Monday, September 28, 2015
சாதிப் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுங்கள் - ரவிக்குமார்
Wednesday, September 16, 2015
இனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணையே தேவை!
Monday, September 14, 2015
இனப்படுகொலை: சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கூட்டறிக்கை
இலங்கை இனப்படுகொலை தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என ஐநா மனித உரிமைக் கவுன்சிலை வலியுறுத்தி நிகாரகுவா நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், ஐநா பொது அவையின் முன்னாள் தலைவருமான பிராக்மன், மேதாபட்கர், வித்யா ஜெயின், ஃப்ரான்சஸ் ஹாரிசன்,கல்லம் மக்ரே உள்ளிட்ட 62 பேர் கையொப்பமிட்டு கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
"இலங்கையில் 2009 ஆம் ஆண்டு போர்முடிவுக்கு வந்த பின்னரும்கூட இனமுரண்பாட்டைத் தீர்ப்பதற்கோ போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதற்கோ இலங்கை அரசு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதனால்தான் ஐநா மனித உரிமைக் கவுன்சில், தானே ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. அந்தக் குழுவுக்கும் இலங்கை அரசு போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை. அதன் பிறகே ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களைக் கொண்டுவந்தது" என்பதை சுட்டிக்காட்டியிருக்கும் அந்தக் கூட்டறிக்கை யுத்தம் முடிந்த பிறகும்கூட தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையும் வன்முறையும் தொடர்ந்துகொண்டிருப்பதைக் குறிப்பிட்டிருக்கிறது.
தேர்தல் நடைபெற்று புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சிங்கள மக்களுக்கு பயனளிக்கக்கூடிய சீர்திருத்தங்கள் பலவற்றை மேற்கொண்ட இலங்கை அரசு வடகிழக்கு மாகாணங்களிலிருந்து ராணுவத்தைக்கூட விலக்கிக்கொள்ளவில்லை என்பதை இந்தக் கூட்டறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.
*போர்க்குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை முதலானவற்றை விசாரிக்க சர்வதேச சட்டத்தைப் பயன்படுத்துதல்;
*விசாரணைப் பொறியமைவு எத்தகையதாக இருக்கவேண்டும் எபன்பதை பாதிக்கப்பட்டோரிடம் கலந்தாலோசித்து முடிவுசெய்தல்;
*சாட்சிகளைப் பாதுகாத்தல்;
*விசாரணைக் குழுவின் முக்கியமான பொறுப்புகளில் தகுதியான நபர்களை ஐநாவே நியமித்தல்
- உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்தக் கூட்டறிக்கை எழுப்பியுள்ளது.
எஸ்.விஸ்வநாதன் என்ற அபூர்வ மனிதர்
பிரபா ஶ்ரீதேவன் : நீதித்துறையில் விட்ட பணியை இலக்கியத் துறையில் தொடருங்கள்
Saturday, September 12, 2015
புரட்சிப் பாடகர் கத்தர் தேர்தலில் போட்டியிடவேண்டும்!
Thursday, September 10, 2015
ஒரு தலையங்கமும் சில கேள்விகளும் -ரவிக்குமார்
கூனல் பிறை: உரைநடைக் கவிதைகள்- இந்திரா பார்த்தசாரதி
ரவிக்குமார் கவிதைகள்
Tuesday, September 8, 2015
பொருளாதார மந்தநிலையும் பிரதமரின் ஆலோசனையும் - ரவிக்குமார்
கல்லூரிகளில் பாகுபாடு
Slavoj Zizek on Zen Buddhism
What is it like to be you? What are your conclusions on Zen?
Slavoj Zizek:
I don't know because I am not myself. I do all my work to escape myself. I don't believe in looking into yourself. If you do this, you just discover a lot of shit. I think what we should do is throw ourselves out of ourselves. The truth is not deep in ourselves. The truth is outside.
Regarding Zen, this is also the cause of my ethical disagreement with Zen Buddhism. The way Zen Buddhism is perceived today is as telling ourselves we must not throw ourselves fully into reality, that we must not attach ourselves too much to earthly objects. Since external reality is just a flow of appearances. I believe on the contrary, that we should fully attach ourselves to earthly objects. If you write a book, forget about everything else, throw yourself into it. If you are in love, go to the end, sacrifice everything for the object of love. This is why we today no longer want to fall in love. We want it controlled, like safe sex. But what I like in love is precisely the fall. I feel alive only when I fall. And this goes up to the beginning: I think Hegel already knew that Adam's fall was the greatest achievement, the greatest event in history.
ஒரு கட்சி ஆட்சியில் தமிழ்நாட்டின் உயர்கல்வி நிலை!
உயர்கல்வி பயிலக்கூடிய 18 முதல் 23 வயது வரையிலான மக்கள் தொகையில் ஒரு லட்சம் பேருக்கு மகராஷ்டிராவில் 35 கல்லூரிகளும் ஆந்திராவில் 48 கல்லூரிகளும் கர்னாடகாவில் 44 கல்லூரிகளும் கேரளாவில் 34 கல்லூரிகளும் புதுச்சேரியில் 61 கல்லூரிகளும் இருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் ஒருலட்சம் பேருக்கு 33 கல்லூரிகள்தான் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் இருக்கும் கல்லூரிகளில் அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தென் இந்திய மாநிலங்களிலேயே அதிக அளவில் உயர்கல்வி தனியார் மயமான மாநிலமாகத் தமிழ்நாடுதான் இருக்கிறது. ஆந்திராவில் 419 அரசுக் கல்லூரிகளும் கர்னாடகாவில் 600 அரசுக் கல்லூரிகளும் மகராஷ்டிராவில் 721 அரசுக் கல்லூரிகளும் இருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் 314 அரசுக் கல்லூரிகள் மட்டும்தான் இருக்கின்றன.
இந்தப் புள்ளி விவரங்கள் மத்திய அரசின் மனிதவளமேம்பாட்டுத் துறையால் வெளியிடப்பட்டிருக்கும் AISHE 2012-13 அறிக்கையில் இடம்பெற்றுள்ளவையாகும்.
அறுபது ஆண்டுகால ஒரு கட்சி ஆட்சியில் தென்னிந்தியாவிலேயே உயர்கல்வி ஏழை எளிய குடும்பத்தினருக்கு மறுக்கப்பட்ட மாநிலமாக, உயர்கல்வியைத் தனியாருக்குத் தாரைவார்த்துக்கொடுத்த மாநிலமாக, கல்வித் தரம் சீரழிக்கப்பட்ட மாநிலமாகத் தமிழகம் உள்ளது.
இந்த நிலை மாற வேண்டாமா? இளைஞர்களே சிந்திப்பீர்!
ஒரு கட்சி ஆட்சியை ஒழித்துக் கட்டுவோம்!
உயர்கல்வி செழிக்க திட்டம் தீட்டுவோம்!