Monday, February 24, 2014

ரவிக்குமார் கவிதை

பெண்ணே! 
உன் தோழியை எப்படிச் சேர்வது? 

அவளொரு சிம்மாசனமெனில் சொல்
யுத்தங்களை வெல்கிறேன்
அவளொரு சிறைச்சாலையென்றால் சொல்
தேசத்துரோகி ஆகிறேன்
அவள் வானமா? சொல் 
நட்சத்திரங்களாய் வெடிக்கிறேன்
அவள் சமுத்திரமா? சொல்
மழையாகப் பொழிகிறேன்

பெண்ணே! உன் சிநேகிதியை
எப்படி நான் சேர்வது

அவளொரு கேணியென்றால் சொல்
தவளையாய்க் குதிக்கிறேன்
அவள் பாலையென்றால் சொல்
கானலாய்த் தகிக்கிறேன்

அவளும் என்னைப்போல 
ஒரு பைத்தியமென்றால் போய்ச் சொல்
தெளியவே வேண்டாம் தெளியவே வேண்டாம் தெளியவே வேண்டாம் தெளியவே வேண்டாம்




No comments:

Post a Comment