Saturday, February 22, 2014

புதுமைப்பித்தன் எழுதிய துன்பக்கேணி

 


சென்னைப் பல்கலைக்கழகத்தில் இந்தச் சிறுகதையை பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவிட்டு அவர் எழுதிய வேறொரு கதையை வைப்பதென முடிவுசெய்திருக்கிறார்களாம். அட்டவணை சாதிகளைச் சேர்ந்த பாத்திரங்களை சாதியின் பெயரால் குறிப்பிட்டு புதுமைப்பித்தன் எழுதியிருப்பதால் அந்தக் கதையை நீக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. மீண்டும் அந்தக் கதையை சற்றுமுன் படித்து முடித்தேன். மனம் கனத்துவிட்டது. சாதி கொடுக்கும் அதிகாரத்தைக் கொண்டு ஒரு தலித் குடும்பத்தை எத்தனை சுலபமாக சிதறடித்துவிடுகிறார்கள்! 


புதுமைப்பித்தன் இந்தக் கதையை எழுதிய காலத்திலிருந்து இப்போதைய சூழல் எவ்வளவோ மாறிவிட்டது என்றாலும் தலித்துகள்மீதான வன்முறைகளின் அளவோ தன்மையோ மாறிவிடவில்லை. கதை பல இடங்களில் ஒரு செய்திக் கட்டுரையின் தன்மையைப் பெற்றிருக்கிறது என்ற குறைபாட்டையும் தாண்டி, படித்து முடிக்கும்போது நெஞ்சை அறுக்கிறது. அதுதான் புதுமைப்பித்தனை ஒரு படைப்பாளி என நாம் ஒப்புக்கொள்வதற்கான அடிப்படை. 


ஒரு இலக்கியப் பிரதியைப் புரிந்துகொள்வதற்கான வாசிப்பு முறைகளை கல்லூரிகளில் பணபுரியும் பெரும்பாலான பேராசிரியர்களே அறிந்திராத நிலையில் மாணவர்களிடம் அதை எதிர்பார்ப்பது பேராசைதான். அதுவும் சாதிவெறி கொள்ளை நோயாகப் பரவும் காலம் இது.

No comments:

Post a Comment