கலந்தாய்வரங்கம்
10.06.2012
ஞாயிறு காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை
கருத்தரங்கக் கூடம் , பாண்டிச்சேரிப் பல்கலைக் கழக விருந்தினர் மாளிகை
பாண்டிச்சேரி
எதிர்வரும் 10.06.2012 ஞாயிறு அன்று காலை பத்து மணி முதல் மாலை ஐந்து வரை '' செவ்வியல் இலக்கிய ஆய்வுகள் இன்று '' என்ற தலைப்பில் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றை பாண்டிச்சேரியில் ஏற்பாடு செய்திருக்கிறேன். மணற்கேணி இதழ் 11 இல் வெளியான கட்டுரைகளில் செவ்வியல் இலக்கிய ஆய்வுகள் தொடர்பாக பேராசிரியர் இ.அண்ணாமலை மற்றும் , ஷெல்டன் போல்லாக் ஆகியோர் முன்வைத்திருக்கும் கருத்துகளை மேலும் விவாதிக்கவும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த் துறைகளில் நடைபெற்றுவரும் தமிழ்ச் செவ்வியல் இலக்கிய ஆய்வுகளை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறியவும், முந்தைய தலைமுறைத் தமிழ் அறிஞர்களின் அறிவு வளங்களை இன்றையத் தலைமுறை ஆய்வாளர்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதற்கான வழிவகைகளைக் கண்டறியவும் தான் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. .
இதில் பேராசிரியர்கள் கி.நாச்சிமுத்து(டெல்லி ) , சோ.ந.கந்தசாமி(தஞ்சை ), செ.வை.சண்முகம்(சிதம்பரம் ) , பெ.மாதையன்(சேலம் ) , து.மூர்த்தி (அலிகார் ) வீ.அரசு(சென்னை ), மதிவாணன் (திருச்சி ) ஜெயராமன்(வேலூர் ), விஜயவேணு கோபால்(புதுச்சேரி ) , ஆர்.கோதண்டராமன்(சென்னை ) , இ.சுந்தரமூர்த்தி (சென்னை ) ஆ.கார்த்திகேயன் (தஞ்சை ) ,உதயசூரியன்(தஞ்சை ) , கா.ராஜன்(புதுவை ), பெருமாள் முருகன்( நாமக்கல் ) ,ஜெய்கணேஷ்(சென்னை ) புதுச்சேரியைச் சேர்ந்த ,பக்தவத்சல பாரதி , இரா.சம்பத், பழனிவேலு, கே.ஏ.குணசேகரன், திருநாகலிங்கம், க.பஞ்சாங்கம், அறிவுநம்பி,சி.காந்தி(திருச்சி ),குணசேகரன்(கும்பகோணம் ) பொ.வேல்சாமி (நாமக்கல் ) உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் மற்றும் சென்னை, புதுவை பகுதிகளைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சி முழுவதையும் வீடியோ செய்து அதை இணையத்தில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் முன்வைக்கப்படும் கருத்துகளைத் தொகுத்து கல்லூரிகள் /பல்கலைக்கழகங்களில் இருக்கும் தமிழ்த் துறைத் தலைவர்களோடு விவாதிக்கலாமென முடிவுசெய்யப்பட்டுள்ளது.
செவ்வியல் இலக்கிய ஆய்வு மாணவர்கள் பயன்பெறவேண்டும் என்பதே இதன் முதன்மையான நோக்கமாகும்.
மணற்கேணி இதழ் சார்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த முயற்சிக்குத் தங்களின் ஆதரவை நாடுகிறேன். இந்த நிகழ்வில் தாங்களும் கலந்துகொள்ள இயலுமெனில் மகிழ்வேன். தங்களது நண்பர்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவியுங்கள்.
அன்புடன்ரவிக்குமார்ஆசிரியர் ,மணற்கேணி
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete