ஶ்ரீரங்கம் தேர்தலில் 'நோட்டா'வுக்கு 1919 பேர் வாக்களித்துள்ளனர். 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியின் சார்பில் திருச்சி தொகுதியில் தேமுதிக போட்டியிட்டது. அப்போது நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 3554. ஆனால் இப்போது அது 1919.
2014 இல் நோட்டாவைத் தேர்ந்தெடுத்தவர்களில் கணிசமானோர் இப்போது எத்தொ ஒரு கட்சிக்கு வாக்களிக்க முன்வந்திருக்கிறார்கள். அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்திருப்பார்கள்? பாஜகவுக்குத்தான்! 2011 இல் 2017 வாக்குகளைப் பெற்ற பாஜக மக்களவைத் தேர்தலின்போது செல்வாக்கின் உச்சத்தில் இருந்தது. ஆனால் அக்கட்சி அப்போது பொருத்தமற்ற கூட்டணியை அமைத்ததை அந்தக் கட்சியின் ஆதரவாளர்களே விரும்பவில்லை. குறிப்பாக அவர்கள் தேமுதிகவை விரும்பவே இல்லை.
அதனால்தான் தேதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. அப்படித்தான் தேமுதிக போட்டியிட்ட திருச்சி மக்களவைத் தொகுதியிலும் பாஜக வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் இப்போது பாஜக வேட்பாளர் நின்றதால் அவர்கள் நோட்டாவை விட்டுவிட்டு பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். நோட்டா வாக்குகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் இப்போது பாஜக வாங்கியிருக்கும் வாக்குகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இது விளங்கும்.
தேதிமுக இப்போதும் பாஜகவுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது. பாஜக அணியின் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவித்தால் பாஜக அணியில் தொடரலாம் என விஜயகாந்த் நினைப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன. இது அபத்தமான ஆசை. அப்படி அந்த அணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் அந்த அணியில் தேமுதிக ஒரு தொகுதியில்கூட வெல்ல முடியாது.
விஜயகாந்த் முதலில் முதலமைச்சர் கனவைக் கைவிடவேண்டும். தனது உண்மையான வாக்கு பலத்தை உணர்ந்து மதச்சார்பற்ற கட்சிகளின் பரந்த அணி ஒன்றை உருவாக்க முன்வரவேண்டும்.
No comments:
Post a Comment