ஜப்பானில் விபத்து நேர்ந்த ஃ புக்குஷிமா அணுமின் உற்பத்தி நிலையத்தில் மீண்டும் அணுக்கதிர்வீச்சு கொண்ட நீர் இரண்டு தொட்டிகளிளிருந்து ஒழுகுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. டோக்யோ எலெக்ட்ரிக் பவர் கம்பெனி இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது.
2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த பூகம்பம் மற்றும் சுனாமியால் சேதமடைந்த
ஃ புக்குஷிமா அணு மின் நிலையம் உலக அளவில் அணுமின் திட்டங்களுக்கான எதிர்ப்பை அதிகரிக்கச் செய்தது.அங்கிருக்கும் ரியாக்டர்களில் உருகிப்போன உலோகத் தண்டுகளைக் குளிரிவிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட நீர்தான் இப்போது ஒழுகுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அங்கே இருக்கும் இரண்டு தொட்டிகளிளிருந்து கதிர்வீச்சு கொண்ட நீர் ஒழுகுகிறது என்றும் ஆனால் அது கடலில் கலக்கவில்லைஎன்றும் சொல்லப்படுகிறது . கூடங்குளம் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் அணு உலைகளில் தரமற்ற இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. ஃ புக்குஷிமாவிலேயே இப்படியென்றால் கூடங்குளத்தின் பாதுகாப்பு குறித்து என்ன சொல்வது ?
http://asiancorrespondent.com/104760/more-radioactive-water-leaking-at-japan-nuke-plant/
No comments:
Post a Comment