ப்ராஸ்பெக்ட் மெகஸின் வருடம்தோறும் உலக சிந்தனையாளர்கள் என 50 பேரின் பட்டியலை வெளியிட்டு வாக்கெடுப்பு நடத்தி தரவரிசைப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு அந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் நான்கு இந்தியர்கள் இடம்பெற்றனர். அமர்த்யா சென், ரகுராம் ராஜன், அருந்ததி ராய், ஆகியோர் முதல் மூன்று இடங்களைப்
பிடித்தனர். கௌஷிக் பாசு ஆறாவது இடத்தில் இருந்தார்.
2015க்கான 50 பேர் அடங்கிய பட்டியல் இப்போது வெளியாகியிருக்கிறது. அதில் இந்தியாவிலிருந்து இம்முறை அருந்ததி ராய், பங்கஜ் மிஷ்ரா ஆகியோரின் பெயர்கள் உள்ளன. அந்தப் பட்டியலில் உள்ள வேறு சில பெயர்கள் ஹேபர்மாஸ், தாமஸ் பிக்கெட்டி, மரியோ வர்கஸ் லோஸா.
ஹேபர்மாஸும் பங்கஜ் மிஷ்ராவும் ஒரு பட்டியலில் இடம்பெறுவதைப்போல ஒரு கொடுமை வேறென்ன இருக்க முடியும்? இன்னும் கொடுமை என்னவென்றால் கடந்த ஆண்டு பட்டியலில் ஸிஸேக் 14 ஆவது இடத்திலும் பெர்ரி ஆண்டர்ஸன் 28 ஆவது இடத்திலும் இருந்தனர்.
இப்படியான பட்டியல்களின் பொருள் என்ன? இந்தப் பட்டியலில் இடம்பெறுவதாலேயே ஒருவர் உலகச் சிந்தனையாளராகிவிடமுடியுமா? இதுவும் ஒரு ஊடக மாயை அல்லாமல் வேறென்ன?
No comments:
Post a Comment