல் ஆய்வுச் செய்திகள் இந்திய வரலாற்றைமாற்றிப் போட்டதைக் கூட இன்னும் யாரும்உணரத் தலைப்படக் காணோம். சங்க காலம்என்பது நந்தர், மோரியர், சுங்கர், கனகர்,சாதவாகனரின் சம காலத்தது என்ற அடிப்படைச்செய்தியை ஏற்காதவரே இந்தியவியலில் மிகுதியாய்இருக்கிறார். [அதனாற்றான் இந்தியவரலாற்றில்தென்னகத்தின் பங்கைக் குறைத்து மதிப்பிடுகிறார்.] ”தொல்காப்பியமா? பின்னுக்குத் தள்ளு; சங்கஇலக்கியமா? கி.பி.5 ஆம் நூற்றாண்டிற்கு அப்புறம்தள்ளு” என்று கட்ட்ங்கட்டி ஆய்வு செய்யும் முறைஇருக்கும் வரை இது மாறும் என்று தோன்றவில்லை. நிழற்சண்டை போடுவதற்கே நேரம் மிகுந்துசெலவழிகிறது.
இனிமேலாவது பெரும்பான்மைத் தமிழறிஞர்மாறவேண்டும். ”தமில் வால்க; வெல்க” என்னும்உணர்ச்சி சார்ந்த, சான்றுகளில்லாத கேளிக்கைப்பேச்சுக்களைக் குறைத்துக் கொண்டு தமிழுக்குத்தமிழருக்குத் தேவையான ஆய்வுகளில் ஈடுபட்டு மற்றஇந்தியவியலாரோடு வாக்குவாதங்களிற் கலந்துகொண்டால் நல்லது.
2.சி.ஆர்.செல்வகுமார், கனடா
திலீப்பு சக்கரவர்த்தி அவர்களின் பார்வையைப்பலரும் அறிந்திருக்க வேண்டும்.
அவரது கருத்துகள் பொதுப்படையானவை அல்லஎன்று நினைக்கின்றேன், ஆனால்
ஐரோப்பியநோக்கை மட்டுமே அறிவியல் நோக்குஎன்று சிந்திப்பதால் பல
பெரும் தீங்குகளும் வன்சாய்வுகள் ஏற்படுகின்றன(மொழியியலில் கட்டாயம் அப்படி உள்ளது
என்பேன். மருத்துவத்திலும் இப்படி உள்ளதுஎன்பேன். பிற பல துறைகளையும்சொல்லிக்காட்டலாம்.)ஆனால் இதற்குக்காரணம்ஐரோப்பியர்கள் அல்லர்,
தவறு இந்தியர்களிடத்தில்தான். குறிப்பாக ஒழுக்கம்சாராத, முறைமையின் தேவை
உணராத, மெய்யான அறிவுத்தாகம் இல்லாதமக்களால் ஏற்படும் தீங்கு இது. வெற்றுப்பெருமைக்காக அலையும் ஆழமில்லாத பார்வையால்நிகழ்வது. ஐரோப்பியர்கள் முன்னேறியதும்அண்மையில், நாம் பின் தங்கிப்போய் ஊழல் மண்டி,தன்னுணர்வின்மை மண்டிப்போனதும் அண்மையில் தான்.
3. சொ.வினைதீர்த்தான், தமிழறிஞர்
பகிர்வு மேலைநாட்டு ஆய்வர்களின் சார்புநிலையையும் நம் அரசாங்க அதிகாரிகளின் எண்ணப்போக்கையும் தெளிவாகக் காட்டுகிறது.
பல கல்வெட்டுக்கள் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில்படியெடுத்ததாகச் சொல்கிறார்கள். இந்த வகையில்நம் மக்கள் ஆட்சிக்காலத்தில் கடந்த 40, 50ஆண்டுகளில் ஏதும் செய்தார்களா என்பது நான்செய்திகளில் கண்டதில்லை. கண்களில் படுவதையேஆய்வு செய்யாதபோது அகழ்ந்து எங்கே ஆய்வுநடக்கப்போகிறது?
No comments:
Post a Comment