வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் நிகரி என்னும் விருதளித்து கௌரவித்து வருகிறோம்.
2017 ஆம் ஆண்டுக்கான விருதுகள் செப்டம்பர் 5 ஆம் நாளன்று அறிவிக்கப்படவுள்ளன.
இதற்குத் தகுதியான ஆசிரியர்களை எவர் வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம். விருது பெறுபவர் தற்போது பணியில் இருக்கவேண்டும். அவர் வகுப்பறையில் பாலின, சாதிய பாகுபாடுகளைக் களைபவராகவும், சமத்துவத்தை ஊக்குவிப்பவராகவும் இருக்கவேண்டும்.
பரிந்துரைகளை manarkeni@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2016 ஆம் ஆண்டு தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகப் பேராசிரியர் சா. உதயசூரியன் அவர்களும் , பாலவேடு அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை ந.சாந்தி அவர்களும் நிகரி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
2015 ஆம் ஆண்டுக்கான நிகரி விருதுகளுக்காக பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை அவர்களும், சமயபுரம் எஸ்.ஆர்.வி மேனிலைப்பள்ளியின் முதல்வர் துளசிதாசன் அவர்களும் தேர்வுசெய்யப்பட்டனர்.
2014 ஆம் ஆண்டு திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களும் கடலூர் கிருஷ்ணசாமி மேனிலைப்பள்ளி முதல்வர் 'ஆயிஷா' இரா நடராசன் அவர்களும் விருதளித்துப் பாராட்டப்பட்டனர்.
2013 ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பேராசிரியர் அ.ராமசாமி அவர்களும் , கடலூர் அரசு மேனிலைப்பள்ளி ஆசிரியர் த.பாலு அவர்களும் நிகரி விருதுகளைப் பெற்றனர்.
நிகரி விருது - நினைவுக் கேடயம், பாராட்டுப் பத்திரம், பத்தாயிரம் ரூபாய் பண முடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
இவண்
ரவிக்குமார்
ஆசிரியர், மணற்கேணி ஆய்விதழ்
No comments:
Post a Comment