Sunday, January 23, 2011

நான் கேட்டதால் வந்த நான்கு அறிவிப்புகள்




இந்த ஆண்டுக்கான ஆளுநர் உரையில் நிதிநிலை அறிக்கையைப் போலவே நிறைய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்தல் வரவிருப்பதால் இந்த ஆண்டு முழுமையான நிதிநிலை அறிக்கை இல்லை என்பதால் இப்படிச் செய்துள்ளனர் போலும். இந்த ஆளுநர் உரையில் நான் கேட்ட நான்கு கோரிக்கைகள் நிறைவேறியுள்ளன.

1. மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளை இயக்கும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வேண்டுமென நான் கோரியிருந்தேன். அது ஏற்கப்பட்டு இப்போது அவர்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. நாட்டுப்படகு வைத்திருக்கும் மீனவர்களுக்கு மண்ணெண்ணை வழங்கவேண்டும் என்ற எனது கோரிக்கை ஏற்கப்பட்டு மாதம் முன்னூறு லிட்டர் மண்ணெண்ணை வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.

3. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட  தொகுப்பு வீடுகள் மிகவும் சிதிலமடைந்துவிட்டதால் அவற்றையும் குடிசைகளாகக் கருதி புதிய கான்கிரீட் வீடுகளைக் கட்டித்தரவேண்டும் என்று கேட்டிருந்தேன். அப்படி பத்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளை பழுதுநீக்குவதற்கு பதினைந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

4. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் இப்போது மற்ற சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கண்டறிந்து மீண்டும் அவற்றை தலித் மக்களின் கையில் ஒப்படைக்கவேண்டுமென நான் எனது கன்னி உரை முதல் அண்மையில் நான் பேசிய பேச்சுவரைத் தொடர்ந்து வலியுறுத்தினேன். அது இப்போது ஏற்கப்பட்டு அதற்கென ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது

தேசிய புத்தக ஆதரவுக் கொள்கை


அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் ஜனவரி 20 ஆம் தேதி அங்கு பணிபுரியும் நூலகர்களிடையே நான் உரையாற்றினேன். இந்திய அரசு உருவாக்கியிருக்கும் ‘ தேசிய புத்தக ஆதரவுக் கொள்கை ‘யின்( national book promotion policy ) வரைவு அறிக்கை குறித்தும் அதில் உள்ள குறைபாடுகள் , நூலகத்தை மையமாக வைத்து மாநில அளவில் அப்படியொரு கொள்கையை உருவாக்கவேண்டியதன் தேவை குறித்தும், தேசிய அறிவுசார் ஆணையம் நூலகங்கள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை பற்றியும்  சுமார் ஒன்றரை மணி நேரம் அவர்களிடம் பேசினேன். அங்கு 96 நூலகர்கள் பணிபுரிகின்றனர். பெரும்பாலோர் வந்து கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

இதே பிரச்சனையை முன்வைத்து நான் ஏற்கனவே சட்டப்பேரவையிலும் பேசியிருக்கிறேன். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடமும் கோரிக்கை மனு அளித்திருக்கிறேன். முதல்வரின் கவனத்துக்கும் கொண்டுசென்றிருக்கிறேன். இதுபற்றித் தமிழ்ப் பதிப்பாளர்களிடையே எவ்வித விழிப்புணர்வும் இல்லாதது வருத்தமளிக்கிறது.தற்போதிருக்கும் பொது நூலகங்களில் பத்து விழுக்காட்டு நூலகங்களைத் தேர்வு செய்து அவற்றின்மூலம் நூல் விற்பனையை மேற்கொள்ளலாம் என்ற எனது கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. நூலகத்துறையில் செய்வதற்கு நிறைய பணிகள் உள்ளன. அமைச்சரும், அதிகாரிகளும்   மனம் வைக்கவேண்டும். 










Saturday, January 22, 2011

முதல்வர் கலைஞர் ஆற்றிய வாழ்த்துரை






தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (16.01.2011) நடந்தது. விழாவிற்கு நிதியமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
திருவள்ளுவர் விருது- பா.வளன்அரசு, பெரியார்விருது - கோ.சாமிதுரை, அம்பேத்கர் விருது -டி.யசோதா எம்.எல்.ஏ., அண்ணா விருது -து.ரவிக்குமார் எம்.எல்.ஏ., காமராஜர் விருது - ஜெயந்திநடராஜன் எம்.பி, பாரதியார் விருது - நா.மம்மது, பாரதிதாசன் விருது - இரா.இளவரசு, திரு.வி.க.விருது - அ.அய்யாசாமி, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - இரா.மதிவாணன் ஆகியோருக்கு 1 லட்ச ரூபாய் பொற்கிழி வழங்கி தங்க பதக்கத்தையும் அணிவித்து முதல்வர் கருணாநிதி பாராட்டினார். சிறந்த நூல் ஆசிரியர்களுக்கு 20 ஆயிரமும், பதிபகத்தாருக்கு 5 ஆயிரமும் பரிசுகள் வழங்கினார்.
சிறந்த தமிழ் மென்பொருள்களுக்கு கணியன் பூங்குன்றனார் பரிசு வழங்கினார். மேலும், அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு நிதி உதவி ஆணைகளையும் வழங்கினார்.
பின்னர் முதல்வர் கலைஞர்  பேசியதாவது:

முதலில் தொகுப்புரையைப் பற்றிய ஒரு குறிப்பு. என்னை அவர்கள் இங்கே விளித்துப் பேசும்போது, திருவள்ளுவரின் மறுஉருவமாக நான் இருக்கிறேன், வாழும் வள்ளுவராக இருக்கிறேன் - என்றெல்லாம் மிகைப்படுத்திச் சொன்னதற்காக மிகவும் வருந்து கிறேன்.

ஏனென்றால், 1330 குறட்பாக்களை இந்த தமிழகத்திற்கு மாத்திரமல்லாமல், தரணிக்கே வழங்கிய பெறமுடியாத பெருஞ்செல்வத்தை இலக் கிய உலகத்திற்கு மாத்திரமல்ல, அறிவுலகம், கலை யுலகம், தமிழுலகம் அனைத்தும் பெற்றிடுகின்ற வகையில் பெரும்புகழ் பெற்ற வள்ளுவர் எங்கே, அந்த ஈரடியில் ஓரடி கூட எழுதத் தெரியாத நான் எங்கே - என்பதை நான் எண்ணிப்பார்த்து நான் சுதா சேஷய்யன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நிகழ்ச்சியில் தாங்கள் தொகுப்புரை ஆற்றும் பொழுது என்னை வள்ளுவருக்கு ஒப்பிட்டு, வாழும் வள்ளுவர் என்றோ அல்லது வள்ளுவரின் அவதா ரம் என்றோ பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், சிலர் வள்ளு வரை விட்டுவிடுவார்கள். வள்ளுவருடைய கொள்கை என்ன, வள்ளுவருடைய குறள் நயம் என்ன, குறள் பொருள் என்ன, அவரது வாழ்க்கையில் அவர் எடுத் துச் சொன்ன கருத்துகள் என்ன - இவைகளைப் பற்றியெல்லாம் விட்டுவிட்டு, இவர் என்ன வள்ளு வரா? என்ற அந்த வாதப் பிரதிவாதங்களில் சிலர், வள்ளு வரைக் கூட அரசியலாக்கி விட எண்ணுவார்கள்.

புகழுரைக்குப் பொருத்தமானவன் அல்லன்

ஆகவே, வள்ளுவரைக் காப்பாற்ற வேண்டுமே யானால், குறிப்பாக அரசியல்வாதிகளிடமிருந்து நாம் காப்பாற்ற வேண்டுமேயானால், வள்ளுவரை அல்லது வள்ளுவரோடு என்னை ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன். பரிவோடு கேட்டுக் கொள்கிறேன். இது தேவையில்லாத ஒரு வாதத்தை உருவாக்கும் என்பதற்கு மாத்திரமல்ல, நானே அந்தப் புகழு ரைக்கு பொருத்தமானவன் என்று என்னை எடுத்துக் கொள்ளவில்லை.

நான் வள்ளுவர் பால் அன்பு காட்டுவது, வள்ளுவத்தை தமிழகத்திலே மாத்திர மல்ல, தரணியெங்கும் பரப்ப வேண்டும் என்று கருதுவது இவையெல்லாம் வள்ளுவருக்காகத்தானே தவிர, எனக்காக அல்ல. ஏனென்றால், வள்ளுவம் பரவினால்தான் இந்த வையம் சமதர்ம நோக்கோடு, சமத்துவ நோக்கோடு, அன்புள்ளம் பெற்ற மக்களோடு வாழுகின்ற ஒரு நிலை பெற முடியும். அதற்காகத் தான் வள்ளுவரை நாம் பாராட்டுகிறோம். என்னைப் பொறுத்த வரையில், இங்கே நாம் அமர்ந்திருப்பது வள்ளுவர் கோட்டம்.

வள்ளுவருக்கு எங்கே அவர் நினைவாக ஒரு மண்டபம் அமைப்பது என்று எண்ணியபோது, நான் முதலில் மயிலைப் பகுதியிலே வள்ளுவர் பிறந்தார், அங்கேதான் வாழ்ந்தார் என்ற ஒரு கூற்றினை அடிப்படையாக வைத்து, அப்பொழுது முதலமைச்சராக இருந்த பெரியவர் பக்தவத்சலனார் அவர்களிடத்தில் அதுபற்றிக் கலந்து பேசினேன். அவர்கள் சொன்னார்கள் - மயிலாப்பூரிலே வள்ளுவர் வாழ்ந்தார் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், அங்கே ஒரு கோயிலைக் காட்டி, அது வள்ளுவர் பிறந்த இடம் என்றெல்லாம் சொல்லு கிறார்கள். இருந்தாலும் நீங்கள் ஆராய்ந்து பாருங் கள் என்று என்னிடத்திலே பக்தவத்சலனார் அவர் கள் குறிப்பிட்டார்கள். ஒரு குழு அதற்காக அமைக்கப்பட்டு, அது பற்றி நாங்கள் கலந்தாலோசித்தபோது, பெரியவர் பக்தவத்சலனார் அவர்கள் மீண்டும் என்னை அழைத்து, வள்ளுவருடைய பெயர் நிலைக்க, அவரு டைய குறள் பரவிட நீங்கள் எடுத்துக் கொண்டிரு கின்ற முயற்சிகளுக்குப் பாராட்டுகள். ஆனாலும் ஒரு பெரிய ஞானி - அவருடைய புகழைப் பரப்பிட, அவரை வழிபடுகின்ற மக்கள் தவறாக எதுவும் கருதிவிடக்கூடாது என்ற சூழ்நிலையில், அதை அமைக்க வேண்டும் என்று எனக்கு அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

பிறகு நான், பதவிப் பொறுப்பிற்கு வந்துவிட்ட காலம். அவரிடத்தில் நீங்கள் அந்தக் குழுவிலே இடம்பெற வேண்டும் என்று கேட்டபோது, தாரா ளமாக இடம்பெறுகிறேன் என்று சொன்னார்கள். பிறகு அந்தக் குழு கூடி, வள்ளுவர் வாழ்ந்த இடம் எது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அந்த ஆராய்ச் சிக்கே முடிவில்லாமல் போய், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அது கைவிடப்பட்டு விட்டது. வள்ளுவர் படத்தை சட்டமன்றத்தில் வைக்க...
அதற்கு முன்பே நான் சட்டமன்றத்திலே எதிர்க் கட்சியிலே துணைத்தலைவராக இருந்தபோது, அப்பொழுது முதலமைச்சராக பக்தவத்சலனார் இருந்த காலத்தில், திருவள்ளுவருடைய படத்தை சட்டமன்றத்திலே வைத்தால் என்ன - என்று கேட்டேன். அவர்களும் உடனடியாக எனக்குப் பதிலளித்தார்கள்.

வள்ளுவர் படம் வைப்பதிலே எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. கனம் உறுப்பினரே, (அப்பொழுதெல்லாம் மாண்புமிகு கிடையாது, கனம் என்றுதான் சொல்வோம்.- எல்லோரும் இலேசாக இருந்தால்கூட எல்லோரும் கனமாகத் தான் இருந்தோம்) அவருடைய செலவிலே ஒரு படத்தை வாங்கிக் கொடுத்தால், நாங்கள் மாட்டு வதற்குத் தயார் - என்று பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் சொன்னார்கள்.

நான் அந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக முயற்சி கள் எடுத்துக்கொண்டபோது, வேணுகோபால் சர்மா என்ற ஒரு ஓவியர் வள்ளுவருடைய படத் தைத் தீட்டி, அதை எல்லாக் கட்சித் தலைவர்களையும் அழைத்து - வள்ளுவர் படம் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள் என்று கேட்டபோது, எல்லாக் கட்சித் தலைவர்களும், அப்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் உயிரோடு இருந்தார்கள். அவர்களும், மற்றக் கட்சித் தலைவர்களும் சென்று அந்தப் படத்தைப் பார்த்து, இந்தப் படமே வள்ளுவர் படம் என்று நாம் நாட்டிலே அறிமுகப் படுத்தலாம். ஏனென்றால் வள்ளுவருக்கு இதுவரையிலே ஏதேதோ உருவங்கள் முனிவரைப் போல, தவசியைப் போல அமைத்திருக்கிறார்களே அல்லாமல், இதுதான் வள்ளுவர் என்று யாரும் சொல்லுகின்ற அளவிற்கு வள்ளுவர் உருவம் இல்லை என்ற போது, வேணுகோபால் சர்மா ஒரு படத்தை வரைந்து, இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா என்றார்கள்.

அண்ணா சென்று பார்த்தார், நான் சென்று பார்த்தேன், காமராஜர் சென்று பார்த்தார். எல்லோ ரும் பார்த்து விட்டு சரி என்று கூறி விட்டோம். சில பேருக்கு ஒரு குறை - வள்ளுவர் படங்களில் குறுக்கே ஒரு பூணுல் இருக்க வேண்டுமே, அவர் பிராமணர் அல்லவா, 1330 குறட்பாக்களை அவ் வளவு அருமையாக எழுதுவதென்றால், அவர் சாதா ரண மனிதராக இருந்திருக்க முடியுமா? அவர் பிரா மணர் அல்லவா என்று சிலபேர் பேசிக் கொண்டது எனக்குத் தெரியும்.

நூல் போடப்பட்டிருந்த இடத்தில் சால்வை

பிராமணராக இருந்த காரணத்தினால்தான் அவரால் திருக்குறளே எழுத முடிந்தது என்று குறிப்பிட்டதும் எனக்குத் தெரியும். எல்லோருக்கும் தெரியும். அதற்காக அதை வலியுறுத்துவதற்காக அந்த உருவத்தின் குறுக்கே ஒரு நூலினைப் போட்டு முன்பெல்லாம் வரைந்திருந்தார்கள்.

வேணுகோபால் சர்மா அவர்கள் நமக்கேன் அந்த வம்பு, அந்த நுலை நாம் போட்டால் அவர் பிராமணர் என்று சொன் னதை நாம் ஏற்றதாக ஆகிவிடும், போடாவிட்டால் அவர் பிராமணர் அல்ல என்று சொன்னதாக ஆகிவிடும், ஆகவே நூல் போடப்பட்டிருந்த இடத் தில் ஒரு சால்வையை போர்த்தி, நூல் உண்டா இல் லையா என்பதே தெரியாத அளவிற்கு வள்ளுவரை பிரச்சினைக்கு இடம் இல்லாமல் அந்தச் சித் திரத்தை அப்போது வரைந்து கொடுத்தார்.

நான் எங்கேயாவது போர்த்தியிருக்கின்ற இடத்தில் நூல் வெளியிலே தெரிகிறதா என்று பார்த்து, தெரிந்தால் பரவாயில்லை, அதை உடனே அழித்து விடுங்கள் என்று அவருக்குத் தெரிவித்து, அவரும் அவ்வாறு செய்து அந்த வள்ளுவர் படம் தயாரானது.

முதலமைச்சராக இருந்த பக்தவத்சலனார் இடத்தில், வள்ளுவர் படம் தயாராகிவிட்டது, என் சார்பில் அதை வாங்கித் தர வேண்டுமென்று சொன் னீர்கள், நான் தயார் என்று சட்டசபையிலேயே சொன்ன போது,

பக்தவச்சலம் விழித்துக் கொண்டார்

பெரியவர் பக்தவத்சலம் விழித்துக் கொண்டார். அவர் எப்போதுமே ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பவர். இவன் படத்தை வைத்து விட்டு, பிறகு நான் வைத்த படம் என்று ஊர் எல்லாம் தி.மு. கழகத்தார் சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்ப தால், இல்லையில்லை, நாங்களே வைத்து விடுகி றோம் என்று சொல்லி, அவர் அன்றைய அரசாங் கத்தின் சார்பாக படத்தை வைப்பதற்கு ஒத்துக் கொண்டு படத் திறப்பு விழாவும் நடைபெற்றது.

எங்களுக்கு எப்படியோ காரியம் நடந்தால் சரி, அதை தி.மு.க. வைத்தால் என்ன, காங்கிரஸ் வைத் தால் என்ன, தமிழ்நாடு சட்டசபையில் வள்ளுவர் படம் இருந்தே ஆக வேண்டும் என்ற எங்களுடைய எண்ணம் பலித்த காரணத்திற்காக பக்தவத்சலனார் அவர்களுக்கு நான் அப்போது நன்றி தெரிவித்தேன்.

மாணவர்கள் போராட்டக் காலத்திலே தான் அவருக்கும் எங்களுக்கும் மன வருத்தம் ஏற்பட்டதே அல்லாமல் நிருவாகத்தில் தமிழகத்தை நிருவகித் துச் சென்ற அந்தச் செயலில் அவரிடத்திலே நாங் கள் என்றைக்கும் வேறுபட்டதில்லை.

நான் பல முறை சட்டமன்றத்திலே எதிர்க்கட்சி வரிசையிலே நானும் சொல்லியிருக்கிறேன், நம்மு டைய பேராசிரியரும் பேசியிருக்கிறார். நிருவாகப் பொறுப்பில் அவரை யாரும் குறை சொல்ல முடி யாது என்று அன்றைக்கு நாங்கள் பேசியிருக்கிறோம்.

நான் அழைத்தவுடன் திருக்குவளைக்கு வந்தார்

அப்படிப்பட்டவரை எங்கள் ஊரில், நான் பிறந்த திருக்குவளையில் என்னுடைய தாயார், தந்தை பெயரால், ஒரு தாய் சேய் நல விடுதி அமைத்து, அதைத் திறந்து வைக்க நீங்கள் வரவேண் டுமென்று கேட்ட போது, சட்டசபையிலேயே கேட்டேன், உடனே சொன்னார், தாய் சேய் நல விடுதியைத் திறந்து வைக்கிறேனோ இல்லையோ, நான், நீங்கள் பிறந்த ஊரைப் பார்க்க விரும்பு கிறேன், ஆகவே வருகிறேன் என்று சொல்லி விட்டு பக்தவத்சலம் அவர்கள் வந்தார்கள். இதெல்லாம் அந்தக் காலத்து அரசியல் நாகரிகம். (கைதட்டல்).

அவர் வரும்போது கூட சில பேர் வரக் கூடாது என்று தடுத்தார்கள். கருணாநிதி உங்களை அழைத் துப் போய் அந்தத் தாய் சேய் நல விடுதியைத் திறக் கக் கூடாதென்றெல்லாம் கூடச் சொன்னார்கள். அதையும் மீறி அவர் வந்தார். அப்போது கூட சில பேர் அவருக்குக் கறுப்புக் கொடி பிடித்தார்கள். அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டார்கள்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், தி.மு.க. சார்பாக கேட்டோம், ஆகவே வைக்க முடியாது என்று அன்றைய காங்கிரஸ் அமைச்சரவை சொல்ல வில்லை. முதலில் தயங்கி, பிறகு நாங்களே வைக் கிறோம் என்று சொல்கிற அளவிற்குத் தான் இருந் தார்கள். அப்படி வைக்கப்பட்ட படம் தான் வேணு கோபால் சர்மா அவர்களால் வரையப்பட்டு, அழகுறு சட்டமன்றத்திலே மாட்டப்பட்டிருக்கின்ற வள்ளுவருடைய படம் ஆகும்.

அதற்குப் பிறகு ஆட்சி மாறி, அண்ணா அவர் களுடைய அமைச்சரவையில் நான் போக்குவரத்துத் துறை அமைச்சராக ஆனதும் ஓடுகின்ற எல்லா பேருந்துகளிலும், திருவள்ளுவருடைய படத்தை யும், திருக்குறளையும் எழுதச் செய்தேன். அந்த நேரத்தில் பேரவையில் கருத்திருமன் அவர்கள் யாகாவாராயினும் நா காக்க என்ற குறளை பேருந்தில் எழுதி வைத்திருக்கிறீர்களே, அது யாருக் காக என்று கேட்டார்.

சட்டமன்றத்தில் அப்போதெல்லாம் இப்படிப் பட்ட நேர்மையான, புதுமையான, சிக்கலான கேள்விகளைக் கேட்பது வழக்கம். அதன்படி கருத் திருமன் கேட்டவுடன், அண்ணா எழுந்து, நாக்கு இருப்பவர்களுக்காக (பலத்த கைதட்டல்) யார் யாருக்காக நாக்கு இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் நா காக்க வேண்டுமென்பதற்காக என்று அண்ணா சொன்னார்.

ஏன் இதை நினைவுபடுத்துகிறேன் என்றால், வள்ளுவருடைய படத்தை வைப்பது மாத்திரம்,- வள்ளுவருக்கு நாம் செய்கின்ற சிறப்பு அல்ல. அவர் என்னென்ன கருத்துகளை சொன்னாரோ, அந்தக் கருத்துகள்படி நடப்பது நம்முடைய கடமை.

அந்தக் கடமையை வள்ளுவர் வழியிலே செய்வதற் காகத் தான் தி. மு. கழக அரசு பல திட்டங்களை நிறைவேற்றி, அதைச் செயல்படுத்தி மக்களுடைய ஆதரவைப் பெற்று வருகிறது. அப்படிப்பட்ட அந்த அரசின் சார்பிலே தான் வள்ளுவருக்கு விழா எடுப்பது,- வள்ளுவருக்கு கோட்டம் அமைப்பது, வள்ளுவருக்கு சிலை எடுப்பது என்ற பல பெரிய காரியங்கள் தமிழகத்திலே தமிழ் வளர்ச்சிக்காக, தமிழர்களுடைய கலாச்சாரத்தை இன்று மாத் திரமல்ல, வருங்காலத்திலும் எதிர்காலத்திலும் படித்த இளைஞர்கள், வாலிபர்கள், மாணவர்கள், வழித்தோன்றல்கள் புரிந்து கொண்டு நம்முடைய இனம் என்ன, நம்முடைய மொழி என்ன, நம்மு டைய கலை, கலாச்சாரம், நாகரிகம் என்ன என் பதைப் புரிந்து கொள்ள இவைகள் எல்லாம் பயன் பட வேண்டும் என்பதற்காக அன்றைக்கு அமைக் கப்பட்ட சின்னங்களிலே ஒரு சிறந்த சின்னம்தான் இந்த வள்ளுவர் கோட்டம்.
ஒவ்வொரு கல்லும் என்னுடைய பார்வையிலே வைக்கப்பட்டது

இந்த வள்ளுவர் கோட்டத்தை நான் முதலமைச் சராக இருந்தபோது அமைத்தேன். இங்கேயுள்ள ஒவ்வொரு கல்லும் என்னுடைய பார்வையிலே தான் வைக்கப்பட்டது. காலை, மாலை, இரவு என்று இங்கேயே நான் ஒரு சிறிய குடிசையைப் போட்டுக் கொண்டு அதிலே படுத்துறங்கி, வள்ளுவர் கோட்டத்தின் திருப்பணிகள் நடை பெறுகின்ற காட்சியைக் கண்டு களித்தவன் நான்.

ஆனால் இந்தக் கோட்டம் திறக்கப்பட்ட அந்த நாளில் நான் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஏன் என்று உங்களுக்குத் தெரியும். அதையெல்லாம் விவரிக்க நான் விரும்பவில்லை. வள்ளுவர் கோட்டத் திலே அதைக் கட்டியவன் நுழைய முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்ட காலத்தில் தமிழ்ப் புலவர்கள் எல்லாம் கொதித்தார்கள். இங்கேயே நடைபெற்ற ஒரு விழாவில் தமிழ்ச் சான்றோர்கள் தங்களுடைய சினத்தை, எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இதைப் புரிந்து கொண்டு நான் அவர்களை யெல்லாம் சமாதானப்படுத்தி வள்ளுவர் கோட் டத்திலே வள்ளுவருடைய சிறப்பை செய்வோம், வள்ளுவர் பெயரால் நாம் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளக் கூடாது, அது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல என்று எடுத்துக் கூறி பிறகு - நம்முடைய மூப்பனார் போன்றவர்கள் எல்லாம் வந்து கலந்து கொண்ட பெரிய விழாவாக திருவள்ளுவருடைய சிலை திறப்பு விழாவினை குமரி முனையிலே நடத்தி, அந்த விழாவிலே பல அறிவிப்புகளைச் செய்து அந்த அறிவிப்புகளின் படி இன்றைய தினம் புத்த கங்கள் எழுதியவர்களுக்கு பரிசு, விருது, வள்ளு வருடைய வரலாறு எழுதியவர்களுக்கு பரிசு, விருது - வள்ளுவரைப் பற்றி ஆய்வு செய்தவர்களுக் கெல்லாம் பரிசு, விருது, அவர் நினைவாக பலருக்கு இப்போதும் நிதியளிப்புகள் - திருக்குறள் முழு வதையும் மனப்பாடம் செய்து ஒப்படை செய்பவர் களுக்கு சிறப்பு விருதுகள் - அந்த மாணவர்களுக்கு பாராட்டு - படிப்பிலே தேர்ச்சி - நிதி உதவி என்று இப்படிப் பல காரியங்கள் வள்ளுவர் பெயரால், வள்ளுவரைப் பாராட்டுகின்ற வகையில், வள்ளு வருக்கு சிறப்பு செய்கின்ற வகையில் இன்று வரையில் நடைபெற்று வருகின்றன.

கோ.சாமிதுரையின் வைரம் பாய்ந்த உள்ளம்

அப்படி நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளிலே ஒன்றாகத் தான் இன்று இந்த விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றிருக்கிறது. இதிலே நம்முடைய தந்தை பெரியார் பெயரால் அமைந்துள்ள விருதை திரு. கோ. சாமிதுரை பெற்றிருக்கிறார் என்றால்,- அவர் இந்த நிலையிலும் உடல்நிலை பெருமளவிற்கு ஆரோக்கியமாக இல்லாவிட்டாலும், வைரம் பாய்ந்த உள்ளம் கழகத்தைப் பொறுத்தவரையில், திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரையில், பெரி யாருடைய கொள்கைகளைப் பொறுத்தவரையில் உள்ளவர் என்ற காரணத்தினால் பெரியார் விருது அவருக்கு இன்றைக்கு வழங்கப்பட்டது.

அதே போல அம்பேத்கர் விருது பற்றி திரு மதி யசோதா அம்மையார் அவர்கள் இங்கே சொன் னார்கள். சுருக்கமாகச் சொன்னார்கள். மராட்டி யத்தில் அம்பேத்கருடைய பெயரால் ஒரு பல்கலைக் கழகத்தை உருவாக்க இருந்து, சட்ட மன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி, 11 ஆண்டுகள் கழிந்த பிறகும் அந்தத் தீர்மானத்தை செயல்படுத்தாமல், அம் பேத்கர் பெயரால் பல்கலைக் கழகம் அங்கே அமைக்கப்படாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டி பத்திரிகையிலே ஒரு செய்தி போட்டிருந்தார்கள். அன்றைய தினமணி நாளிதழ் என்று கருதுகிறேன், அதிலே இந்தச் செய்தி வந்திருந்தது. அப்போ தெல்லாம் தினமணி போன்ற பத்திரிகைகளில் இத்தகைய நல்ல செய்திகளை வெளியிடுவார்கள்.

அதைப் பார்த்தவுடன், ஆகா, அம்பேத்கருடைய பல்கலைக் கழகத்திற்கு அனுமதி கிடைத்தும், பதி னோரு ஆண்டு காலமாக நிறைவேற்றவில்லையா, என்ற கொந்தளிப்போடு நான் உடனே ஒரு அறிக்கை வெளியிட்டேன். அம்பேத்கர் பெயரால் அமைய வேண்டிய பல்கலைக்கழகம் சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றியும்கூட இன்னும் மராட் டியத்திலே நிறைவேற்றப்படவில்லை, ஆகவே நம் முடைய கழகத்தைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாட்டிலே உள்ள மக்கள் அம்பேத்கர் பெயரால் அன்பு கொண் டவர்கள் அத்தனை பேரும், மராட்டிய மாநில முதலமைச்சருக்கு அந்தப் பல்கலைக் கழகத்தை உடனே நிறுவ வேண்டும் என்று தந்தி கொடுங்கள், தந்தியின் நகலை அங்கேயிருந்த ஆளுநர் அலெக் சாண்டருக்கும் அனுப்புங்கள் என்று அறிக்கை நான் விடுத்து, பல்லாயிரக்கணக்கான தந்திகள் தி.மு. கழகத்தின் சார்பிலும் மற்றும் தமிழ் மக்கள் சார் பிலும், ஆதி திராவிட அமைப்புகள் சார்பிலும் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தத் தந்திகள் சென்ற ஒரு வாரத்திற்குப் பிறகு, அங்கேயிருந்த ஆளுநர் அலெக்சாண்டரிடமிருந்து, அவர் இங்கேயிருந்து அங்கே சென்றவர், ஒரு கடிதம் வந்தது. அம்பேத்கர் பல்கலைக் கழகம் குறித்து நாங் கள் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம், விரை வில் நல்ல செய்தி சொல்வோம் என்று எனக்கு தகவல் அனுப்பியிருந்தார். நான் அதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பாராட்டி நன்றி தெரிவித்து பதில் கடிதம் எழுதினேன்.

பிறகு நான்கு நாள்களுக்கெல்லாம் அம்பேத்கர் பல்கலைக் கழகம் அமைப்பதற்கான அரசு உத்தரவு எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பார் பார் நாங்கள் அந்த உத்தரவையெல்லாம் பிறப்பித்து விட்டோம், ஆகவே பல்கலைக் கழகம் வந்தே தீரும் என்று எனக்கு எழுதினார்கள்.

அதை நான் பத்திரிகையிலே வெளியிட்ட, அதற்குப் பிறகு அதற்கான கிளர்ச்சி கைவிடப் பட்டது. அம்பேத்கர் பல்கலைக் கழகம் இன்றைக்கு மராட்டியத்திலே மகோன்னதமாக நடந்து வருகிறது என்றால், அதற்கு நாம் எடுத்துக் கொண்ட முயற்சி தான் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மராட்டியத்தில் மாத்திரமல்ல; அம்பேத்கர் பெயரால் முதன் முதலாக சட்டக் கல்லுரி ஒன்றை தமிழகத்திலே, சென்னை மாநகரத்திலே அமைக்கப் பட்டது - இந்தியாவிலே வேறெங்கும் இல்லை, இங்கேதான் சட்டப் பல்கலைக்கழகம் அமைத்து விட்டு, அந்தப் பல்கலைக்கழகத்திற்கான அலுவல கத்தை எங்கே அமைப்பது என்ற போது, பொதுப் பணித் துறை அமைச்சராக அப்போது தம்பி துரைமுருகன் இருந்தார், அவர் தன்னுடைய முயற்சி யினால் ஒரு அலுவலகத்தை, பிரமாண்டமாக அமைத்து என்னை அழைத்துச் சென்று காட் டினார்.

இது எதற்கு என்று கேட்டேன். அவர் சொன்னார், முதலமைச்சருக்கான வீடு என்றார். முதலமைச்சருக்கு வீடு தான் தேவையே தவிர, மாளிகை தேவையில்லையே என்று நான் கூறிய போது, இல்லையில்லை, இங்கே தான் நீங்கள் தங்க வேண்டும், அது தான் உங்கள் உடம்புக்கு நல்லது, பாருங்கள் எப்படி காற்று வருகிறது என்றெல்லாம் சொன்னார்.

காற்று வரட்டும், வராமல் இருக்கட்டும், ஆனால் இவ்வளவு பெரிய இடம் நான் ஒருவன் இங்கே குடும்பம் நடத்துவதற்குத் தேவையில்லை, அம்பேத் கர் பெயரால் உள்ள சட்டப் பல்கலைக் கழகத்திற்கு அலுவலகம் வைக்க இடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள், ஆகவே இதை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் அலுவலமாக ஆக்கி விடு என்று நான் சொல்லி, அந்த அலுவலகமாக அது ஆக்கப்பட்டது.

கிஞ்சிற்றும் மறக்காமல்...

அதற்குப் பக்கத்திலே தான் அம்பேத்கருடைய பெயரால் ஒரு மண்டபம் நான்கு கோடி ரூபாய் செலவில் அப்போது அமைக்கப்பட்டது,- அப் போது நான்கு கோடி, இப்போது எவ்வளவு ஆகும் என்று தெரியாது. அவ்வளவு பெரிய மண்டபத்தை அம்பேத்கர் பெயரால் அங்கே அமைத்தோம். இப்படி அம்பேத்கர் பெயரால் எத்தனையோ திட்டங்களை, எத்தனையோ மண்டபங்களை, எத்தனையோ கொள்கைகளை நிறைவேற்றி வருவது தான் இந்தக் கழக அரசு. எப்படி ஜவகர்லால் நேரு அவர்கள் அம்பேத்கர் இடத்திலே அன்பு வைத்து அவருக்கு மரியாதை செய்தாரோ, அதே அளவில், அவர் வழியிலே நின்று தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் அம்பேத்கர் இடத்திலே கொண்டிருந்த அன்பு, மரியாதை, அவருடைய அறிவைப் போற்றிய அந்தத் தன்மை ஆகியவற்றை கிஞ்சிற்றும் நான் மறவாமல் அவரு டைய நினைவைப் போற்றிக் கொண்டிருக்கிறேன். அந்த அம்பேத்கருடைய பெயரால் உள்ள இந்த விருதை சட்டப் பேரவை உறுப்பினர் திருமதி யசோதா அவர்களுக்குத் தரப்பட் டிருப்பது ஒரு தொண்டு உள்ளத்திற்குக் கிடைத்த பரிசு என்றே நான் கருதுகிறேன். (கைதட்டல்).

ஏனென்றால் அவர் வெற்றி பெற்றிருக்கின்ற தொகுதியில் தமிழ்நாட்டிலே எது நடந்தாலும், அது அங்கே நடக்க வேண்டுமென்று எண்ணுகின்ற வர் திருமதி யசோதா அவர்கள். அப்படிப்பட்ட அம்மையார் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாதவர். உண்மையாக அந்த இயக்கத்திற்கு உழைத்துக் கொண்டிருக்கின்ற மகளிர் படையின ரில் அவர் ஒருவர். அப்படிப்பட்டவருக்கு அம்பேத் கர் விருதை இன்றைக்கு வழங்கியிருக்கிறோம்.

வியப்படைய வைத்தவர் 

பேரறிஞர் அண்ணா விருதைப் பெற்றவர் அருமைச் சகோதரர் ரவிக் குமார், எம்.எல்.ஏ., அவர்கள். விடுதலை சிறுத்தைகளின் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தளபதிகளிலே ஒருவர் ஆவார் அவர். அவரை தளபதி என்று நான் சொல் வதை நம்முடைய திருமாவளவன் ஏற்றுக் கொண் டிருப்பார் என்றே நான் கருதுகிறேன். திருமா வளவன் கையொலி செய்வதிலிருந்தே அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். ரவிக்குமார் அவர்கள் பல நூல்களை எழுதியவர். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு நுல்களா, நாமே இவ்வளவு எழுதவில்லையே என்று. அவ்வளவு நுல்களை, உலகத்திலே உள்ள பல தலைவர்களைப்பற்றி, பல கருத்துகளைப் பற்றி விமர்சனங்களையெல்லாம் எழுதியவர் அவர். இன்னும் சொல்லப் போனால் ஆரம்ப காலத்தில் அவர் எங்களைத் தீவிரமாக எதிர்த்தவர். தீவிரமாக எதிர்த்தால் தான் பிறகு தீவிரமாக ஆதரிப்பார்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும் (கைதட்டல்).

எனக்கு அவரிடம் எப்போதுமே அவருடைய பேச்சில், அவருடைய நடவடிக்கையில், அவருடைய எழுத்தில் மயக்கம் உண்டு. இவர் நம்மிடமே இருக்க வேண்டுமே என்று கருதியிருந்தேன். பிறகு பார்த்தால் அவர் சிறுத்தைகளிடம் இருந்தார். அதுவும் நம் இடம் தான் (கைதட்டல்) என்று அதிலே ஒரு ஆறுதல் கொண்டேன். வீரமணி-பாரதியாரை நேரடியாக ஒத்துக் கொள்ளாதவர்

பெருந்தலைவர் காமராசர் விருது பெற்ற திருமதி.ஜெயந்தி நடராஜன் அவர்கள், அவருடைய குடும்பத்தைப்பற்றி குறிப்பிட்டார்கள். அவர்களு டைய குடும்பத்தைப் பற்றியும், அக்குடும்பத் தலைவர் பக்தவத்சலம் அவர்களைப் பற்றியும், அவர் கட்டிக்காத்த அரசியல் நாகரிகம் பற்றியும் கூறி யிருக்கின்றேன். அன்று பெருந்தலைவர் காமராசர் கட்டிக்காத்த அரசியல் நாகரிகத்திற்கும், என்னு டைய குடும்பத்திலே இருந்து ஒரு உதாரணம் சொல்ல வேண்டும்.

அவரை நான் எந்த அளவிற்கு அரசியல் ரீதியாக எதிர்த்தேன் என்பது உங்களுக் கெல்லாம் தெரியும். அதைப்போல அவரும் என்னை எந்த அளவிற்கு அரசியல் ரீதியாக விமர்சனம் செய்தார் என்று உங்களுக்கெல்லாம் தெரியும். ஆனால், ஸ்டான்லி மருத்துவமனையில் என்னு டைய தாயார் மறைந்து விட்டார் என்று கேள் விப்பட்ட அவர், நான் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வருவதற்குள் அவர் என் வீட்டு முகப்பிலே எனக்காகக் காத்திருந்தார். துக்கம் விசாரிப்பதற்காக வந்து காத்திருந்தார். அந்த அளவிற்கு, என் தாயார் மீதிருந்த பாசத்தினால் என்று சொல்லுவதை விட, அரசியல் நாகரிகத்திலே, பண்பாட்டிலே அவ்வளவு அக்கறை வைத்திருந்தார் என்பதற்கு அது ஒரு உதாரணம்.

அப்படிப்பட்ட பெருந்தகையாக இருந்தவர் பெருந்தலை நாம் உயர்கல்விப் படிப்பு என்று அங் கெங்கெல்லாம் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என நிரம்பத் தொடங்கிக் கொண்டிருந்தாலும்கூட, இவற்றிற்கெல்லாம் வித்திட்ட மகான் பெருந் தலைவர் காமராஜர் என்று சொன்னால் அது மிகை யாகாது. அப்படிப்பட்டவர் பெயரால் மிகப் பொருத்தமாக திருமதி. ஜெயந்தி நடராஜன், எம்.பி., அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

அய்யன் திருவள்ளுவர் விருதைப் பெற்றிருப் பவர் முனைவர் பா. வளன்அரசு. அவருடைய இயற்பெயர் என்ன என்று நான் ஆராய முற்பட் டேன். ஏனென்றால், தமிழகத்திலே தமிழ் இயக்கம் வளர்ந்த பிறகு, பலரும் பெயரை மாற்றிக் கொண் டார்கள். அந்தப் பெயர்களில் ஒன்றுதான் ராமையா என்பது அன்பழகனாக ஆயிற்று என்று அறிவீர்கள். நாராயணசாமி என்பது நெடுஞ்செழியனாக ஆயிற்று என்று அறிவீர்கள். இந்த முனைவர் பா. வளன்அரசு, ஜோசப் ராஜ் என்ற பெயருடையவர். அவர் வளன்அரசு என்று இந்தத் தமிழ் இயக்கத்தின் சார்பாக எடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டு, திருவள்ளு வருடைய கருத்துகளை, தமிழிலக்கியங்களை வளர்த்து வருகின்றவர். அவர் இன்று விருதைப் பெற்றிருக் கின்றார்.

மகாகவி பாரதியார் விருதினை திரு. நா. மம்மது அவர்கள் பெற்றிருக்கின்றார்கள். அவரும் முகம்மது ஆக இருந்து மம்மது ஆக ஆகியிருப்பார் என்று கருதுகிறேன். அதுதான் சரியாக இருக்கும் என்று எண்ணுகின்றேன். அவர்கள் மகாகவி பாரதியார் விருதைப் பெற்றிருப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சி தரக்கூடியது. பாரதியாரைப் பற்றி, கருத்து சொல்லும்போது நம்முடைய தமிழர் தலைவர் திரு. வீரமணி அவர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர் கள் எல்லாம் பாரதியாரை நேரடியாக ஒத்துக் கொண்டவர்கள் அல்ல. ஏனென்றால், பாரதியாருடைய சமுதாயத்தை புரிந்து கொண்ட காரணத்தால், என்னதான் பாரதி யாராக இருந்தாலும், அவரும் அங்கே பிறந்த வர்தானே - என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டு.

பார்ப்பானை அய்யர் என்ற காலம் போச்சே

ஆனால், எங்களுக்கு அந்தப் பாரதியார் பார்ப் பானை அய்யர் என்ற காலம் போச்சே என்று சொன்ன பாரதியார்தான் எங்கள் உள்ளம் கவர்ந்தவர். சீர்திருத்த பாரதியார், சுயமரியாதை பாரதியார் - அந்தப் பாரதியார் எங்களுக்கு உகந்தவர். எந்த ஒரு புலவருடைய வாழ்க்கையிலும், எந்த ஒரு தலைவருடைய வாழ்க்கையிலும், அதை பகுதி பகுதியாகப் பிரித்துப் பார்த்தால், சில பகுதிகள் மெஜாரிட்டி பகுதிகள் நம்முடைய கொள்கை களைக் கொண்டதாக இருக்கும். சில பகுதிகள் நமது கொள்கைகளுக்கு மாறானதாக இருக்கும். அவைகள் எல்லாம் காலத்தை வைத்துப் பார்க்கும் பொழுது - முற்காலமா, பிற்காலமா என்று பார்க்கும் பொழுது, சுப்பிரமணிய பாரதியாரைப் பொறுத்த வரையில், அவர்கள் ஒரே குலம், ஒரே கடவுள் என்ற கொள்கையை வலியுறுத்திப் பாடிய பாடல்கள் பல உண்டு.

பேய், பிசாசு என்ற மூடக் கொள்கைகளை எல்லாம் வேரறுக்க வேண்டும் என்று கருதி எழுதிய கவிதைகள் பல உண்டு. அந்த வகையிலே, பாரதியா ருடைய விருதை திரு. மம்மது அவர்கள் பெறுவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விருதை முனை வர் இரா. இளவரசு அவர்கள் பெற்றிருக்கிறார். பாவேந்தர் பாரதிதாசன் பாரதியாரை எந்த அளவிற்குப் புகழ்ந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். தன்னுடைய குருவாக பாரதியாரை ஏற்றுக் கொண்டவர். அப்படிப்பட்ட குரு பக்தி யுடையவர் ஆசிரியரிடத்தில் பக்தியுடையவர். அவருடைய வழியிலே பின்பற்றிய, இடையிலே பெரியாருடைய தலைமையில் தம்மை ஒப்படைத் துக் கொண்டாலும்கூட, பாரதிதாசன் தமிழுக்கு, தமிழக மக்களுக்கு ஆற்றியிருக்கின்ற தொண்டு கொஞ்ச நஞ்சமல்ல. அப்படிப்பட்ட பெரும் புரட்சிக்காரராக அவர் விளங்கினார்.

அதனால்தான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்ற பெயர் அவருக்கு நிலைத்தது. யார் யாரோ அந்தப் புரட்சியை வைத்துக் கொண்டு பெயர் சொல்லிப் பார்த்தாலும் கூட, அது நம்முடைய கவிஞரை விட்டு இன்னும் பிரியவில்லை, பிரியவும் பிரியாது, பிரியவும் முடியாது.

தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது - தமிழை நேசித்தவர் மாத்திரமல்ல; பூசித்தவராகவும், தமிழுக்கு தனிப்பெரும் சிம்மாசனம் போடப்பட வேண்டும் என்று கருதியவராகவும், அதே நேரத்திலே தொழிற்சங்கங்களில் ஈடுபாடு உள்ளவராகவும் இருந்து, தேசியத்திலே பெரும் பற்றுக் கொண்டு விளங்கியவர் தமிழ்த் தென்றல் திரு.வி. கல்யாண சுந்தரனார். அந்தத் தென்றல் பெயரை கொண்ட விருதை பேராசிரியர் அ. அய்யாசாமி அவர்கள் பெற்றிருக்கின்றார்கள். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் பெயரால் உள்ள விருது முனைவர் இரா. மதிவாணன் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. முனைவர் மதிவாணன் அவர்களை நான் அவ ருடைய நூல்களின் மூலம் அறிவேன். நான் எழுதிய காலப் பேழையும், கவிதைச் சாவியும் என்ற இலக்கியம் போன்ற ஒரு வரலாற்று நூல் - வரலாறென்றால் ஆரம்ப காலம் உலகம் தோன்றியது முதல், இதுவரை உள்ள நிலைகளைச் சித்தரிக்கும் நூல் காலப் பேழையும், கவிதைச் சாவியும். காலத்தைப் பேழையாக ஆக்கி, என்னுடைய கவிதைகளைச் சாவிகளாக ஆக்கி, அதைத் திறந்து திறந்து எடுத்துத் தந்த பல கருவூலங்கள் அந்தப் புத்தகத்திலே உண்டு.

அதற்கு எனக்குப் பெரும்பகுதி உதவியவர், நேரடியாக அல்ல, அவர்கள் எழுதிய நூல்களின் வாயிலாக உதவியவர். அந்த நூல்களில் இருந்துதான் நான் மேற்கோள் காட்டியிருக்கின் றேன். முனைவர் இரா. மதிவாணன் அவர்களுக்கு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் பெயரால் உள்ள விருதை வழங்குகின்றோம்.

பரிசுத் தொகை அதிகரிப்பு

விருது பெற்றவர்களையெல்லாம் நான் வாழ்த்து கின்றேன். பொதுவாக ஒவ்வொரு திருவள்ளுவர் நாளிலும், புதிய அறிவிப்புகள் சிலவற்றை அரசின் சார்பில் செய்வது உண்டு. அது விருது பெற்ற வர்களுக்கு சற்று ஆதாயமாக, மகிழ்ச்சி தரக்கூடிய தாக, பெருமகிழ்ச்சி என இல்லாவிட்டாலும், மகிழ்ச்சி அரும்பக்கூடியதாக அமையும் என்பதால் அவைகளை நான் நிதியமைச்சருடைய, ஏனென்றால் நிதியைக் கேட்காமல் எதுவும் செய்ய முடியாது - கருத்தினை அறிந்து அதன் வாயிலாகச் சொல்லு கிறேன்.

நூலாசிரியர்களுக்கு 72ஆம் ஆண்டு 2000 ரூபாயாக இருந்தது,
1991ஆம் ஆண்டு அந்தத் தொகை 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
1998 இல் பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தப் பட்டது.
2008 இல் இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தப் பட்டது.

இப்படிப் படிப்படியாக உயர்த்திய இந்த அரசு, இனி, இன்று முதல் சிறந்த நூலாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இருபதாயிரம் ரூபாய் என்பதை மேலும் பத்தாயிரம் ரூபாய் உயர்த்தி, முப்பதாயிரம் ரூபாயாக வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். (கைதட்டல்).

அண்ணா விருது பெற்றதற்காகப் பாராட்டு விழா - அழைப்பு



Ravikumar Photos






இளைஞன் திரைப்பட சிறப்புக் காட்சியின்போது இடைவேளையில் முதல்வர் கலைஞரோடு




"எனக்குஅவரிடம் எப்போதுமே அவருடைய பேச்சில் , அவருடைய நடவடிக்கையில் , அவருடைய எழுத்தில் மயக்கம் உண்டு."




" பேரறிஞர் அண்ணா விருதைப் பெற்றவர் அருமைச் சகோதரர் ரவிக்குமார் எம்.எல்.ஏ அவர்கள் விடுதலைச் சிறுத்தைகளின் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்ட தளபதிகளிலே ஒருவர் ஆவார் . அவரைத் தளபதி என்று நான் சொல்வதை நம்முடைய திருமாவளவன் ஏற்றுக்கொண்டிருப்பார் என்றே நான் கருதுகிறேன். திருமாவளவன் கையொலி செய்வதிலிருந்தே அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். ரவிக்குமார் அவர்கள் பல நூல்களை எழுதியவர். எனக்கே ஆச்சரியமாக இருந்தது - இவ்வளவு நூல்களா , நாமே இவ்வளவு எழுதவில்லையே என்று. அவ்வளவு நூல்களை - உலகத்திலே உள்ள பல தலைவர்களைப் பற்றி - பல கருத்துகளைப் பற்றி விமர்சனங்களையெல்லாம் எழுதியவர் அவர். இன்னும் சொல்லப்போனால் ஆரம்ப காலத்தில் அவர் எங்களைத் தீவிரமாக எதிர்த்தவர். தீவிரமாக எதிர்த்தால்தான் பிறகு தீவிரமாக ஆதரிப்பார்களென்று எனக்கு நன்றாகத்தெரியும் . எனக்கு அவரிடம் எப்போதுமே அவருடைய பேச்சில் , அவருடைய நடவடிக்கையில் , அவருடைய எழுத்தில் மயக்கம் உண்டு. இவர் நம்மிடமே இருக்கவேண்டுமே என்று கருதியிருந்தேன். பிறகு பார்த்தால் அவர் சிறுத்தைகளிடம் இருந்தார். அதுவும் நம் இடம்தான் என்று அதிலே ஒரு ஆறுதல் கொண்டேன்."

“ ( 16.01.2011 அன்று தமிழக அரசின் சார்பில் பேரறிஞர் அண்ணா விருதை அளித்துத் தமிழக முதல்வர் கலைஞர் ஆற்றிய உரை.
    நன்றி : முரசொலி 18.01.2011 )



ரவிக்குமாருக்கு அண்ணா விருது

தமிழக அரசின் சார்பில் ேரறிஞர் அண்ணா விருது ரவிக்குமாருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 16.01.2011 அன்று நடைபெற்ற அந்த விருது வழங்கும் விழா காட்சிகள்






Saturday, January 15, 2011

my tamil: பல்லோர் உவந்த உவகை...

my tamil: பல்லோர் உவந்த உவகை...: "மாதங்களில் சிறந்த மார்கழி நிறைவடையப்போகிறது. நிலமும் நீரும் வானும் காற்றும் விசும்பும் இயற்கையின் பிற வடிவங்களும் புதுத் தெம்போடு சிலி..."

Thursday, January 13, 2011

''தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்'' - ரவிக்குமார்

      ''தரணி ஆண்ட தமிழர்க்கு

      தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு!'' என்று பாடினார் பாரதிதாசன். அந்தப் பாடல் இப்போது செயல்வடிவம் பெறப்போகிறது. தை முதல் நாளைத் தமிழ்ப்புத்தாண்டின் முதல் நாளாக அறிவித்து தமிழக அரசு இயற்றிய சட்டம் இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. 1921ஆம் ஆண்டில் மறைமலை அடிகளார் தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடிய ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் தமிழருக்கென தனியே ஒரு காலக்கணக்குத் தேவை என்பதை வலியுறுத்தி திருவள்ளுவர் பிறந்த ஆண்டாகக் கருதப்படும் கி.மு. 31ஆம் ஆண்டைத் துவக்க ஆண்டாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு என ஒன்றை அறிவித்தார்கள். சித்திரை முதல் நாளைத் தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடுவது தமிழர் மரபுக்கு பொருத்தமானதல்ல, தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு எனவும் அவர்கள் முடிவு செய்தார்கள்.

      திருவள்ளுவர் ஆண்டு என்கிற காலக்கணக்கை தமிழக அரசு 1971ஆம் ஆண்டிலேயே ஏற்றுக்கொண்டு விட்டது. அது குறித்து அரசாணையும் வெளியிடப்பட்டது. இப்போது தமிழ்ப் புத்தாண்டு பற்றிய தமிழறிஞர்களின் விருப்பமும் நிறைவேறியுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர்தான் இந்த இரண்டு ஆணைகளையும் பிறப்பித்தவர். இந்த நடவடிக்கைகள் பண்பாட்டுத் தளத்தில் செய்யப்பட்டுள்ள முக்கியமான குறுக்கீடுகள் என்பதை எவரும் மறுக்க முடியாது.

      திருவிழாக்கள், பண்டிகைகள் என்பவை மக்களால் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருபவை. பல பண்டிகைகள் வழக்கொழிந்து போவதும், புதிது புதிதாக பண்டிகைகள் அறிமுகமாவதும் நாம் அறிந்தவைதான். ஆடிப் பெருக்கு என்ற பண்டிகை இன்று தமிழர்களால் அவ்வளவாகக் கொண்டாடப்படுவதில்லை. ஆனால் ஆங்கிலப் புத்தாண்டு இப்போது வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. பொங்கலைவிட தீபாவளிதான் தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படுகிற பண்டிகையாக இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. காட்சி ஊடகங்கள் செல்வாக்கு செலுத்தும் இன்றைய நாளில் கிரிக்கெட் போட்டிகூட திருவிழாவாக மாற்றப்படலாம்.

      தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்தபோது அதை உலகெங்குமுள்ள தமிழ் உணர்வாளர்கள் பாராட்டி வரவேற்றார்கள். ஆனால் அதை விமர்சித்தவர்களும் உண்டு. மக்களின் பண்பாட்டு நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடுவது சரியல்ல என்பது ஒருசிலரின் வாதம். காலம்காலமாக இருந்துவரும் வழக்கத்தை திடீரென்று மாற்றச்சொல்வது சரியா? என்பது அவர்களின் கேள்வி. நீண்ட காலமாக இருந்து வருகிறது என்பதாலேயே ஒன்றை நாம் ஏற்றுக்கொண்டு விடமுடியாது. சாதி ஏற்றத்தாழ்வுகள்கூட வெகுகாலமாக இருந்துவருவதுதான். அதை ஜனநாயகம், சமத்துவம் என்ற கருத்தாக்கங்கள் கோலோச்சுகிற இன்றைய நாளில் நாம் கடைபிடிக்க முடியாது அல்லவா? மக்களின் பண்பாட்டு நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்ற வாதமும்கூட பிற்போக்கான ஒன்றுதான். உடன்கட்டை ஏறும் வழக்கம் இந்திய மக்களின் பண்பாடாக ஒருகாலத்தில் இருந்தது. அதுபோலவே பால்ய விவாகமும் நடைமுறையில் இருந்தது. மனித நாகரீகத்துக்கு விரோதமான இவற்றையெல்லாம் அரசின் குறுக்கீடுகள்தான் இப்போது ஒழித்துக்கட்டியிருக்கிறது. எனவே பண்பாட்டுத் தளத்தில் அரசு குறுக்கிடுவது என்பதை நாம் தவறாகக் கருதிவிட முடியாது.

      ஆண்டைக்கணக்கிடுவது பற்றிய சிக்கல் நீண்டநெடுங்காலமாகவே இந்தியாவில் இருந்து வந்துள்ளது. பஞ்சபாண்டவர்கள் வனவாசம் முடிந்து திரும்பி வந்தபோது நீங்கள் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட 13 ஆண்டுகளைத்தான் கழித்திருக்கிறீர்கள். சூரியனை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் உங்கள் வனவாசம் முடியவில்லை. எனவே திரும்பிப் போங்கள் என்று துரியோதனன் சொல்ல, அங்கிருந்த பீஷ்மரோ அவனை சமாதானப்படுத்தி சூரியனை அடிப்படையாகக் கொண்டு பார்த்தாலும் 13 ஆண்டுகள் முடிந்துவிட்டது. துரியோதனன் சொல்கிற காலக்கணக்கு தவறானது என்று வாதிட்டதாகவும் மகாபாரதம் கூறுகிறது.

      தற்போது பின்பற்றப்படடு வருகிற காலமுறையும்கூட பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுத்தான் வந்துள்ளது. ஆண்டைக் கணக்கிடுவதற்கு தென்னாசிய நாடுகளில் இருவிதமான முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். சூரியனை அடிப்படையாகக் கொண்டது ஒன்று. மற்றது சந்திரனை அடிப்படையாகக் கொண்டது. சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக கணக்கிட்டு வந்த இதுவரையிலான காலக்கணக்கு சூரியன் மற்றும் சந்திரன் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாகும். புத்தாண்டு துவக்கமும், மாதங்களின் ஆரம்பமும் சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டாலும், இப்போது பயன்படுத்தப்படும் தமிழ் மாதங்களின் பெயர்கள் சந்திரனை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும். ஒரு மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறதோ அதுவே அந்த மாதத்தின் பெயராக சூட்டப்பட்டிருக்கிறது. சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு இந்தியாவின் காலக்கணக்கை நிர்ணயிப்பதற்கு 'காலண்டர் சீர்திருத்த கமிட்டி' என ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அது அளித்த பரிந்துரைகள் 1957ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி நடைமுறைக்கு வந்தன. சூரியன், சந்திரன் இரண்டையும் அடிப்படையாகக் கொண்ட காலக்கணக்கை அந்தக் கமிட்டி ஏற்றுக்கொண்டது மட்டுமின்றி உலகின் பெரும்பாலான பகுதிகளில் நடைமுறையில் உள்ள கிரிகோரியன் காலண்டரின் அடிப்படையில் லீப் வருடம் என்ற கணக்கையும் உள்வாங்கிக் கொண்டது.

      ''தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்'' என்று பாடிய பாரதிதாசன் அதற்கு சமஸ்கிருத எதிர்ப்பைத்தான் அடிப்படையாக முன்வைத்திருந்தார். இங்கு நடைமுறையில் உள்ள அறுபது ஆண்டுகளைக் கொண்ட தமிழ் ஆண்டுமுறை ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதே அவருடைய குற்றச்சாட்டு. தற்போது நடைமுறையில் இருக்--கும் அறுபது ஆண்டுகளைக் கொண்ட தமிழ் ஆண்டுமுறை என்பது தொடர்ச்சியற்றதாக சுழற்சி அடிப்படையில் அமைந்திருப்பது பலவித குழப்பங்களை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி புத்தாண்டு தொடர்பான புராணக்கதைகளும் ஏற்கும்படியாக இல்லை என்பது தமிழறிஞர்களின் வாதம். 'சமஸ்கிருத காலக்கணக்கை நிராகரித்து தனித்துவம் கொண்ட தமிழ் முறையை உருவாக்க எண்ணியவர்கள் சங்ககாலத்தில் எந்தமுறை பின்பற்றப்பட்டது என்பதை ஆராய்ந்து அதன் அடிப்படையில் ஆண்டுமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்கவில்லை. தொல்காப்பியத்துக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியரின் கூற்றுப்படிப் பார்த்தால் தமிழ் ஆண்டு ஆவணியில் தொடங்கி ஆடியில் முடிவதாகவே தெரியவருகிறது. ஆனால், தமிழறிஞர்களோ திருவள்ளுவர் பிறந்ததாகக் கூறப்படும் நாளையும், ஆண்டையும் வைத்து காலக்கணக்கை முடிவு செய்யவேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார்கள். இதுவும்கூட ஐயம் திரிபற மெய்ப்பிக்கப்பட்ட ஒரு கணக்கு அல்ல' என்பது தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக ஏற்க முடியாது என்பவர்கள் முன்வைக்கும் வாதமாக இருக்கிறது.

      தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்திருப்பது ஒரு கருத்தியல் நடவடிக்கையாகும். திராவிட இயக்கத்தின் மிக முக்கியமான பங்களிப்பே இத்தகைய கருத்தியல் நடவடிக்கைகள்தான். ஆட்சி, அதிகாரம் என்பவற்றைக் கைப்பற்றி விட்டாலே எல்லாம் மாறிவிடும் என்பதே பொதுவான புரிதலாக இருந்த சூழலில் கருத்தியல் மேலாதிக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என்ற உண்மையை திராவிட இயக்கம்தான் சரியாகப் புரிந்துகொண்டிருந்தது. அதனால்தான் பண்பாட்டுத் தளத்தில் அது கூடுதலாக கவனத்தை குவித்தது. தமிழ் மொழியில் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் முதற்கொண்டு இப்போது தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பு வரை அந்த நோக்கில் செய்யப்பட்டவைதான். அரசு என்ற கருவியைப் பயன்படுத்தி தமிழ் சமூகத்தில் மதச்சார்பற்ற தமிழ்க் கருத்தியல் மேலாதிக்கத்தை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து கலைஞர் நடவடிக்கை எடுத்து வருகிறார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நடவடிக்கைகளை வரவேற்க வேண்டியது தமிழரின் கடமை.

      தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளில் துவங்குகிறது. இன்று அதன் முக்கியத்துவம் நமக்கு விளங்காமல் இருக்கலாம். ஆனால் எதிர்காலம் அதை நாளைய தலைமுறையினருக்கு உணர்த்தும்.

நன்றி : ூனியர் விகடன், ௧௨.௦௧.2009

Monday, January 3, 2011

உண்மை அறியும் சோதனைகள் தடை செய்யப்பட வேண்டும்




7-5-2010
காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்
திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தான் பொறுப்பு வகிக்கின்ற உள்ளாட்சித் துறையிலும், அதுபோல தொழில் துறையிலும், எங்களைப் போன்ற உறுப்பினர்கள் எழுப்பிய நியாயமான கோரிக்கைகளையெல்லாம் ஏற்று, உடனுக்குடன்அதற்கான அறிவிப்புகளை வெளியிட்ட மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள், இன்றைக்கு இந்தக் காவல் துறை மானியத்திற்குப் பதிலளிக்க இருக்கின்ற இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, முதலிலே சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகின்றேன்.
டாஸ்மாக்கில் பணிபுரிகின்ற ஊழியர்கள், பல ஊழியர்கள் நல்ல கல்வித் தகுதி பெற்றவர்களாக இருக்கின்றார்கள்.  அவர்களுடைய ஊதியம் மிக, மிகக் குறைவாக இருக்கிறது. அவர்களுடைய பணியை நிரந்தரம் செய்து, அவர்களுடைய கல்வித் தகுதிக்கேற்ப வேறு பணிகளுக்குச் செல்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.
தீயணைப்புத் துறையிலே அனுமதி பெறுகிறபோது, சான்றிதழ் பெறுகிறபோது, லைசென்ஸ் பெறுகிறபோது, தற்போது இருக்கின்ற நடைமுறைகள் மிகவும் சிக்கலானவையாக இருக்கின்றன. அவற்றை எளிமையாக்கி, வெளிப்படையான தன்மையோடு மாற்றியமைத்து, குறிப்பாக கணினிமூலம் விண்ணப்பித்து, அனுமதி பெறக்கூடிய வசதிகள் செய்யப்பட்டால், அதிலே முறைகேடுகள் நிகழாமல் தடுக்க முடியும். எனவே, அத்தகைய முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று நான் வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன்.  
இன்றைக்கு நம்முடைய காவல் துறையிலே எந்த ஒரு பதவியிலே நியமனம் பெற்றாலும் அவர் பணி ஓய்வு பெறுகின்ற இடைப்பட்ட காலத்திலே ஏறத்தாழ, 4, 5  பதவி உயர்வுகளைப் பெறுகின்ற வாய்ப்பு இருக்கின்றது.  ஆனால் உதவி ஆய்வாளர்களாக நேரடியாக நியமனம் பெற்றவர்கள் இன்றைக்கு வேறு பதவி உயர்வுகளைப் பெற முடியாத நிலையிலே இருக்கின்றார்கள்.  1987 ஆம் ஆண்டிலே உதவி ஆய்வாளர்களாக நியமனம் பெற்றவர்கள், கடந்த 23 ஆண்டுகளில் வெறும் இன்ஸ்பெக்டர்களாக மட்டும்தான் பதவி உயர்வு பெற்றிருக்கின்றார்கள். அவர்களில் பெரும்பாலோர் D.S.P-க்களுடைய  ஊதியத்தைப் பெற்றாலும், அவர்களுடைய பதவி என்பது இன்ஸ்பெக்டர்களாகவே இருக்கின்றது.  எனவே, அவர்களை எல்லாம் D.S.P.-க்களாக பதவி உயர்வு செய்தால்  அரசுக்கு எந்தவிதச் செலவும் கிடையாது, ஒரு ரூபாய் கூட அதில் நிதி இழப்பு கிடையாது.  எனவே, அவர்களுக்கு, குறிப்பாக, பத்தாண்டுகளாக இன்ஸ்பெக்டர்களாக இருப்பவர்களை D.S.P-களாகப் பதவி உயர்வு செய்து அறிவிக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன். 
பிற்பகல் 1-50
இன்றைக்கு நம்முடைய அரசு சமூக நீதிப் பிரிவு என்று காவல் துறையிலே ஒன்றை உருவாக்கி, மிகச் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.  தமிழகத்திலே 174 கிராமங்கள் வன்கொடுமைகள் நடைப்பெறக்கூடிய ஆபத்துள்ள கிராமங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதென்று நம்முடைய கொள்கை விளக்கக் குறிப்பிலே கூறப்பட்டுள்ளது.  இந்தச் சமூகப் பிணக்குகளைத் தீர்க்க வேண்டுமென்கின்ற உயரிய நோக்கத்தோடுதான் நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள், சமூகச் சீர்திருத்தக் குழு என ஒன்றை அறிவித்தார்கள்.  அதிலே பல உறுப்பினர்கள், நான்கூட அதிலே உறுப்பினராக இருக்கின்றேன்.  ஆனால், அந்தக் குழு இப்பொழுது செயல்படமால் இருக்கின்றது. அந்தக் குழுவிற்கு செயல்படக்கூடிய தலைவர் ஒருவரை நியமித்து, இந்த 174 கிராமங்களிலும் தனிக் கவனம் செலுத்தி, அங்கே இருக்கின்ற சமூகப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். 
தேர்தல் வருவதற்கு ஒரு ஆண்டே இருக்கின்ற நிலையிலே, சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தி, அதிலே அரசியல் இலாபம் பெற சில சக்திகள் முயற்சிக்கலாம்.  அத்தகைய நிலைமைக்கு இடம் கொடுக்காமல், நாம் இத்தகைய பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். 
குறிப்பாக, அரசியல் தலைவர்களுக்கு நாம் இன்னும் கூடுதலான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.  அண்மையிலே தஞ்சை அருகிலே ஒரு கிராமத்தில் எங்களுடைய தலைவருடைய வாகனம் தாக்கப்பட்டது.  ஆகவே, அவருக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று சொல்லி மாண்புமிகு துணை முதல்வர் அவர்களிடத்திலே நேரடியாக ஒரு மனு ஒன்றை அளித்திருக்கின்றேன்.  எனவே, எங்களுடைய தலைவருக்குக் கூடுதலான பாதுகாப்பு அளிக்க வேண்டுமென நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
இன்றைக்கு மத்திய அளவிலே தொழிற்சாலைப் பாதுகாப்புப் படை இருக்கிறது.  ஆனால், மாநில அளவிலே அத்தகைய படை என்று  எதுவுமில்லை.  நம்முடைய மாநிலம் தொழில்மயமாகி வருகிறது.  தொழில்மயத்திலே, இந்தியாவிலேயே முன்னிலை வகிக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறது.  எனவே, இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, State Industrial Security Force   என்று தனியாக ஒரு படையை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.  அத்தகைய படையை உருவாக்கி, தொழிற்சாலைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
அதைப்போல, நம்முடைய மாநிலம் என்பது பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு ஆளான ஒரு மாநிலமாகவும் இருக்கிறது. நீண்ட கடற்கரையைக் கொண்ட ஒரு மாநிலமாகவும் இருக்கிறது.  இத்தகைய நிலைகளையெல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்றுதான் தேசிய அளவிலே தேசியப் பாதுகாப்புக் குழு என்று ஒன்றை உருவாக்கி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற பதவியும் உருவாக்கப்பட்டு, இன்றைக்கு அத்தகைய பிரச்சினைகள் கையாளப்படுகின்றன. அதேபோல  மாநில அளவிலும் பாதுகாப்புக் குழு ஒன்றை உருவாக்கி, அதாவது Security Advisory Board என்று ஒன்றை உருவாக்கி, State Security Advisor என்ற பதவியை உருவாக்கி, இத்தகைய பயங்கரவாத அச்சுறுத்தலை எவ்வாறு கையாளலாம் என்பதனை நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
காவலர்களின் எண்ணிக்கை அண்மையில் நடைபெற்ற பிரதமர் தலைமையிலான மாநாட்டிலேகூட இந்தக் காவலர்களுடைய பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும், அவர்களுடைய எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டுமென்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களே எடுத்துச் சொல்லியிருந்தார்கள்.  தமிழகத்தில் இருக்கக்கூடிய காவலர்களுடைய எண்ணிக்கையைப் பார்த்தால், 1,05,000 பேர்கள்தான் இருக்கிறார்கள் என்று நம்முடைய அறிக்கையிலே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதிலும் குறிப்பாக, மாநகரங்கள், இன்றைக்கு மும்பையிலே இருக்கின்ற காவலர்களுடைய எண்ணிக்கை 43,242; டெல்லியில் இருக்கின்ற காவலர்களுடைய எண்ணிக்கை 25,345; கொல்கத்தாவில் 25,877 காவலர்கள் இருக்கிறார்கள்.  ஆனால், சென்னையிலே 13,953 காவலர்கள்தான் இருக்கின்றார்கள்.  அதிலும் ஏறத்தாழ 2,020 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.  ஆக, இங்கே கூடுதலாகக் காவலர்களை நியமிக்க வேண்டும்.
அப்படி நியமிக்கப்படும்போது, அப்படி நியமிக்கப்படுகின்ற காவலர்கள் எல்லாம் Armed Reserve Police–-ல் வைக்கப்பட்டு, பிறகுதான் காவல் நிலையங்களுக்கு  நியமனம் பண்ணப்படுகிறார்கள்.  இந்த முறை மாற்றப்பட வேண்டும்.  பயிற்சி முடிந்தவுடன், அவர்களை நேரடியாக காவலர்களாக அனுப்பினால்தான், அவர்கள் பெற்ற பயிற்சியை முழுமையாகப் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும்.  எனவே, காவலர்களை Armed Reserve Police லே முதலிலே வைத்து, அதன்பிறகு 
காவல் நிலையங்களுக்கு
அனுப்புகிற முறையை மாற்ற வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன். 

இரயில்வே பாதுகாப்புப் படையைப் பொறுத்தவரையில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு பேர்கள் நியமிக்கப்பட்டார்களோ, அதே அளவு எண்ணிக்கையில்தான் இன்றும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.  இன்றைக்கு இரயில்வே துறை எவ்வளவோ வளர்ச்சியைப் பெற்றுவிட்டது. மின்சார இரயில்வந்து விட்டது. மெட்ரோ இரயில் வரப் போகிறது.  ஆனாலும்கூட, இரயில்வே பாதுகாப்புப் பணியில் இருக்கக்கூடிய காவலர்களுடைய எண்ணிக்கை அதே அளவாகத்தான் இந்த 25 ஆண்டுகளாக இருக்கின்றது.  எனவே, அதிலும் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டுமென்று நான் வலியுறுத்துகின்றேன்.

அதுபோல பயங்கரவாத எதிர்ப்புக் குழு என்று ஒன்றை மாநில அளவிலே உருவாக்க வேண்டுமென்று அண்மையிலே மத்திய அரசிலே ஒரு யோசனை கூறப்பட்டிருக்கிறது. அதற்காக  Anti–terrorist Squad  ஒன்று மாநில அளவிலே உருவாக்க வேண்டும்.  அதற்கான நிதியை  மத்திய அரசு கொடுக்குமென்று சொல்லப்பட்டது.  நம்முடைய மாநிலத்தைப் பொறுத்தவரையில் 100 கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் என்றெல்லாம் அறிவித்தார்கள்.  ஆனால், இதுவரையில் ஒரு ரூபாய்கூட மத்திய அரசிலிருந்து மாநிலத்திற்கு வந்ததாகத் தெரியவில்லை.  எனவே, மாநில அளவில் அந்த Anti–terrorist Squad-ஐ  உருவாக்குவதற்கான நிதியை நேரடியாக மத்திய உள் துறை அமைச்சரிடத்திலே பேசி, அந்த 100 கோடி ரூபாயை மாநிலத்திற்குப் பெற வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன்.
இன்றைக்கு காவல் துறையினர், ஏராளமான குடும்ப உறவுகள் தொடர்பான வழக்குகளை, புகார்களைக் கையாள வேண்டிய ஒரு நிலையிலே இருக்கின்றார்கள்.   அப்படி வழக்குகளைப் பரிசீலிக்கும்போது அந்தப் புகார்களைச் சொல்பவர்கள் அந்த வழக்குகளில் ஈடுபட்டிருக்கின்றவர்களுக்கு கவுன்சலிங் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.  அத்தகைய 
கவுன்சலிங் 
செய்வதற்குத் தகுதி பெற்றவர்கள் இன்றைக்கு நம்முடைய காவல் துறையில் இருக்கிறார்களா என்றால், இல்லை.  இதற்கான படிப்பு நம்முடைய பல்கலைக்கழகங்களிலோ, கல்லூரிகளிலோ கிடையாது.  இன்றைக்கு இந்திய அளவிலே, பெங்களுரூவிலே இருக்கிற NIMHANS லேதான் இதற்கான ஒரு படிப்பு இருக்கிறது, 

ஆக, இந்த 
கவுன்சலிங்  இ
ன்றைக்கு மிக அதிக அளவிலே தேவைப்படுகிறது என்பதனால், நம்முடைய பல்கலைக்கழகங்களிலே இதற்கான படிப்பை உருவாக்க வேண்டும். இத்தகைய பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 

கவுன்சலிங்
குக்கென்று ஒரு தனிப் பிரிவை உருவாக்கி, அதற்கான நபர்களை நியமித்து, இந்தக் குடும்ப உறவுகள் தொடர்பான புகார்களைக் கையாள்வதற்கு நாம் தனிக் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

பிற்பகல் 1-55

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அடுத்து திரு. ம. இராஜ்குமார்.  (குறுக்கீடு)  திரு. ரவிக்குமார், சீக்கிரம் பேசி முடியுங்கள்.
திரு. து. ரவிக்குமார்: அண்மையிலே உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.  உண்மை அறியும் சோதனைகள் தடை செய்யப்பட வேண்டுமென்று சொல்லியிருக்கிறது.   Brain Mapping  போன்ற அந்த முறைகளைப் பயன்படுத்திப் பெறப்படுகின்ற கருத்துகளெல்லாம் எந்த வழக்கிலும் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாது, அது ஒரு மனிதனுடைய அடிப்படை உரிமைக்கே எதிரானது என்று அண்மையிலே மிகச் சிறந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.  அந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நம்முடைய காவல் துறை ஆணையாக வெளியிட வேண்டும்.  இத்தகைய சட்ட விரோதமான முறைகளை நம்முடைய காவல் துறை கையாளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் இதற்கான சட்டம் என்பதை உருவாக்க வேண்டுமென்று சொன்ன உச்ச நீதிமன்றத்தினுடைய ஆணைக்கேற்ப-நாம் ஒரு மசோதாவை இங்கே சட்டப் பேரவையிலே அறிமுகப்படுத்தினோம்.  அந்த மசோதா இப்போது செலக்ட் கமிட்டியினுடைய பரிசீலனையில் இருக்கிறது.  அந்த மசோதா சட்டமாக்கப்படுகின்ற நேரத்திலே குறிப்பாக உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிற அந்த redressal-அதற்கான ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும்.  காவல் துறையின்மீது சொல்லப்படுகிற புகார்களை விசாரிப்பதற்கென்று தனி அமைப்பை உருவாக்க வேண்டுமென்பதுதான் உச்ச நீதிமன்றத்தினுடைய அறிவுறுத்தலில் மிக முக்கியமான அம்சம்.  அது இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதாவில் இல்லை.  அந்த மசோதாவிலே அதையும் இடம் பெற வைக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். 
மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. து. ரவிக்குமார், அது ஆய்வுக் குழுவில் இருக்கிறது, அதைப் பற்றிப் பேசாதீர்கள்.  உரையை முடியுங்கள்.  இன்னும் இரண்டு உறுப்பினர்கள் பேச வேண்டியிருக்கிறது.
திரு. து. ரவிக்குமார்: குறிப்பாக நம்முடைய மாநிலத்தினுடைய சட்டம்-ஒழுங்கு நிலைமை இப்போது மிகச் சிறப்பாக இருந்து கொண்டிருக்கிறது.  இதை மேலும் சிறப்பாக வைக்க வேண்டுமென்று சொன்னால், நம்முடைய உளவுத் துறை இன்னும் கடுமையாக, நல்ல முறையிலே சீர்படுத்தப்பட வேண்டும், நல்ல முறையிலே கட்டமைக்கப்பட வேண்டும்.  எனவே, உளவுத் துறைக்கென்று பயிற்சி பெற்ற நல்ல காவலர்கள் வேண்டுமென்கிற அந்த நிலையை எதிர்கொள்வதற்கு உளவுத் துறைக்கு நேரடியாக நியமனம் செய்கின்ற, பணி அமர்த்தம் செய்கின்ற முறையை நம்முடைய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டு, வாய்ப்புக்கு நன்றி சொல்லி, அமர்கிறேன்.  வணக்கம்.


ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மழலையர் பள்ளிகள்

நிதி உதவி


*699-திரு. து. ரவிக்குமார்:
மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா-
ஆதிதிராவிட மக்கள் மழலையர் பள்ளிகளைத் தொடங்கி நடத்துவதற்கு, தாட்கோ மூலமாக நிதியுதவி வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

மாண்புமிகு திருமதி ஆ. தமிழரசி, ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
 சிறப்பு நிதியுதவியின் வழிகாட்டுதலின்படி மழலையர் பள்ளிகள் துவக்கி நடத்த தாட்கோமூலம் நிதியுதவி செய்ய வழிவகை இல்லை.

திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டினுடைய கல்வி கற்றோர் விகிதம், 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 73.45 விழுக்காடு. இதிலே தாழ்த்தப்பட்ட பழங்குடியினருடைய கல்வியறிவு விகிதம் 63 விழுக்காடுதான் இருக்கிறது.  அதிலும் குறிப்பாக, அந்தச் சமூகத்தைச் சார்ந்த பெண்களை எடுத்துக்கொண்டால் பொதுவான கல்வியறிவு விகிதத்திற்கும், அதற்கும் 20 விழுக்காடு வேறுபாடு இருக்கிறது.  இந்தக் குறைகளைப் போக்க வேண்டும் என்பதற்காக சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழே, ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்த குழந்தைகளுக்கு, குறிப்பாக  Pre–School , அதாவது,  பள்ளிகளிலே சேர்வதற்கு முன்னாலே மழலையர் பள்ளியிலே படிக்கின்ற நிலையிலே இருக்கின்ற குழந்தைகளுக்குச் சிறப்புக் கவனம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கென்று திட்டங்களை வகுக்க வேண்டும் என்று வழிகாட்டுதல் தரப்பட்டு, கடந்த 2003 ஆம் ஆண்டிலே 5,000 நர்சரி பள்ளிகள் அப்போது அங்கன்வாடிகளாக இருந்தவை, நர்சரி பள்ளிகளாக உயர்த்தப்பட்டன. இப்பொழுது தமிழ்நாட்டிலே சுமார் 31,000 மழலையர் பள்ளிகள் இருக்கின்றன. அதிலே  ஏழு இலட்சம் குழந்தைகள் படிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையிலே இந்த ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள், சரியான கல்வி வசதி இல்லாமல் சிரமப்படுகின்ற இந்த நேரத்திலே, தாட்கோமூலமாகக் கொடுக்கப்படுகின்ற கடன் வசதிகளிலே, இப்படியான பள்ளிகளைத் துவக்கி நடத்துவதற்கு, கடன் வசதி தந்தால் இந்தக் கல்வியிலே இருக்கின்ற ஏற்றத் தாழ்வைக்...

மாண்புமிகு பேரவைத் தலைவர்: கேள்வியை மாத்திரம் கேளுங்கள்.

திரு. து. ரவிக்குமார்: குறைப்பதற்கு வசதியாக இருக்கும். எனவே, இதை அரசு பரிசீலித்து, இனியாவது இதற்காக நிதி உதவி செய்யுமா என்று உங்கள்மூலமாக அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

மாண்புமிகு திருமதி ஆ. தமிழரசி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,  ஆதி திராவிடர்களுக்கு துவக்கப் பள்ளி 759-ம், பழங்குடி மாணவர்களுக்குத் துவக்கப் பள்ளி 200-ம்  ஆக மொத்தம் 959 பள்ளிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.  தாட்கோமூலமாக மழலையர் பள்ளிகள் நடத்துவதற்கு வாய்ப்புகள் ஏதும் இல்லை.

கிளை நூலகங்களிலே Reference books

23-8-2006
வினா வரிசை எண் 76-க்கான துணை வினா


திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில் இருக்கின்ற கிளை நூலகங்களிலே, சுமார் 100 ரூபாய்க்கு அதிகமான விலையுள்ள புத்தகங்களை, ‘‘Reference    books ’ என்று பட்டியலிட்டு,  அவற்றை எடுத்துச் சென்று படிப்பதற்கு அனுமதிக்காத நிலை இருக்கிறது.  இன்றைக்கு 100 பக்க அளவிலான புத்தகம்கூட,  100 ரூபாய் விலை என்று வந்துவிட்ட காரணத்தினாலே, அதைத் தளர்த்தி, அந்தப் புத்தகங்களின் விலை, அங்கே ஒரு அம்சமாக இருந்தால், அந்த விலையை உயர்த்தி, சாதாரண புத்தகத்தைக்கூட எடுத்துச் சென்று படிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா என்று தங்கள்மூலம் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த Reference books--ஐப் பொறுத்தமட்டிலே, விலை என்பதைவிட, அதிலே இருக்கக்கூடிய விஷயங்கள், அந்தப் புத்தகத்தினுடைய பழமையான தன்மை, அந்தப் புத்தகம் இப்போது அச்சில் இருக்கிறதா என்று, பல்வேறு நிலைமைகளை நாம் கருத்திலே கொள்ளவேண்டியிருக்கிறது. எனவே, விலையைப் பொறுத்தமட்டிலே, அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாமல்,  மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய கோரிக்கையை அரசு நிச்சயமாகப் பரிசீலிக்கும்.

" யாராவது பெண்கள் பத்திரிக்கை நடத்துறாங்களா ? " அசோகமித்திரன்

எழுத்தாளர் திலீப்குமாருக்கு ' விளக்கு ' விருது வழங்கும் விழா ௦  02.01.2011 ஞாயிறன்று  சென்னை தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடத்தில் நடைபெற்றது. சுமார் ஐம்பது பேர் கலந்துகொண்டனர். ' வெளி ' ரங்கராஜன் , அசோகமித்திரன் , சிபிச்செல்வன் , சங்கரராமசுப்ரமணியன் உள்ளிட்ட சிலர் வாழ்த்திப் பேசினர். திலீப்குமார் ஏற்புரை ஆற்றினார். அசோகமித்திரனின் உரையை நான் எனது மொபைலில் பதிவுசெய்தேன். ஆனால் அதைப் போட்டுக்கேட்டபோது விமலாதித்த மாமல்லனின் வெடிச்சிரிப்பு மட்டுமே கேட்டது. பாவம் அசோகா மித்திரன். அவரது உடல்வாகு போலவே குரலும் மெலிந்திருக்கும். மாமல்லன் பெயருக்கேற்ப நேரே களத்தில் இறங்கத் தயாராக இருப்பவர் போல திடகாத்திரமாக இருக்கிறார். அவர் சிரித்தது ' கஜல் பாடகர்கள் பாடலின் வரிகளைச்  சொல்வதற்குமுன்பே எதிரில் இருக்கும் ரசிகர்கள் வாவ் வாவ் என வியந்து பாராட்டுவது போல இருந்தது என திலீப்குமார் சொன்னது பொருத்தமான விமர்சனம். அசோகமித்திரன் ஒரு கேள்வி எழுப்பினார் : " சில பையன்கள் என்னிடம் வந்து பத்திரிக்கை நடத்துவதாகச் சொன்னால் எனக்கு நிஜமாவே கவலையா இருக்கும். யாராவது பெண்கள்   பத்திரிக்கை நடத்துறாங்களா  ? சில விமன் போயட்ஸ் நல்லா வசதியா இருக்காங்க . கார்லாம் வச்சிக்கிட்டு. வெளி நாடுகளுக்கு பறந்துகிட்டிருக்காங்க . இங்கே கவிஞர் சங்கர ராம சுப்ரமணியன் இருக்கார். அவரால சிலோனுக்காவது போக முடியுமா ? " அது அவையில் சிரிப்பலைகளை எழுப்பியது. அவர் சிரிப்பு மூட்டுவதற்காக அதைச் சொல்லவில்லை, சீரியசாகத்தான் சொன்னார் என்று நினைக்கிறேன். 

திலீப்குமாருக்கு வாற்பதாயிரம் ரூபாய்க்கான காசோலையை அசோகமித்திரன் வழங்குகிறார் 


தகுதியுரை கொண்ட சான்றிதழை 'வெளி ' ரங்கராஜன் வாசிக்கிறார் 

சான்றிதழை திலீப்குமார் பெற்றுக்கொள்கிறார் 
அசோகமித்திரனின் பாராட்டுரை