வானம் சாம்பலாய்ப் பொழிகிறது
குருதிக் கறை படிந்த கைகளைக் குலுக்குவதே
நட்பாகிவிட்டது
வஞ்சகத்தைத் தியாகமென்றும்
நபும்சகத்தை மதியூகமென்றும்
அழைக்கப் பழகிவிட்டோம்
கருணை இப்போது கிழங்குவகையாகவும் இல்லை
குருதிக் கறை படிந்த கைகளைக் குலுக்குவதே
நட்பாகிவிட்டது
வஞ்சகத்தைத் தியாகமென்றும்
நபும்சகத்தை மதியூகமென்றும்
அழைக்கப் பழகிவிட்டோம்
கருணை இப்போது கிழங்குவகையாகவும் இல்லை
நாம் கேட்கிறோம்
நீதி
கொல்லப்பட்டவர்களுக்காக
பலாத்காரம் செய்யப்பட்டவர்களுக்காக
அங்ககீனம் செய்யப்பட குழந்தைகளுக்காக
நாடற்றுத் திரியும் அகதிகளுக்காக
நமது பேச்சில் தெறிக்கிறது
தாய்,சகோதரி, இனம், ரத்தம்,
உரிமை,துரோகம்,வீரம், வரலாறு . . .
நாம் கேட்கிறோம்
நீதி
சக மனிதனின் வாயில்
மூத்திரம் பெய்தபடி
No comments:
Post a Comment