தமிழ்நாட்டில் மதுவிலக்கை வலியுறுத்துகிற அரசியல் தலைவர்களில் பெரும்பாலோர் மாநில அரசை மட்டுமே வலியுறுத்துகின்றனர். மத்திய அரசுக்கு இதில் இருக்கும் பொறுப்பை அவர்கள் சுட்டிக்காட்டுவதில்லை. உண்மையில் மத்திய அரசுக்குத்தான் இதில் கூடுதல் பங்கிருக்கிறது.
மதுவிலக்கு குறித்த கோரிக்கை தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் பிரச்சனையாக மாறியிருக்கும் இந்தச் சூழலில் மதுவிலக்கு விசாரணைக்குழு 1955 ஆம் ஆண்டு மத்திய அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையில் இடம்பெற்ற சில முக்கியமான பரிந்துரைகள் கவனத்துக்குரியவையாக உள்ளன. அவற்றை இங்கே தருகிறேன்:
1. மதுவிலக்கு என்பது இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு அங்கமாகக் கருதப்படவேண்டும்
2. நாடுதழுவிய மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான தேதியாக 1,ஏப்ரல் 1958 குறிக்கப்படவேண்டும்.
3.மதுவிலக்கை சில பகுதிகளில் அமல்படுத்தியிருக்கும் மாநிலங்களில் 1956 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உணவகங்கள், மதுக்கூடங்கள்,கேளிக்கை விடுதிகள், சினிமா தியேட்டர்கள், விருந்துகள் ஆகியவற்றில் மது அருந்துவது தடைசெய்யப்படவேண்டும்.
4.ஒவ்வொரு மாவட்டத்திலும், கிராமங்களிலும் மதுவிலக்குக் கமிட்டிகள் அமைக்கப்படவேண்டும்
5.மது, போதைப்பொருள் விற்பனை மூலம் வசூலிக்கப்படும் வரி என்பது மிகவும் பிற்போக்கானது. அப்படி வரி வசூலிக்க எந்தவொரு நியாயமும் இல்லை. எனவே அத்தகைய வரிகள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும்.
6. மதுவிற்பனை மூலமான வரி வருவாயை நம்பியிருக்கும் மாநிலங்களுக்கு குறிப்பீட்ட காலம் வரை மத்திய அரசு நிதி உதவி அளிக்கவேண்டும்
7. மத்திய அரசு மதுவிலக்குதான் தேசியக் கொள்கை என்பதைத் தெளிவாக அறிவிக்கவேண்டும்.
No comments:
Post a Comment