1.
பனி வயலில் நான் ஓடும்போது
மகிழ்ச்சி நான் அதன் பக்கம்
இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறது
மரணமோ
அகலத் திறந்த கண்களால்
பார்த்துக்கொண்டிருக்கிறது
எனது வலது பையை
அதில்
ஒரு பிளாஸ்டிக் விமானம்
பறக்கிறது பறக்கிறது
இறுக்கி மூடிய கைக்குள்
2.
முதல் மழை. பாதையோர கற்பலகை.
ரொட்டித் துண்டுகளுக்காக சண்டையிடும் குருவிகள்
வேறெதுவும் நிகழவில்லை.
காணாமல்போன வார்த்தை மூட்டுவதில்லை கலகத்தை
3.
ஏராளமாகக் கவிதைகள்
ஏராளமாக நல்ல கவிதைகள்
இன்னும் இன்னும்
வலிமை கூடிக்கொண்டே இருக்கிறது.
ஏராளமான கவிதைத் தொகுதிகள்.
ஏராளமான பரிசுபெறும்
முன்மாதிரியாகத் திகழும் கவிதைத் தொகுதிகள்
எங்குபார்த்தாலும் நல்ல கவிஞர்கள்
ஏராளமான கவிதைகள்
கடைசியில் ஒருவர் வேண்டுவது
அழகாக இல்லாதபோதும்
உறக்கத்தைக் கலைக்கிற
ஒரேயொரு நல்ல கவிதையை எழுதிவிடவேண்டும் என்பதுதான்
யேஸெக் குதரூஃப் (Jacek Gutorow) : போலிஷ் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர்
No comments:
Post a Comment