ஊடகங்கள் விவாதிக்க வேண்டும்
- ரவிக்குமார்
===============
"அரசியல் லாபத்துக்காக வன்முறையைக் கைக்கொள்ளமாட்டோம். இனம், சாதி, மொழி, வசிப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டமாட்டோம்" என அரசியல் கட்சிகள் ஒப்புதல் அளிக்கவேண்டும். அதற்கேற்ப மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 29 A (5) திருத்தம் செய்யப்பட வேண்டும் என சட்ட ஆணையம் தற்போது சமர்ப்பித்துள்ள தனது 255 ஆவது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
" தற்போதுள்ள FPTP தேர்தல் முறைக்குப் பதிலாக விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை உள்ளிட்ட வேறு முறைகளைப் பரிசீலிக்கவேண்டும். இது தொடர்பாக சட்ட ஆணையத்தின் 170 ஆவது அறிக்கையில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை அரசு ஆராயவேண்டும்." என சட்ட ஆணையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது
தற்போதுள்ள பொருளாதார நிலையில் தேர்தல் செலவுகளை அரசே ஏற்பது சாத்தியமில்லை எனவும் இந்திய சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
சட்ட ஆணையத்தின் அறிக்கைகளைப் பொதுவாக அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் தந்து விவாதிப்பதோ கருத்து தெரிவிப்பதோ இல்லை. அதனால்தான் அரசாங்கமும் அந்த அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள ஆலோசனைகளை செயல்படுத்த ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலையை மாற்ற ஊடகங்கள் முன்வரவேண்டும்.
No comments:
Post a Comment