ஆட்டுக்குட்டியின் அழகு
அதன் துள்ளலில் இருக்கிறது
இருளில் நனைத்தெடுத்த துண்டைப்போல இருக்கும்
ஆட்டுக்குட்டி
புல்லை மறந்து பாலை மறந்து ஓடுகிறது
மடங்காத கால்கள்
எந்திரம்போல் தாவுகின்றன
அம்மாவைக்கூட அழைக்கத் தெரியாத
ஆட்டுக்குட்டிக்குத்
தெரிந்ததெல்லாம்
சுதந்திரமான ஓட்டம் மட்டும்தான்
கர்த்தரே
அந்த ஆட்டுக்குட்டியை இறக்கிவிடுங்கள்
மேய்ப்பர்கள்
ஆடுகளைப்
பிடித்துவைத்திருப்பதில்லை
வழிதவறிய ஆட்டுக்குட்டியை நீதியுள்ள பாதை வந்தவுடன் அதற்குறியவருடன் நிச்சயம் ஆண்டவர் ஒப்படைப்பார்.
ReplyDelete