Showing posts with label dalit killing. Show all posts
Showing posts with label dalit killing. Show all posts

Monday, December 24, 2012

வெண்மணியைப் பற்றி ஒரு கவிதை

வெண்மணியைப் பற்றி ஒரு கவிதை  எழுத வேண்டுமென்றால் 

அதை காகிதத்தில் எழுத முடியாது 
வெண்மணியைப் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டுமென்றால் 
அதை பேனாவால் எழுத முடியாது 
வெண்மணியைப் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டுமென்றால் 
அதை மையால் எழுத முடியாது 

வெண்மணியைப் பற்றி ஒரு கவிதை  எழுத வேண்டுமென்றால் 
குழந்தைகளின் அலறலைக்  கேட்கக்கூடிய செவிகள் நமக்கிருக்கவேண்டும் 
குழந்தைகள் கருகுவதை உணரக்கூடிய  நாசி நமக்கிருக்கவேண்டும் 
குழந்தைகள் சாம்பலின் சூட்டை உணரக்கூடிய இதயம் நமக்கிருக்கவேண்டும் 

எழுதினான் நாடோடிக் கவியொருவன் 
வியர்வை பாய்ச்சப்பட்ட வயலில்
பசிய பக்கங்களுக்கிடையே  
குருதியால் ஒரு கவிதையை  
 
இருக்கின்றன 
எழுதப்படாமல்  நாற்பத்து மூன்று பக்கங்கள்