Showing posts with label dravidian movement. Show all posts
Showing posts with label dravidian movement. Show all posts

Thursday, March 29, 2012

திராவிட இயக்க நூற்றாண்டு



 தி.மு.க தலைவர் கலைஞர் மு. கருணாநிதி இந்த ஆண்டை திராவிட இயக்கத்தின் நூற்றாண்டாக அறிவித்திருப்பதை அறிந்திருப்பீர்கள். இந்த அறிவிப்புக் குறித்து எனக்கு சில விமர்சனங்கள் இருந்தபோதிலும் இதை ஒரு நல் வாய்ப்பாகக் கருதி திராவிட இயக்கத்தை மதிப்பிடும் வகையில் இரண்டு தொகுப்புகளைக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறேன். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அவை அமையும். நான் நடத்திவந்த தலித் பத்திரிகையை உயிர்ப்பித்து ஒரு சிறப்பிதழாக தமிழ்க்  கட்டுரைகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன். ஆங்கிலக் கட்டுரைகள் மணற்கேணி பதிப்பக வெளியீடாக வெளிவரும். 

நீங்கள் இதுகுறித்து கட்டுரை ஒன்றை எழுத முடியுமா ? திராவிட இயக்கத்தின் அம்சங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்து கொள்ளலாம். அல்லது அந்த இயக்கத்தோடு தொடர்புகொண்ட ஆளுமைகள் எவரைப்  பற்றிய மதிப்பீடாகவும் அது அமையலாம். அந்த இயக்கத்தின் பண்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் இருக்கலாம். 
உங்களது கட்டுரையை manarkeni@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .
அன்புடன் 
ரவிக்குமார்