செல்வா கனகநாயகம், தான் தொகுத்து வெளியிட்டிருக்கும் In Our Translated World: Contemporary Global Tamil Poetry என்ற நூலில் தனக்குப் பிடித்தமான கவிதைகளையும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் தந்திருக்கிறார்.
எந்தவொரு தொகுப்பும் எல்லோரையும் திருப்தியுறச் செய்வதாக இருக்க முடியாது என்ற உண்மை இந்தத் தொகுப்புக்கும் பொருந்தும் என்றபோதிலும் எம்.ஏ.நுஃமானின் கவிதைகள்- போர் குறித்த விமர்சனமாய் முன்வைக்கப்பட்டவை- இதில் இடம்பெறாமல் போனது ஏன் என்பதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. கவிதை, சமகாலக் கவிதை, உலகக் கவிதை என எல்லாவிதமான பகுப்புகளுக்குள்ளும் அடங்கக்கூடியவை நுஃமானின் அந்தக் கவிதைகள்.
செல்வா கனகநாயகத்தின் முயற்சியைப் பாராட்டுகிறேன். அந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எனக்குப் பிடித்த ஈழத்துக் கவிஞர்களில் ஒருவரான சிவசேகரத்தின் ஒரு கவிதையை இங்கே தருகிறேன்:
No comments:
Post a Comment