2011 ஆம் ஆண்டு அப்போதிருந்த தி.மு.க ஆட்சியின்போது தினபூமி நாளேட்டின் ஆசிரியர் மணிமாறன் வீட்டில் போலிஸ் ரெய்டு நடத்தியது தொடர்பான புகாரில் அந்த ரெய்டில் சம்பந்தப்பட்ட முப்பது போலிஸ்காரர்களையும் உடனடியாக கைது செய்யவேண்டும் என பிரஸ் கவுன்சிலின் தலைவர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
விசாரணையில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அது முந்தைய ஆட்சியில் நிகழ்ந்த சம்பவம் என்று சொன்னபோது கோபமடைந்த திரு கட்ஜு ' யார் ஆட்சி செய்கிறார்கள் என்பது பற்றி எங்களுக்குக் கவலையில்லை. இப்போது சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது பதவியிலிருந்து முதல்வர் விலகட்டும் ' என்று கூறியிருக்கிறார்.
" போலீஸ்காரர்கள் இன்னும் பிரிட்டிஷ் ஆட்சி நடப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்களா? அவர்கள் பாடம் கற்றுக்கொள்ள இதுவே சரியான தருணம் " என்றும் அவர் கூறியிருக்கிறார்.
போலீஸ்காரர்களைக் கைது செய்யும்படிச் சொல்ல பிரஸ் கவுன்சில் தலைவருக்கு அதிகாரம் உள்ளதா? என்ற கேள்வி எழலாம். நீதிமன்றத்துக்கு இருக்கும் அதிகாரம் பிரஸ் கவுன்சிலுக்கு இருக்கிறது என சட்டம் சொல்கிறது.
பிரஸ் கவுன்சிலில் நடத்தப்படும் விசாரணை ஒவ்வொன்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 193 மற்றும் 228 இன் அடிப்படையிலான நீதி விசாரணைகளாகவே கருதப்பட வேண்டும் என சட்டம் சொல்கிறது. பிரஸ் கவுன்சிலின் அதிகாரம் என்ன என்பதை இங்கே பாருங்கள் :
General powers of the Council
5 of 1908
15. (1) For the purpose of performing its functions or holding any inquiry under this Act, the Council shall have the same powers throughout India as are vested in a civil court while trying a suit under the Code of Civil Procedure, 1908, in respect of the followings matters, namely:
(a) summoning and enforcing the attendance of persons and examining them on oath;
(b) requiring the discovery and inspection of documents;
(c) receiving evidence on affidavits;
(d) requisitioning any public record or copies thereof from any court or office;
(e) issuing commissions for the examination of witnesses or documents; and
(f) any other matter, which may be prescribed
(2) Nothing in sub-section (1) shall be deemed to compel any newspaper, news agency, editor or journalist to disclose the source of any news or information published by that newspaper or received or reported by that news agency, editor or journalists.
45 of 1860
(3) Every inquiry held by the Council shall be deemed to be a judicial proceeding within the meaning of sections 193 and 228 of the Indian Penal Code.
(4) The Council may, if it considers it necessary for the purpose of carrying out its objects or for the performance of any of its functions under this Act, make such observations, as it may think fit, in any of its decisions or reports, respecting the conduct of any authority, including Government.
http://presscouncil.nic.in/home.htm
No comments:
Post a Comment